போராட்டக்காரர்களைக் கடத்துதலும் அவர்களைக் கைதுசெய்தலும் அச்சுறுத்துதலும் அவர்களை அடக்கியொடுக்குதலும் தொடர்ச்சியாக நடைபெற்று வந்து கடந்த பல நாட்களாக அதிகரித்து வரும் மனச் சஞ்சலமேற்படுத்தும் போக்குத் தொடர்பாக நாம் அதீத கரிசணை கொண்டுள்ளோம்.
ஜூலை 27 ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில சம்பந்தப்பட்ட அருட்தந்தை ஜீவந்த மீதும் ஏனைய பல முன்னணி மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மீதும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் பயணத் தடை
விதித்துள்ளது என ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளதுடன் ஜூலை 27 ஆம் திகதி தேவாலயம் ஒன்றிற்குச் சென்ற உள்;ர்ப் பொலிசார் அங்கிருந்த வதிவிடக் குருவானவரிடம் அருட்தந்தை ஜீவானந்தவைக் கைது செய்வதற்குத் தமக்குக் கொழும்பில் இருந்து உத்தரவு கிடைத்துள்ளதாகக்
கூறியுள்ளனர்.
காலி முகத்திடல் போராட்டத்தில் சம்பந்தப்பட்ட ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் இருந்து குடிவரவுத் திணைக்களத்தின் பரிசீலனைகளின் பின்னர் புறப்படத் தயராக இருந்த நிலையில் விமானத்தில் வைத்து ஜூலை 26 ஆம் திகதி சீருடை அணிந்த பொலிசாரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். சக பயணிகள் எதிர்ப்புக் காட்டிய பின்னரே கைதுக்கான காரணம் கூறப்பட்டிருக்கின்றது.
முன்னாள் மாணவர் செயற்பாட்டாளரும் ஊடகவியலாளரும் காலி முகத்திடலில் முனைப்பான போராட்டக்காரராகச் செயற்பட்டவருமான வீரங்க பு~;பிக ஜூலை 27 ஆம் திகதி பட்டப்பகலில் சிவிலில் இருந்த நபர்களினால் பஸ் ஒன்றில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரைக் கைது செய்ததைப் பொலிசார் பின்னர் ஏற்றுக்கொண்டாலும் அவர் எங்கே வைக்கப்பட்டுள்ளார் என்பது பற்றிய தெளிவான தகவல்கள் சட்டத்தரணிகளுக்கும் மனித உரிமைகள் ஆணையாளருக்கும் பல மணி
நேரமாக வழங்கப்படவில்லை.
மேலும், ஜூலை 09 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் இருந்து
கண்டெடுத்த பெருந்தொகைப் பணத்தினைப் பொலிசிடம் கையளித்த நான்கு போராட்டக்காரர்களும் ஜூலை 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களைச் சந்திக்கச் சென்ற
சட்டத்தரணிகளைத் தடுப்பதற்குப் பொலிசார் முயன்றுள்ளனர்.
அன்றைய தினம் (ஜூலை 27) தம்மைப் பொலிசார் எனக் கூறிய சிவில் உடையில் இருந்த சில நபர்கள் “Xposure News” அலுவலகத்தினுள்
சென்று புகைப்படத்தில் உள்ள நபர்களை அடையாளம் காட்டுமாறும் சிசிடிவி காணொளிகளைக் காட்டுமாறும் அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்களிடம் அதிகாரத் தொனியில் கூறியதுடன் அலுவலகத்தின் நுழைவாயிலை சுமார் ஒரு மணித்தியாலம் கண்காணித்துள்ளனர். காலி முகத்திடல் போராட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முற்றுகையும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் நடைபெற்ற வன்முறைகளும் மிகப் பரவலாக Xposure News இனால் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் 22 ஜூலை
அதிகாலை ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இச்செய்தி நிறுவனத்தின் ஊடகவியலாளர் ஒருவரும் தாக்கப்பட்டுள்ளார். மேலும், சில வாரங்களுக்கு முன்னர் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட புலனாய்வு ஊடகவியலாளரும் மனித உரிமைகள் பாதுகாவலருமான தரிந்து உடுவேரகெதர கைது செய்யப்படுவதற்கான சாத்தியம்
பற்றி இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் ஜூலை 27 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றினைத் தாக்கல் செய்துள்ளனர்.
அரசாங்கத்தின் தவறான முகாமைத்துவமும் ஊழலுமே எரிபொருள், உணவு மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறைக்கு இட்டுச்சென்ற தீவிர பொருளாதார
நெருக்கடிக்கான மிக முக்கியமான காரணம் என்பதை அதிகரித்த அளவில் பொதுமக்கள் புரிந்துகொண்டதன் காரணமாகவே 2021 மார்ச் மாதத்தில் இருந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.
எனவே, பெருமளவுக்கு அமைதியாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள்
வகைப்பொறுப்பினையும் ஆளுகை முறையில் மாற்றத்தினையுமே கோரின. அரசாங்கம் காட்டிவரும் பதிற்செயற்பாட்டில் விகிதாரசாரமற்ற அளவிலான பலப் பிரயோகமும் அச்சுறுத்தல்களும் பயமுறுத்தல்களும் உள்ளடங்கியுள்ளதுடன் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியவர்கள் அல்லது ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்தவர்கள் என நம்பப்படுபவர்களுக்கு எதிராகவும் சட்ட ரீதியான பழிவாங்கல்களும் இடம்பெற்று வருகின்றன.
