அனுசரணை அரசியலின் நிறுவனமயமாக்கல்

அரச கட்டமைப்பில் நிறுவனங்கள், அரசாங்கத்தின் நடத்தைகளைக் கட்டுப்படுத்துதல், விருப்பத் தேர்வுகள், இலக்குகள், உத்திகள் மற்றும் அடையாளங்களை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஒரு தேசிய நிர்வாக அமைப்பை விரிவுபடுத்துவதற்கு முன் அல்லது ஒரே நேரத்தில் அரசியலில் பெருமளவிலான ஒருங்கிணைப்பு நிகழும்போது, அந்த அமைப்பு அனுசரணை அரசியல் மற்றும் அனுசரணை நியமனங்களை அடிப்படையாகக் கொண்டது.

உயரடுக்கிற்கு இடையேயான மோதல்கள், தேசிய அரசியலில் கீழ் வகுப்பினரை பெருமளவில் இணைத்துக் கொள்ளும் அதேநேரம், அரசைக் கட்டியெழுப்பும் பாதைகள் ஆகியவற்றுக்கு இடையே எவ்வளவு முக்கியமான தொடர்புகளை ஏற்படுத்தலாம் என்பதை இலங்கையின் கதை காட்டுகிறது.

இத்தகைய ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கூறுகள் அரசியல் ஆதரவின் நோக்கங்களுக்காக அரச நிறுவனங்களைத் துஷ்பிரயோகம் செய்ய ஆளும் உயரடுக்குகளை ஊக்குவிக்கின்றன.

பொதுவாக, அரசு, பொருளாதாரம் மற்றும் சமூகம் ஆகியவற்றுக்கு இடையே இடைத்தரகர்களாக அரசியல் உயரடுக்குகளை செயல்படுத்துவதில் அரசு நிறுவனங்கள் நேரடிப் பங்கு வகிக்கின்றன.

இலங்கையின் உதாரணம், அரச இயந்திரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிறுவன மாற்றங்களை, பிரிவினைவாத ஆளும் உயரடுக்கின் மேலாதிக்கத்தைக் கட்டியெழுப்பும் திட்டத்தைத் தொடர நிறுவனமயப்படுத்தப்பட்ட அனுசரணை அமைப்புக்கு நிதியளிப்பதுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது அல்லது முழுமையாக இணைந்திருப்பதைக் காட்டுகிறது.

சுதந்திரத்தை நோக்கி, பிரித்தானியர்களால் விதிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு அளவுகோல்கள் தளர்த்தப்பட்டதால், மேல்தட்டு ஆண்கள் புகழ்பெற்ற இலங்கை நிர்வாக சேவையில் பணியமர்வது எளிதாகி விட்டது.

அரசியல் உயரடுக்குகளின் கண்ணோட்டத்தில், கொலனித்துவ காலத்தில் பிரிட்டிஷ் அதிகாரத்துவம் மற்றும் உள்ளூர்சிவில் சேவையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் உள்ளூர் சமூகத்திற்கு அந்நியமானவர்கள்.

கொலனித்துவ ஆட்சியின் போது, அரசு ஊழியர்கள் மேற்கத்திய விழுமியங்களுக்கு சித்தாந்த ரீதியாக அடிபணிய வேண்டும் என்ற தேவையுடன் ‘தகுதியுடையோர்’ என்பது இணைக்கப்பட்டது. கொலனித்துவ சேவையில் அரசு ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஒருங்கிணைந்த அடிப்படையாக இவை இருந்தன.

அரசியல் உயரடுக்கின் மீது இந்த நிர்வாகிகள் கட்டளையிடுவதற்காக, அதிகாரத்துவத்தினர் அதிருப்தி அடைந்தனர்.

குறிப்பாக அரசியல் உயரடுக்குகள் சாதாரண மக்களிடமிருந்து ஒரு ஆணையைப் பெற்றிருந்த நிலையில், இது மேலும் சிக்கலுக்குரியதாயிற்று. அரசியல் உயரடுக்கின் கூற்றுப்படி, உயர்தர வர்க்க, சரளமாக ஆங்கிலம் பேசும் அதிகாரத்துவ உயரடுக்குகள் உள்ளூர் யதார்த்தங்கள் மற்றும் சமூகங்களிலிருந்து விலகி, அவர்களின் பிரச்சினைகளுக்கு உணர்ச்சியற்றவர்களாக இருந்தனர்.

பொதுச் சேவை பிரச்சினைகள் தொடர்பாக அரசியல் உயரடுக்கினரின் ஆலோசனைகளை அரசியல் அதிகாரத்தில் இருந்தோர் விமர்சனமின்றி பின்பற்றவில்லை. 

இது நிர்வாக சேவையின் அதிகாரத்துக்கும் ஆட்சியதிகாரத்துக்கும் இடையிலான கெடுபிடிப்போராக மாறியது.  அரச நிர்வாக சேவையினர் தமது ஆலோசனைகள் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டினர்.

அதேவேளை, இவர்களது நடத்தையானது, அரசு ஊழியர்கள் அதிகாரத்தில் இருக்கும் ஆட்சிக்கு விசுவாசமின்மையாக நடந்து கொள்கிறார்கள் என்ற எண்ணத்தையும் அவர்கள் பற்றிய ஏமாற்றத்தையும் அரசியல் உயரடுக்கிலிருந்தோர் கொண்டிருந்தனர்.  

அதிகாரத்துவ உயரடுக்கின் எதிர்மறையான பார்வைகளை ஊக்குவிப்பதன் மூலம், புதிய ஆளும் அரசியல் உயரடுக்குகள், நிர்வாக சேவையினரின் மனப்பான்மையே பொதுச்சேவைகள் விரைவில் பொதுமக்களிடம் சென்றடைவதற்கு ஒரு தடையாக இருக்கின்றது என்பதை வெளிப்படையாகப் பேசத் தொடங்கினர்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆரம்ப ஆண்டுகளில், அரசியல்வாதிகள் மற்றும் உயரடுக்கு அதிகாரிகளுக்கு இடையே தனித்த பதட்டங்கள் வெளிப்பட்டன.

உண்மையில், இத்தகைய பதட்டங்கள் சிவில் சேவையின் தரத்துடன் சிறிதும் சம்பந்தப்படவில்லை. மாறாக, அதிகாரத்துவ உயரடுக்கினருக்கு விரோதமான எனக் கருதப்பட்டவை, அரசு இயந்திரங்கள் மற்றும் வெகுஜனங்களின் மீதான கட்டுப்பாடு, சட்டப்பூர்வத்தன்மை போன்ற விடயங்களிலேயே மையங் கொண்டிருந்தன.

அடிப்படையில் அதிகாரத்திற்காக இரு குழுக்களுக்கிடையில் விரியும் அதிகாரப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே இப்பதட்டங்கள் அமைந்தன.

அதிகாரத்துவ மற்றும் அரசியல் உயரடுக்குகளுக்கிடையில் போட்டியிடும் மற்றும் மாற்றும் அதிகார உறவுகள் உள்ளூர் சமூக மட்டத்திலும் வெளிப்பட்டன.

அரச நிர்வாகத்தை முழுவதுமான ஆட்சி அதிகாரத்தின் கீழானதாக, அடிபணிந்ததாகக் கட்டியெழுப்ப அரசியல் அதிகார வர்க்கம் முயற்சித்தது. இதற்காக மக்கள் சம்மதத்தைப் பெறவும் அவர்கள் முயற்சித்தார்கள்.

மேலாதிக்கத்தைக் கட்டியெழுப்பும் உத்திகளின் பார்வையில், இந்த சீர்திருத்தங்கள் பெரும்பாலும் சம்மதத்தைக் கட்டியெழுப்புவதை உள்ளடக்கியது. ஆனால் எங்கெல்லாம் சம்மதத்தைக் கட்டியெழுப்பும் உத்திகள் தோல்வியுற்றாலும், ஆளும் உயரடுக்கினர் கட்டாய உத்திகளைக் கையாண்டனர். 

இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னர், அரசியல் உயரடுக்குகளால் வாக்காளர்களின் உணர்வுகளைப் புறக்கணிக்க முடியாது என்பது புலனானது.

இலங்கையின் அரசியல் – குறிப்பாக அவ்வப்போது நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல்களின் முடிவுகள் – அரசியல்வாதிகள் மற்றும் அவர்கள் பிரதிநிதித்துவம் செய்ய விரும்பும் சமூகங்கள் ஆகிய இருவருக்கும் கணிசமான முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக மாறியது. பல வழிகளில், அரசியல் உயரடுக்குகள் பாதிக்கப்படக்கூடிய நிலையிலிருந்தனர். ஆனால், நிர்வாகத்தினர் அவ்வாறல்ல.

அவர்களுக்கென்று சில ஆதாரங்கள் இருந்தன, அதிகாரத்துவ உயரடுக்கினருடன் ஒப்பிடுகையில், பெரும்பாலும் வாழ்க்கைக்கான நிரந்தர வேலைகளில் மிகவும் பாதுகாப்பான நிலையை அனுபவித்தனர்.

அரசியல் உயரடுக்கின் மீது அழுத்தங்கள் அதிகரித்ததால், உள்ளூர் சமூகங்கள் அதிக வளங்கள் தேவை என்ற கோரிக்கையானது, ஆளும் அரசியல் உயரடுக்கினரை சிக்கலில் ஆழ்த்தியது. இந்த காலகட்டத்தில், அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு இடையிலான பதட்டங்கள், அரச நிர்வாகத்தில் பல தற்காலிக சீர்திருத்தங்களைத் தூண்டின, இவை அனைத்தும் அரச நிர்வாகத்தின் பாதுகாப்பான நிலையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தக.

