கேரள தரவாடு குடும்ப அமைப்பு, வீரர்களும், பார்ப்பனரும் குடும்ப பற்று இல்லாமல், அரச பக்தியோடு வாழ வேண்டும் என்ற ஒரு புரட்டு கருத்தில் உருவாக்கப்பட்டது. அதன் படி, பார்ப்பன நம்பூதிரிகளின் முதல் மகன் மட்டுமே நம்பூதிரி இன பெண்களை மணக்கவேண்டும், மற்ற நம்பூதிரி ஆண்கள் திருமணம் செய்ய கூடாது.
போர் வீரர்களான நாயர்கள், திருமணத்தின் பொது தாங்கள் மணக்க இருக்கும் பெண்ணை திருமணம் ஆகாத நம்பூதிரிகளுக்கு முதலில் மணம் முடித்து பின் தாங்கள் மணந்து எல்லோரும் சேர்ந்து குடும்பம் நடத்தவேண்டும், நாயர் குடும்பத்தில் பிறந்த எந்த குழந்தைக்கும் உண்மையான தகப்பன் யார் என்று யாருக்கும் தெரியாது, இதனால் எந்த ஆணுக்கும் குடும்பத்தின் மீது பெரிய பற்றுதல் இருக்காது என்ற கருத்தை சொல்லி இந்த தரவாடு என்ற அமைப்பில், இந்த நிலையில் வாழ்ந்து வந்தார்கள்.
இதில் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள் யார் என்றால், நம்பூதிரி இன பெண்களே, இவர்களை அந்தர்ஜனம் என்று அழைத்தனர், அதாவது அந்தர் – உள்ளே, ஜனம் – மக்கள், உள்ளே வாழும் மக்கள் என்று அழைக்கப்பட்டனர். ஒருபுறம், நாயர் இன பெண்கள், ஒவ்வொருவரும், நம்பூதிரி கணவர்கள், நாயர் கணவன் என குறைந்தது 6-18 ஆண்களுடன் குடும்பம் நடத்தும் இழிவுக்கு தள்ளப்பட்டார் என்றால், நம்பூதிரி பெண்களுக்கு திருமணம் என்பதே பகல் கனவு.
நம்பூதிரிகளில் முதல் மகன் மட்டுமே திருமணம் செய்யலாம், நம்பூதிரி பெண்கள் நம்பூதிரிகளையே திருமணம் செய்ய வேண்டும். இதனால் ஒரு இயற்கை சமநிலை அற்ற சூழல் உருவாகியது, ஒரு ஊரில் 20 நம்பூதிரி குடும்பம் இருப்பதாக கொண்டால், ஒவ்வொரு குடும்பத்திலும் 5 ஆண்கள் 5 பெண்கள் என்று வைத்து கொண்டால், முதல் மகனாக பிறந்த நம்பூதிரிகள் மொத்தம் 20 பேர் இருப்பார்கள், 80 ஆண்கள் மற்ற நாயர் பெண்களுடன் உல்லாசமாக இருப்பார்கள். ஆனால் அங்கு பிறந்த 100 அந்தர்ஜன பெண்கள் அனைவரும் இந்த 20 முதலில் பிறந்த ஆண்களை மட்டுமே திருமணம் செய்ய வேண்டும், அதாவது முதல் மகனாக பிறந்த நம்பூதிரி ஆண்கள், குறைந்தது 5 அந்தர்ஜன பெண்களையும், சில 10 நாயர் பெண்களையும் வைத்து கொண்டு அரசன் செலவில் ஏகபோகமாக வாழ்ந்து இருக்கின்றனர். இவையில்லாமல் நம்பூதிரி பெண்கள் திருமணத்துக்கு வரதட்சணையும் கொடுக்கவேண்டும்.
இதன் காரணமாக பல அந்தர்ஜனங்கள் 8 -10 வயதில் 65 வயது நம்பூதிரிகளை மணக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இவர்கள் திருமணத்துக்கு முன்னும் சரி பின்னும் சரி பெயருக்கு ஏற்றாற்போல அந்தரிலேயே (உள்ளேயே) வாழவேண்டும் வெளிய வரக்கூடாது, தங்க நகைகள் அணியக்கூடாது, வெள்ளி பித்தளை நகைகள் அணியலாம், வெள்ளை நிற உடைகளை மட்டுமே அணியவேண்டும், போட்டு வைத்து கொள்ள கூடாது, தலைமுடியை பின்னிக்கொள்ள கூடாது கிட்டத்தட்ட ஒரு துறவு வாழ்க்கை வாழவேண்டும் கோயிலுக்கு செல்வதானாலும், முன்னே ஒரு நாயர் பெண் அந்தர்ஜனம் வருகிறார் என்று கத்தி கொண்டே செல்ல, பின்னல் தாழம் குடை பிடித்து முகம்தெரியாமல் மறைத்து கொண்டே செல்லவேண்டும். பல அந்தர்ஜனங்கள் திருமண வாழ்வின் கலவி சுகம் என்றால் என்ன வென்றே தெரியாமல் வாழ்ந்து இறந்தனர்.
