அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்கப் போவதாகவும் அரசியலில் தொடரப் போவதாகவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். நல்லூர் ஆலய வடக்கு வீதியின் அமைந்துள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் இன்று இடம்பெற்ற தமிழ் மக்களின் தற்போதய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன் கூடிய ஒரு அரசியல் பயணமாக மாற்றமடைய வேண்டிய காலகட்டத்திலுள்ளது. இந்த மாற்றத்தை
ஏற்படுத்தும் நோக்கிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைந்துகொள்வதற்கான வழித்தடம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பிலும் இதில் தமிழ் மக்கள் பேரவையின் வகிபாகம் தொடர்பிலும் சில தீர்மானங்களை மேற்கொள்ளும் மக்கள் ஒன்றுகூடலிலேயே மேற்படி கருத்தை தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரான சி.வி விக்னேஸ்வரன் வெளிப்படுத்தினார். அந்தவகையில், தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயரிலேயே தனது கட்சியை விக்னேஸ்வரன் ஆரம்பித்துள்ளார்.