தோழரின் மறைவு

யாழ்ப்பாணம் இளவாலை பிரதேசத்தில் 1983,84,85,86ம் ஆண்டுகளில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் வேலைத் திட்டங்களில் பிரதான பாத்திரத்தை வகித்த தோழர் ரணிஸ், பின்னர் பிரான்ஸில் புலம் பெயர்ந்து வாழ்ந்த கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எம்மோடு இணைபிரியா தோழனாக செயலாற்றி வந்தார். தெளிவான அரசியல் சமூக சிந்தனையாளனாகவும் தீர்க்கமான செயற்பாட்டாளனாகவும் எம்முடன் எல்லா நெருக்கடியான காலகட்டத்திலும் நம்பிக்கையோடு பங்களித்த தோழன் ரணிஸின் இழப்பு நெஞ்சத்தால் ஏற்க முடியாததாக உள்ளது. இறுதி நித்திரையில் ஆழ்ந்து விட்ட தோழனுக்கு சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்திடுவோம்.

இலங்கை அரசியல் கட்சிகளுக்கு பாஜக அழைப்பு

இந்தியாவில் லோக்சபா தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) பிரதிநிதிகளை அங்கு தேர்தல் நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வை பெற அழைப்பு விடுத்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மோடி ஆதரிக்கும்: பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா தேடப்படும் குற்றவாளியாக பிரகடனம்

இந்தியாவையே உலுக்கிய பாலியல் புகாரில் சிக்கிய, பிரஜ்வல் ரேவண்ணாவை, தேடப்படும் குற்றவாளியாக எஸ்ஐடி பிரகடனப்படுத்தியுள்ளது.

கன மழை: துபாய் விமானங்கள் இரத்து

ஐக்கிய அரபு எமிரேட்டில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததால் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. பாலைவன நகரமான துபாயில் கடந்த மாதம் 14ஆம் திகதி கன மழை கொட்டி தீர்த்தது. 75 ஆண்டுகளில் இல்லாத வகையில் பலத்த மழை பெய்தது. ஒரு ஆண்டில் பெய்யக்கூடிய மழை ஒரே நாளில் பெய்ததால் துபாயில் உள்ள விமான நிலையம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

உரிமைக்குரல்கள் ஒலிக்காது மௌனிக்கும் உழைப்பாளர் தினம்

வருடம் முழுதும், ‘மாடாய் உழைத்து ஓடாய்த் தேயும்’ தொழிலாளர்கள், தங்களுடைய உரிமைகளை வென்றெடுப்பதற்காக, உரத்துக் குரல்கொடுக்கும் தினமான உழைப்பாளர் தினம் (மே 1),  பல கோரிக்கைகளுடன் இன்று(01) உலகளவில் கொண்டாடப்படுகின்றது.

உமாஓயா திட்டத்தினால் 80 மில்லியன் ரூபா சேமிப்பு

 உமாஓயா அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மின்சார சபைக்கு நாளொன்றுக்கு 80 மில்லியன் ரூபா சேமிக்கப்படும் என அதன் திட்டப் பணிப்பாளர் சுதர்ம எலகந்த தெரிவித்துள்ளார்.

கொத்து, ரைஸ் மற்றும் சிற்றுண்டிகளின் விலை குறைப்பு

எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், உணவு வகைகளின் விலைகளை குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

காசா நான்கு தசாப்தங்கள் பின்நோக்கி நகர்வு

இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம் காரணமாக கடந்த நாற்பது வருட காலமாக கல்வி, சுகாதாரம் அடங்கலாக சகல மனித அபிவிருத்தி பிரிவுகளிலும் காசா எல்லைப் பகுதியில் வசித்த மக்கள் பெற்றுக் கொண்ட முன்னேற்றம் இதுவரையில் அவர்களுக்கு இல்லாமல் போயுள்ளதுடன், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மீண்டும் 1980 ஆம் ஆண்டை நோக்கி பின்னடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் அரபு நாடுகளுக்கான வலய பணிப்பாளர் அப்துல்லா அல் தர்தாரி குறிப்பிட்டுள்ளார்.

“ரூ. 1,700 ஐ வழங்க முடியாது”

பெருந்தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாய் வழங்குவது தொடர்பில் புதன்கிழமை (1) வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், தம்மால் நாளாந்த சம்பளமாக ரூ. 1700 ஐ வழங்க முடியாதென பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது.