‘பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சார்பான கூட்டு ஒப்பந்தம் எவ்வாறு அமைய வேண்டும்?’ – பொது வேலைத்திற்கான கலந்துரையாடல்

இடம்: சமூக நலனுக்கான நிறுவனம் (CSC) இல. 30,
                         புகையிரத நிலைய வீதி, ஹட்டன்
திகதி:         2018/09/01
நேரம்:         மு.ப. 10 மணி முதல் பி.ப. 2 மணிவரை
மக்கள் தொழிலாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந் நிகழ்வு பற்றி தங்களின் மேலான ஊடகத்தில் செய்தியை பிரசுரித்தமைக்கு முதலில் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உட்பட பெருந்தோட்ட முறையின் இருப்பு பற்றிய பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ள இந் நிகழ்விற்கு தங்களின் மேலான ஊடகத்தின் சார்பில் ஊடகவியலாளர்களை கலந்துகொள்ள ஏற்பாடு செய்து குறித்த செய்தியை மக்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி
இப்படிக்கு
சட்டத்தரணி இ. தம்பையா
பொதுச் செயலாளர்
தொடர்புகளுக்கு: 071-4302909/071-6275459