அரசியல்வாதிகளின் சொந்த நலன்களை சுட்டிக்காட்டி, ஆட்சியில் இருக்கும் ஆட்சியினால் இயற்றப்பட்ட சீர்திருத்தங்களை அரசு ஊழியர்கள் அடிக்கடி நிராகரித்தனர், இது அரசியல் உயரடுக்கினரால் அரச நிர்வாகமானது மொத்தமாக அரசியல்மயமாக்குவதாக குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்தது.

சுதந்திரத்திற்குப் பிறகு முதல் மூன்று தசாப்தங்களில் பதவிக்கு வந்த அரசாங்கங்கள், அரச நிர்வாகத்தைப் பாதிக்கும் வகையில் மொத்தம் 30 தனித்தனி சீர்திருத்த மசோதாக்களை அறிமுகப்படுத்தின.

இந்த சீர்திருத்தங்கள் அனைத்தும், குறைந்த பட்சம், நிர்வாக சேவை ஊழியர்களின் சுதந்திரமான அதிகாரத்தைக் குறைப்பதற்காகவும், அரசியல் உயரடுக்கினரின் அதிகாரம் மற்றும் செல்வாக்கை மேம்படுத்தவும், பொது வளங்கள் மற்றும் அவற்றின் விநியோகம் மீதான அவர்களின் கட்டுப்பாட்டை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தன. 

ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட அரச கட்டமைப்புகள் மற்றும் நிறுவன மாற்றங்கள் அடுத்தடுத்த தசாப்தங்களில் அரச-கட்டுமான திட்டத்தை மறுவடிவமைப்பதில் முக்கியமாக இருந்தன. பிரித்தானிய கொலனித்துவ காலத்தில் நிறுவப்பட்ட நிர்வாகத்தின் நிறுவன அமைப்பு, ஒரு அரை-ஆதரவு முறை எவ்வாறு வளர்க்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது.

ஆனால் சுதந்திரத்துக்குப் பிந்தைய ஆண்டுகளில் அரசு நிறுவனங்களின் செயல்பாடுகள், தாழ்த்தப்பட்ட மக்களைத் தேர்தல் கட்சி அரசியலுக்குள் நிலையான அரசியல் அணிதிரட்டுவதற்கான கருவியாக மாற்றப்பட்டது.

ஒட்டுமொத்தமாக, உயரடுக்குகளின் மேலாதிக்கத்தைக் கட்டியெழுப்பும் திட்டத்தை முன்னெடுப்பதற்குப் பயனளிக்கும் வகையில் ஒப்புதல் அடிப்படையிலான அரசியல் கூட்டணியை உருவாக்குவதே இதன் இலக்காக இருந்தது.

அரச நிறுவனம் முழுவதும் அனுசரணை அரசியலை நிறுவனமயப்படுத்துவது எப்படி என்ற புதிருக்கு, சிங்கள ஆளும் உயரடுக்கானது, கட்சி அடிப்படையிலான அனுசரணை முறைக்கு நிதியளிப்பதற்காக நிரந்தர உத்தரவாதமாக அரச நிறுவனங்களை அரசியல்மயப்படுத்தல் என்ற வழியைக் கண்டுபிடித்தது. 

அரச நிறுவனங்களின் செயல்பாட்டின் மீதான விமர்சனங்கள், அடிப்படை பொதுச் சேவைகளை வழங்குவதில் அவற்றின் திறமையின்மை, அவற்றின் கட்டுப்பாடற்ற விரிவாக்கம் மற்றும் பொது நிர்வாகத்தின் மிகப்பெரிய பராமரிப்பு செலவுகள் ஆகியவற்றை அடிக்கடி சுட்டிக்காட்டுகின்றன.

அரசியல் மயமாக்கல் மற்றும் பரவலான அனுசரணை அரசியல் என்பது அரச நிறுவனங்கள் முழுவதும் கவலையளிக்கும் வளர்ச்சியாக உள்ளது. அரச நிறுவனங்களில் அனுசரணை அரசியல் பற்றிய இன்னொரு முக்கியமான பரிமாணம், நிறுவனங்களின் அரசியல் மயமாதலுக்கும்,  இன மோதல்கள் மற்றும் உள்நாட்டுப் போருக்கும் இடையிலான தொடர்பாகும். அரச நிறுவனங்களில் வேரூன்றிய அனுசரணை அரசியல் இனவாதமாகவும் சிறுபான்மையினருக்கான பொதுச்சேவை வழங்கலில் பாரபட்சமாகவும் வெளிப்பட்டது. 

Leave a Reply