அமரர் .பொன்.கந்தையா: [ 01. 07.1915 – 09.09.1960 ] 108வது பிறந்தநாள்.

தோழர் .மு.கார்த்திகேசன், கந்தையா பற்றி எழுதிய குறிப்பு.
// ” இன்று கம்யூனிஸ்ட் கடசியின் தலைவர்களில் ஒருவரான சண்முகதாசனும் நானும் இவரது செல்வாக்கிற்கு உட்பட்டவர்கள்.வேறு ஒருவரில் பார்க்க கந்தையா தான் எங்களுக்கு உத்வேகமூட்டும் சோசலிசம் பற்றிய கண்ணோட்டங்களை எடுத்துக்காட்டினார்.வறுமை ,வேலையில்லா திண்டாட்டம் ,அறியாமை ஆகியவற்றை அகற்றி சோவியத்நாடு சாதித்த பெரும் சாதனைகளையும் உற்சாகமூட்டும் முறையில் எங்களுக்கு விளக்கிக் காட்டினார்.” //

தோழர்.பொன்.கந்தையா அவர்களின் நினைவாக 1982 ல், கம்பர்மலையில் எழுந்த நூலகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த எழுத்தாளரும், இலக்கிய விமர்சகருமான தோழர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் திறந்து வைத்த போது எடுக்கப்பட்ட படம்.

அருகில் எனது தந்தையார் கே.தங்கவடிவேல், மற்றும் எழுத்தாளர், தோழர் கே.டானியல் தோன்றும் காட்சி.