மொத்தத்தில் சுயநலத்தின் உச்சியில் இந்த நம்பூதிரி பார்ப்பனர்கள் வாழ்ந்துவந்தனர் அந்தர்ஜனங்கள் அடிமைகளை போல அடைத்து வைக்கப்பட்டனர். எத்தனை நாட்கள் அடைத்து வைக்க முடியும்,
இந்த கிழ நம்பூதிரிகள் அசந்த நேரம் பார்த்து தன் நாயர் இன பணிப்பெண்களின் துணையுடன் யாருக்கும் தெரியாமல் இந்த பார்ப்பன பெண்கள் மற்ற நாயர் இன ஆண்களை தங்கள் மனைகளுக்கு ( நம்பூதிரி மணா அல்லது இல்லம் என்று அழைக்கப்படும்) வரவைத்து இஷ்டம் போல உடலுறவு கொண்டனர்,
அந்தர்ஜனங்கள் அப்படி ரகசியமாக நாயர் மற்றும் பிற சாதி ஆண்களுடன் வரைமுறை இன்றி உடலுறவு வைத்து கொண்டாலும், பிடிபட்டால், மிக கொடுமை. ஒரு நம்பூதிரிக்கு தன் அந்தர்ஜனங்களில் யார் மீதாவது சந்தேகம் வந்தால், ஸ்மார்த்த விசாரம் என்ற பெயரில் 6 நிலைகளில் விசாரணை நடக்கும்.
அதில் முதல் நிலை தாசி விசாரம் – வேலைக்காரியை விசாரிப்பது, இங்கு சந்தேகம் உறுதிசெய்யப்பட்டால்,
இரண்டாம் நிலை அஞ்சாம் புரையில் அக்கல் என்ற பேரில் மனையின் பின்புறத்தில் உள்ள தனி அறையில் அவள் அடைக்கப்படுவாள்.
மூன்றாம் நிலை தான் ஸ்மார்த்தன் விசாரம், இப்போது நம்பூதிரி, அரசனிடம் போய் முறையிடுவான், அரசன் 4 விசாரணை அதிகாரிகள், ஒரு பார்ப்பனன், ஒரு ஸ்மார்த்தன்(நீதிபதி) விசாரணைக்கு அனுப்பி வைப்பான்.
பார்ப்பான் மனைவி தப்பு செய்தாலும், கோர்ட்டு தான் அவன் வீட்டுக்கு வரவேண்டும் அவன் போக மாட்டான்.
இந்த மூன்றாம் நிலை விசாரணை பலநாட்களுக்கு நடக்கும், இங்கு அந்தர்ஜன பெண்ணுக்கு உண்மையை ஒப்புக்கொள்ள செய்ய பலவிதமான சித்ரவதைகள் நடக்கும், பிற பெண்களை விட்டு அடிக்க வைப்பது, அவளை பாம்புகள், தேள்கள், எலிகள் நிறைந்த அறையில் அடைத்து வைப்பது, கோரை பாயில் சுற்றி கட்டி மாடிப்படிகளில் உருட்டி விடுவது போன்றவை புருடா புராண தண்டனைகள் போல, அவற்றுள் சில, இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த சித்ரவதைகள் செய்வது எல்லாம் அந்த அந்தர்ஜன பெண்ணின் உறவினர்களே.
இந்த மூன்றாம் நிலை விசாரணை கொடுமைகளில் அந்த பெண் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டால், அதன் பின் அவள் தன் அந்தர்ஜனம் என்ற தகுதியை இழக்கிறாள், அதன் பின் அவள் சாதனம் (உயிர் அற்ற பொருள்) என அழைக்கப்படுகிறாள். இதன் பின் சாதனம் என மாறிய அந்த பெண் ஜாரன்-களின்(அவளோடு உடலுறவு கொண்ட ஆண்கள்) பெயர்களை அங்க அடையாளத்துடன் சொல்ல வேண்டும். உடலுறவின் போது பார்த்த சாதாரணமாக வெளியே தெரியாத பகுதிகளின் அடையாளத்தை ஆண் உறுப்பின் நீளம், அகலம் குறித்தும் சொல்ல வேண்டும்.
