”அதிகார வரம்பறிந்து பொறுப்புணர்வுடன் செயற்படுங்கள்” – அனுரகுமார

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் அதிக அதிகாரங்கள் இருப்பதாகக் கூறிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, அனைத்து அமைச்சர்களும் தமது அதிகார வரம்புகளை அறிந்து பொறுப்புணர்வோடு செயற்படுவார்கள் என தான் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். புதிய அமைச்சரவையில் உரையாற்றிய அவர், பெரும்பாலான அமைச்சர்கள் அமைச்சரவைக்கு மட்டுமல்ல, பாராளுமன்றத்திற்கும் புதியவர்கள். அவர்கள் அனைவரும் நேர்மையானவர்கள், ஊழல் செய்யாதவர்கள் என்பதை தாம் நன்கு அறிவதாகவும், மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் தைரியம் அவர்களுக்கு இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.