நெல்சன் மண்டேலா என்ற தலைவன்

(சாகரன்)

கறுப்பின மக்களை பாகுபடுத்திப் பார்க்கும் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தின் அடையாளம் என்றால் அது நெல்சன் மண்டேலாவை குறிக்கும். நூறு வயதை நெருங்கியும் தனது விடாப்பிடியான போராட்ட வாழ்வை தொடர்ந்தவர். உலகில் அதிகம் ஒடுக்கப்படும், பாகுபடுத்திப் பார்க்கப்படும் ஒரு இன அடையாளத்தின் குரலாக ஒலித்துக் கொண்டே இருப்பவர்.தனது இருப்பையும், தனது அடையாளத்தையும் முன்னிறுத்தாது தான் சார்ந்த சமூகத்தின் ஒடுக்கு முறையை முன்னிறுத்தி ஆயுள் தண்டனைக்கு உள்ளாகி கால் நூற்றாண்டிற்கு மேல் சிறை வாழ்விற்குள் உள்ளாக்கப்பட்டவர்.