இனி நான்காம் விசாரணை, இதை சொரூபம் சொல்லல், என்பார்கள், இந்த நிலையில் சாதனம், பெயர் சொல்லிய ஜாரன்-கள், மன்னனிடம் அழைத்து போவார்கள், ஜாரன் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்றால் குமரி மாவட்டத்தில் (அப்போது குமாரி மாவட்டமும் கேரளாதான்) இருக்கும் சுசீந்திரம் கோயிலில் சத்ய பரீக்க்ஷையில் ஈடுபட வேண்டும் (வேறு ஒன்றும் இல்லை கோயிலில் நான் ஒன்றும் செய்யவில்லை என்று சத்தியம் செய்யவேண்டும்) ஆனால் உடலின் அந்தரங்க பகுதிகளில் உள்ள அடையாளம் சொல்லப்படுவதால் மறுப்பது கடினம்.
அடுத்து ஐந்தாம் நிலை, இதை தேகவிசேதம் என்பர், இதில் சாதனமும், குற்றம் ஒத்துக்கொண்ட ஜாரன்-கள் ஒரு பெரிய பூஜை நடத்தி வீட்டை விட்டு ஊரை விட்டு துரத்தப் படுவார்கள், பெரும்பாலும், அவர்கள் அதன்பின் ஏதேனும் காட்டு பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களோடு கலந்து நம்பூதிரிகளின் தொல்லை இல்லாமல் நிம்மதியாக வாழ்வார்கள். சில சமயம் முஸ்லிம்களிடம் இந்த பெண்கள் அடிமையாக விற்கப்படும் கொடுமையும் உண்டு
கடைசி ஆறாம் நிலை சுத்தபோஜனம் என்று அழைக்கப்படும், விசாரணைக்கு வந்த அதிகாரிகளுக்கு அந்த மனையின் நம்பூதிரி வைக்கும் விருந்து தான் அது.
கேரளாவில், 1918-ல் நடந்த ஸ்மார்த்தவிசாரமே, வரலாற்றில் பதிவு செய்யப்பட கடைசி விசாரணை. அந்த பெண்ணின் பெயர் குறியேடத்து தாத்ரி அந்தர்ஜனம், மிக மிக அழகி என்று சொல்லுவார்கள். இந்த பார்ப்பன நம்பூதிரி பெண் மொத்தத்தில் 65 ஜாரன்-களிடம் தொடர்பு வைத்துக்கொண்டிருந்ததை ஒப்பு கொண்டதோடு இல்லாமல், அவர்கள் அத்தனை பேரின் அங்க அடையாளம், அந்தரங்க உறுப்பின் நீள அகலம் வரை சரியாக சொன்னாளாம். இதில் வேடிக்கை என்ன வென்றால், அந்த விசாரணையை முழுவதுமாக முடிக்காமல் நம்பூதிரிகள் பாதியிலேயே நிருஹத்தி விட்டார்கள், அது மட்டும் இல்லை அதற்கு பின் கேரளாவில் அவர்கள் ஸ்மார்த்தவிசாரமே செய்வதில்லை. ஏனென்றால் அந்த 65ஆவது ஜாரனின் அங்க அடையாளங்கள் அரசனின் அங்க அடையாளம் என்பது தான் காரணம்.
இன்றும் கேரள பெண்கள் தலைமுடியை விரித்து போட்டு மழை இல்லாவிட்டாலும் குடை பிடித்து செல்வது, உயர் சாதி அந்தர்ஜன பெண்ணாக தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் ஒரு முயற்சி தான்
இதுபோல தங்களின் சொந்த சுயநலத்துக்காக மொத்த கேரள மக்களையும், ஒரு நாகரிகமான சமூகம் கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு ஒழுக்கமற்ற வாழ்க்கைக்கு தள்ளிய நம்பூதிரி பார்ப்பனரின் அட்டகாசத்தின் மற்றுமொரு அத்தியாயம் நாளை காண்போம்
“தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்” என்ற எனது நூலின் ஒரு பகுதியே மேலே உள்ள கட்டுரை.
ஐயா சு.ப.வீ அவர்களால், தோழர் மதிமாறன் முன்னிலையில் வெளிடப்பட்டு ஆசிரியர் வீரமணி அவர்களால் பாராட்டப்பட்ட நூல்.
(Krishnavel T S)