அசண்டை வேண்டாம்; முண்டியடித்தால் மீளவும் முடக்கத்துக்கே வழிசமைக்கும். பழ மொழிகளில் பல வழக்கொழிந்துவிட்டன; இன்னும் சில உருமாறிவிட்டன. அதிலொன்றுதான், ‘பந்திக்கு முந்து; படைக்குப் பிந்து’ எனப் பலரும் கூறும் பழமொழியாகும். பந்திக்கு முந்திச் சென்று சாப்பிடவேண்டும்; கடைசியில் சென்றால் சில வகை உணவுகள் தீர்ந்துவிடக்கூடும். ஆனால், படையில் பின்னுக்குச் செல்ல வேண்டும். தவறி முன்னால் சென்றால், ஆபத்து என்பதே பொதுவான அர்த்தமாகும். ஆனால், இந்தப் பழமொழிக்குள் ஆழமான பல அர்த்தங்கள் பொதிந்துள்ளன.