பிரண்டை தண்டு

எம்மிடம் வேலைபார்க்கும் இருவருக்கு முழங்கால் வலி அதிகமாக இருந்தன ஏதாவது பண்ணுங்க என்றார்கள்……

கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லாமல் இருக்கிறது என்றார்கள் எங்கம்மா ஏர் உழுவும் காலங்களில் கால் வலியை போக்க. பிரண்டையை சிறிது நேரம் மோரில் ஊற வைத்து பிறகு அதில்,மல்லிதலை,தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து தந்த ஞாபகம் அதையே இங்கு செய்தோம் ……பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து(கால்சியம்) தான் எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க கால்சியம் தேவை அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது குறிப்பாக சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும் இதை எனது அனுபவத்தில் உணர்ந்தேன் ……

பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்……

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல்(அ)உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது அரு மருந்து…..

நிறைய குறைபாடுகள் பிரண்டையால் குணமாகும்போது எதற்கு கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் பண்ணனும் யோசிங்க…..

வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் ஏழாயிரத்தில் உள்ள குறிப்பை கவனிக்கவும் உலகிலேயே கடினமான பொருள் வைரம் தானே அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு எனும்போது ……..

இதற்கு மற்றொரு பெயர் “வஜ்ஜிரவல்லி” தேகத்தை வஜ்சிரமாக்கும் என்பதனால் தானோ என்னவோ….
*****பிரண்டை உப்பு*****

பிரண்டைக்கு “வஜ்ஜிரவல்லி” என்ற பெயரும் உண்டு.தேகத்தை வஜ்சிரமாக்கும் (வைரம்) என்பதனால் தானோ என்னவோ போகர் ஏழாயிரத்தில் பிரண்டையினை வஜ்ஜிரம் என்று கூறிபிடப்பட்டதோ என்று கூட என்ன தோன்றுகிறது..

நன்றாக வளர்ந்த (7 வருடம்)முற்றின பிரண்டையை பறித்து கணுக்களை நீக்கி உப்பு சேர்த்து நன்கு ஓடும் ஆற்று நீரில் சுத்தம் செய்து உலர்த்தி எடுத்துச் புடமிட்டு பஸ்பமாக்க வேண்டும். கிடைக்கும் பஸ்பம் எத்தனை லிட்டர் மழை தண்ணீரில் கரைகிறதோ அத்தனை லிட்டர் மழை நீரில் கரைத்து ஒரு ஜாமம் தெளிய வைத்து சுத்தமான வெள்ளை ஆடையில் வடிகட்டி தெளிந்த நீரை பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி வெய்யலில் காயவைக்கவும் நீர் முழுதும் சுண்டி உலர்ந்தபின் படிந்திருக்கும் உப்பினை சேர்த்து வைக்கவும்.இந்த முறை உப்பு செய்வதே சிறந்தது.இதற்கு ஒரு மாத கால அவகாசம் எடுத்துக்கொள்ளும்.இந்த பதிவில் இனைக்கப்பட்டுள்ள படத்தை கவனமாக பார்க்கவும்.காண்பிக்கப்பட்ட உப்பை இன்னும் இரண்டு முறை சுத்தி செய்ய வேண்டும்.

இந்த வகை உப்பே வீரியமானது.இதை தான் சித்தர்கள் ஒரு அரிசி எடை கொடுக்க சொன்னார்களே தவிர எரிந்த பிரண்டை சாம்பலை அல்ல என்பதை மறவாதீர்கள். இது ஒரு வேதியல்.புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் H20 என்பது H2+O= தான் H2O ஆக முடியும். H1+O அல்லது H3+O, H2O ஆக முடியாது.

சரி தலைப்புக்கு வருவோம்..

பிரண்டை சாறு கடினமான வைரத்தின் கார்பன் பனைப்பனையே(Bonding) சிதைக்கும் தன்மை கொண்டபடியால் பிரண்டை உப்பு செய்முறையின் போது எளிதில் விணைபுரியக்கூடிய இரும்பு பித்தளை ஈயம் போன்றவற்றை செய்முறையின் போது தவிர்க்கவும்.

பிள்ளை இல்லேண்ணா பெரண்டைக்கொடியை அடி வயத்திலே கெட்டிக்கிட்டுப்படு என பழமொழி சொல்வதுண்டு.அப்படிப்பட்ட பிள்ளை பேரை கொடுக்கவல்லது இந்த பிரண்டை.

வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என நம் சித்தர்கள் கூறியுள்ளனர்

நீரிழிவுக்கும் மருந்தாகிறது பிரண்டை உப்பு. இன்சுலின் சுரப்பைத் தூண்டுவதால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது. உணவு கட்டுப்பாட்டுடன் பக்குவமாய் பாவிக்க சர்க்கரை நோய் முற்றிலும் குணம் அடையும்.

புற்றுநோய்க்கு கொடுக்கப்படும் மருந்துக்களில் பிரண்டை உப்பை சரியான விகிதத்தில் கலந்து பாவிக்க நல்ல முன்னேற்றம் காணலாம்.

குழந்தைகளுக்கு வரும் வாந்திபேதிக்கு ஒரு கிராம் அளவு பாலில் இந்த உப்பைக் கரைத்து மூன்று வேளை கொடுக்க குழந்தை வாந்தி பேதி குணமாகும். செரியாமை குணமடையும். பெரியவர்களுக்கு 2 -3 கிராம் வடித்த கஞ்சியில், மோரில் கொடுக்கவும்.
இது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம்வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல், இதன் உப்பே சிறந்த குணமுடையது.

பெண்களுக்கு ஏற்படும் அத்தனை உடல் சுகமின்மைக்கு சிறந்தது. உடலை இருக செய்யும். தளர்ந்த சதையை இருக செய்து உடலை கட்டுக்கோப்பாக வைக்க சிறந்த மருந்து இந்த பிரண்டை உப்பு.

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும். பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது அரு அறிய மருந்து.

பிரண்டை உப்பை கடுகளவு எடுத்து நுகர மூக்கில் ரத்தம் வடிவதை உடனே குணப்படுத்தும்.

வாய்ப்புண், வாய் நாற்றம், உதடு, நா வெடிப்பு ஆகியவற்றிக்கு 2 கிராம் வெண்ணெயில் இரு வேளை மூன்று நாள் கொடுக்க கணமாகும்.

தீராத வயிற்றுப்புண், வயிற்று வலி ஆகியவற்றிக்கு இதன் உப்பை 48 – 96 நாள் இரு வேளை சாப்பிட குணமாகும். நவ மூலமும், சீழ்ரத்தம் வருதல், அரிப்பு, கடுப்பு, ஆசனவாயில் எரிச்சல் இருந்தாலும் இந்த உப்பை 3 கிராம் அளவு வேளை கொடுக்க குணமாகும்.

பிரண்டை உப்பை 2 – 3 கிராம் பாலில் கொடுத்துவர இரு திங்களில் உடல் பருமன் குறைந்து விடும். ஊளைச் சதைகளையும் குறைக்கும்.
இந்த உப்பை தென்னங்கள்ளில் கொடுத்துவர ஆஸ்துமா, எலும்புருக்கி, மதுமேகம், நீரிழிவு குணமடையும்.

மூன்று வேளை 2 கிராம் நெய்யில் கொடுக்க சூதகவலி குணமடையும்.

பிரண்டை உப்பை 2 கிராம் அளவு ஜாதிக்காய்த் தூள் 5 கிராமுடன் கலந்து சாப்பிட்டு வர தாது நட்டம் குணமடையும். வீரியம் பெருகும், உடம்பு வன்மை பெரும்.

எலும்பு உதிர்வு (எலும்புகள் மென்மை)
நோயான ஆஸ்ட்ரியோபோரசிஸ்க்கு கைகண்ட மருந்து.

எலும்புகள் சந்திக்கக்கூடிய இணைப்புப் பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால், தேவையற்ற நீர் தேங்கிவிடும். இதன் காரணமாக பலர் முதுகுவலி, கழுத்துவலியால் அவதிப்படுவார்கள். மேலும் இந்த நீர், முதுகுத்தண்டு வழியாக இறங்கி சளியாகி, பசையாக மாறி முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் இறங்கி, இறுகி முறுக்கிக்கொள்ளும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தலையை அசைக்க முடியாமல் அவதிப்படுவார்கள். இந்தப் பாதிப்புகளிலிருந்து விடுபட பிரண்டை உப்பை முறையாக உள்ளுக்குள் எடுக்க சிறந்த பலனை கொடுக்கும்.

குறிப்பு

பிரண்டையை உலர்த்தி தீயிட்டு எரித்து பின் எரித்த சாம்பலை தண்ணீரில் கரைத்து இரும்பு பாத்திரத்தை கொண்டு அடுப்பில் ஏற்றி சுண்ட காய்ச்சி உப்பு சேகரிக்கும் முறை தவறானது)

செய்வன திருந்த செய்…செய்யும் செயலை திருத்தமாக செய்.
நன்றி