பதவி விலகிய சிங்கப்பூரின் பிரதமர்

சிங்கப்பூரின் நீண்ட காலம் பிரதமராக கடமையாற்றிய லீ செய்ன் லோங் பதவி விலகியுள்ளார். 20 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பின்னர் உத்தியோகபூர்வமாக பிரதிப் பிரதமரும், நிதியமைச்சருமான லோரன்ஸ் வொங்கிடம் அதிகாரத்தை புதன்கிழமை (15) இரவு கையளித்தார்.

இயற்கையை சீண்டியது போதும்

(ச.சேகர்)

காலம் மாறிவிட்டது. காலநிலையும் மாறவிட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியுடன், வேகமாக இயங்கும் உலகில், மனிதனின் தேவைகளும், நுகர்வு முறைகளும் மாறுபட்டுள்ளது. இதனால் சூழலுடன் ஒன்றித்து வாழும் வாழக்கை முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சூழலை மாசுபடுத்துவதில் ஆரம்பித்து, இயற்கையை சீண்டுமளவுக்கு மனிதச் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.

“தேயிலையை அழிக்காதே; கோப்பியை பயிரிடாதே”

தேயிலையை அழித்துவிட்டு கோப்பி பயிரிட நடவடிக்கை எடுத்துள்ள களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனியின் நிர்வாகத்துக்கு கீழுள்ள நானு ஓயா உடரதல்ல தோட்ட நிர்வாகத்தின் செயற்பாட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தத்தளிக்கிறது கண்டி

கண்டியில் இன்று மாலை பெய்த கடும் மழை காரணமாக கண்டி புகையிரத நிலையம் மற்றும் கண்டியின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு

ஸ்லோவாக்கியாப் பிரதமர் றொபேர்ட் பிக்கோ மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்படுகின்றார்.

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

(By Maj. Gen. Kamal Gunaratne)

தமிழில் Rajh Selvapathi (முன்னாள் ஐ. நா. சபை உத்தியோகத்தர், கிளிநொச்சி)

(முன்) கதைச்சுருக்கம்

800×800 சதுர மீற்றர் நிலப்பரப்புக்குள் மூன்றுபக்கமும் இராணுவத்தினரால் சூழப்பட்ட நிலையில் தப்பிப்பதற்காக மூர்க்கத்தனமாக முயன்று கொண்டிருந்த பயங்கரவாதிகளின் கடைசி மணித்துளிகளை மீட்டி பார்ப்பது முக்கியமானது என நான் நம்புகின்றேன். முன்பே கூறியது போல் மே 17 விடிகாலை பொழுதில் நந்திகடல் நீரேரியின் மேற்கு கரையோரத்தில் இருந்த முன்னரங்க நிலைகள் மீதுகடற்புலிகளின் 06 தற்கொலை படகுகளின் உதவியுடன் அவர்கள் தாக்குதலை தொடங்கினார்கள். அதில் அவர்கள் வெற்றி பெற்றிருந்தால் முல்லைத்தீவு காடுகளுக்குள் அவர்களால் சென்றிருக்க முடியும். அங்க மறைத்து வைக்கப்பட்டிருந்த உணவு, வெடிபொருட்கள், ஆயுதங்களின் துணையுடன் பல மாதங்கள் தாக்குபிடித்திருக்க முடியும். போரும் தொடர்ந்து கொண்டிருக்கும். எப்படியிருந்தாலும் தைரியமும் தளம்பல் இல்லா போராடும் உத்வேகத்தையும் கொண்ட எமது படையினர் அவர்களின் முயற்சியை நாசமாக்கிவிட்டனர். ஆகையால் அவர்கள் வேறு ஒரு திட்டடம் போட வேண்டி இருந்தது.

கப்பல் சேவை மீண்டும் ​ஆரம்பம்

இந்தியாவின் நாகையில் பகுதியிலிருந்து  இலங்கை காங்கேசன்துறைக்கு கடந்த ஆண்டு (2023) ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி முதல் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ‘செரியாபாணி’ என்ற பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.

ஐ.நாவில் பாலஸ்தீனம்: 153 நாடுகள் ஆதரவு

ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக சேர்க்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக 153 நாடுகள் சனிக்கிழமை (11) வாக்களித்துள்ளன.

ரஷ்யா – உக்ரேன் போருக்குச் சென்ற 17 இலங்கையர்கள் பலி

ரஷ்யா – உக்ரேன் போரில் இராணுவப் படையில் இணைந்துகொண்ட 17 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) ஆள்க்கடத்தல், கடத்தல் மற்றும் கடல்சார் குற்ற விசாரணைப் பிரிவு வெளிப்படுத்தியுள்ளது.

அரச ஊழியர்களுக்கு மீண்டும் சம்பளம் அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி  3 சத வீதமாக உயரும் என எதிர்பார்ப்பதாகவும், அதற்கமைய அரச ஊழியர்கள் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற சர்வதேச தாதியர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்