சங்கர் கொலை தொடர்பாக இந்திய நீதிமன்றம் குற்றவாளிகள் ஆறுபேருக்கு மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.பொதுவாகவே சாதி விவகாரங்களில் சட்டம் தனது கடமையைச் செய்வதில்லை.1968 இல் இடம் பெற்ற வெண்மணி படுகொலைகள் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளை நீதிபதி தானே ஒரு போலிக்காரணம் சொல்லி விடுவித்தார்.இதே போல இலங்கையில் மாவிட்டபுரம் ஆலய பிரவேச போராட்டம் தொடர்பான வழ்க்கில் சி.சுந்தரலிங்கத்துக்கு ஒரு நீதிபதி 50& ரூபா அபராதம், வழங்கி நீதித்துறையே கேலிக்கு உரியதாக்கினார்.எனவே இந்த மாதிரியான வழக்குகளில் குற்றவாளிக்கு நீதுமன்றம் காவல் துறை என்பன சாதகமாகவே இருக்கும்.ஆனால் இந்த வழக்கின் தீர்ப்பு அதிசயமான ஒன்று.
இந்த வழக்கின் குற்றவாளிகளை மேன் முறையீட்டின் மூலம் தப்பிக்க வழிபிறக்கலாம்.இந்திய நீதித்துறை அவ்வளவு பலவீனமானது.அது உறுதி செய்யப்பட்டால் இந்த நீதிபதிக்கும் கௌசல்யாவுக்கும் என்ன நடக்கும் என்று சொல்லமுடியாது.சாதிக்காக எவரையும் கொலை செய்வதை கௌரவரமாக கருதும் தேசம் இந்தியா.அதற்கான பலமான வரவேற்பும் அங்கே உண்டு.
சங்கர் கொலை என்பது அறியாமையில் வாழும் சமூகம் அல்லது பெற்றோரால் நிகழ்த்தப்பட்டது.ஆனால் இளவரசன் கொலை அரசியல் கட்சி,அரசியல்கள் சம்பந்தப்பட்டது.இங்கே குற்றவாளிகளை சட்டம் கண்டுகொள்ளவில்லை .
கௌசல்யா தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடியது பாராட்டுக்கு உரியது.ஆனால் அந்தப் பெண்ணின் மன உழைச்சலை எங்களால் புரிந்துகொள்ளமுடியாது.ஒரு புறம் காதலனை பறிகொடுத்த கவலை.அதற்கான பழிவாங்கலாக இப்போது சமாதானமானாலும் நாட்கள் செல்ல தன் தந்தைக்காக கண்ணீர் விடும் நாளும் வரலாம்.
இன்று சில அமைப்புகள் கௌசல்யாவை பகடைக்காயாக பயன்படுத்துகின்றன.அவளின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல் தமது நலன்களை கவனம் செலுத்துகிறார்கள்.வாழ்வை இழந்து உறவுகளை இழந்து நிர்க்கதியாக உள்ள அந்தப் பெண்ணிற்கு மீண்டும் வாழ வழி செய்தால் அதுவே பகுத்தறிவு.அதை விட்டு அவளுக்கு விளம்பரத்தை கொடுத்து அவளின் அறிவை உணர்வுகளை மழுங்கடிப்பது நல்ல விசயம் அல்ல.
அவள் தனது பழைய நினைவுகளில், இருந்து வெளியே வர அவளுக்கு புதுவாழ்வு அவசியம்.பகுத்தறிவுவாதிகள் உதவுவார்களா என்பது சந்தேகமே.
சாதியமைப்பு தகர்கப்பட வேண்டும்.அதற்காக எல்லோரும் போராடவும் மனங்கள் பக்குவபடவும் வேண்டும்.ஆனால் வாழ்க்கை எனறு வரும்போது கொஞ்சம் நிதானம் தேவை.
மாற்றமடையாத இந்த சமூக ஊழல்களில் சாதி மாறி திருமணம் செய்வதை கொஞ்சம் யோசிக்கவேண்டும்.குறிப்பாக பெண்கள் தனியே காதலனை நம்பியே போகிறார்கள்.அந்த காதலன் இல்லாதபோது அவளின் நிலை என்னவாகும்.சொந்தங்களுக்குள்ளேயே திருமணம் செய்து விதவையானால் அந்தப் பெண்ணுக்கு உத்தரவாதமான பாதுகாப்பு இல்லை என்னும்போது சாதி மாறி திருமணம் செய்யும்போது யோசிப்பதே நல்லது.
மனிதாபிமான உணர்வு இல்லாதவர்கள் காட்டும் அன்பு போலியானது.சாதி என்று வரும்போது பெற்ற மகளை மகனை கொல்லத் தூண்டுமானால் அவர்கள் காட்டிய அன்பு போலியானது.இங்கே மகளைவிட சாதி பெரிது என்றால் அந்த பாசம் வெறும் வேசமே.
சங்கரின் கொலைக்கு கௌசல்யாவின் தந்தையைவிட அவரது சொந்தங்களும் சமூகமும் கொடுத்த மன உழைச்சல்களே சங்கரின் கொலைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.அந்த சமூகத்துக்கு எந்த சட்டம்,நீதிமன்றம் தண்டனை வழங்கும்.
இந்த கௌசல்யா இன்னொரு தலித் இளைஞனை திருமணம் செய்து வாழ்ந்து காட்டவேண்டும்.ஆனால் கௌசல்யா போன்ற பெண்களை தலித் இளைஞர்களோ அல்லது வேறு எவரோ திருமணம் செய்ய தயாராக இல்லை.இதுவும் ஒரு வகை தீண்டாமையே.இளம் பெண்ணை விதவையாக வாழா வெட்டியாக சகல சமூகங்களுமே பார்க்கவிரும்புகிறது.அனைத்து சாதிகளும் குற்றவாளிகளாக தெரிகிறது.