பாதிக்கப்பட்டவர்களும் செயற்பாட்டாளர்களும் வகைப்பொறுப்பினையும் பரிகாரத்தினையும் கோருவதும் அதற்கான பதிலாக அரசாங்கத்தின் அடக்குமுறையும் இலங்கைக்கு ஒன்றும் புதியதல்ல – பல
வருடங்களாக, நீதியினையும் பரிகாரத்தினையும் கோரிய பாதிக்கப்பட்டு வாழ்பவர்களும் மனித உரமைகள் செயற்பாட்டாளர்களும் குறிப்பாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கினைச் சேர்ந்தவர்கள்
வன்முறைமிக்க அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
இலங்கையின் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க 2022 ஜூலை 21 ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். ஜூலை 9 ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களைத்
தொடர்ந்து நாட்டில் இருந்து தப்பியோடிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனது பதவியினை ராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்தே ரணில் பதவிக்கு வந்தார். 2020 பொதுத் தேர்தலில் வெற்றிபெறாமல் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்றின் மூலமே
ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றம் நுழைந்தார்.
பிரதமராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் ஆர்ப்பாட்டக்காரர்களைப் புகழ்ந்த ரணில், 2022 மே மாதத்தில் கோதபாய ராஜபக்சவினால் பிரதமராக
நியமிக்கப்பட்ட பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தினையும் வழங்கினார்.
எவ்வாறாயினும், இவர் ஜனாதிபதியாக எப்போது நியமிக்கப்பட்டாரோ அப்போதில் இருந்து தவறான தகவல்களை வெளியிடுகின்ற மற்றும்
வேண்டுமென்றே தவறாக வழிநடத்துவதற்காகப் போலியான தகவல்களை வெளியிடுகின்ற பிரச்சாரங்களையும் வன்முறையினையும் பாதகமான முத்திரை குத்தல்களையும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களுக்கும் எதிராகத் தொடங்கிவைத்தார்.
இவர் பதில் ஜனாதிபதியாக இருந்தபோது ஆர்ப்பாட்டக்காரர்களை பாசிஸ்டுகள் என்றும் வன்முறைமிக்கவர்கள் என்றும் முத்திரை குத்தினார் இந்தப் போக்கு அப்போதில் இருந்து இன்னும் தொடர்கின்றது.
ஜனாதிபதியாகப் பதவியேற்று 24 மணித்தியாலங்கள் செல்வதற்கு முன்னர்
கொழும்பிலும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் உள்ள போராட்டக் களங்களில் இருந்த செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், டுபுடீவுஐஞூ சமுதாயத்தினர் மற்றும் அங்கவீனமானவர்கள்
உள்ளிட்ட அமைதியாகவும் ஆயுதமின்றியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவத்தினாலும் அடையாளம் தெரியாத சீருடைகளில் இருந்தவர்களினாலும் குரூரமாகத் தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது ஆயதப் படையினருடன் சிவில் உடைகளில் இருந்தவர்களால்
பிபிசி நிருபரும் தாக்கப்பட்டுள்ளார். போராட்டக்காரர்களின் கொட்டகைகளும் அவர்களுக்குச் சொந்தமான உடைமைகளும் அழிக்கப்பட்டுத் திருடப்பட்டுள்ளன.
காயப்பட்டவர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் போராட்டக் களத்தினை விட்டு வெளியேறுவதற்குப் பல மணி நேரங்களாக அனுமதி வழங்கப்படவில்லை. காலி முகத்திடலுக்குச் செல்வதற்கு அம்புலன்சுகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் சட்டத்தரணிகளுக்கும் சமயத் தலைவர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
ஊடகவியலாளர்களும் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தவர்களும் தாக்கப்பட்டு, குரூரமாகவும் மனிதாபிமானமற்ற முறையிலும் கேலவமாகவும் நடத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டனர்.
கொழும்புக்கு வெளியே அமைந்திருந்த பல போராட்டக் களங்களும் தாக்கப்பட்டதுடன் ஏனைய போராட்டக் களங்களில் இருந்து பின்வாங்கிச் செல்லுமாறு பொலிசாரினால் பலவந்தம் மேற்கொள்ளப்பட்டது.
உயர் அதிகாரிகளுக்குத் தெரியாமலும் அவர்களின் அங்கீகாரமின்றியும்
இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்றிருக்க முடியாது. ஆயுதப் படைகளின் தளபதி என்ற ரீதியிலும் அவசர கால நிலையினைப் பிரகடனப்படுத்தியவர் என்ற ரீதியிலும் ஜனாதிபதியும் முப்படைகளின்
தளபதிகளுமே இத்தாக்குதல்களுக்கான இறுதிப் பொறுப்பினைக் கொண்டுள்ளனர்.
ஆட்களையும் அப்பாவிகளையும் பொது இடங்களில் வைத்துக் கைதுசெய்து, விசாரணை செய்து தடுத்துவைப்பதற்கு இராணுவத்தினை வலுவூட்டுகின்ற பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச்சட்டத்தின்
அத்தியாயம் 40 இன் கீழ் வெளியிடப்பட்ட 2289ஃ40 ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலையின் கீழ் இலங்கை
இருந்த நிலையிலேயே ஜூலை 22 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
அவசரகால நிலையினைப் பிரகடனப்படுத்தியது தாமே கேள்விக்குட்படுத்தப்படக்கூடியதாகும் என்பதுடன் இது அவசரகால நிலைப்
பிரகடனம் மற்றும் பேணுகையினை ஒழுங்குபடுத்துகின்ற சர்வதேச நியமங்களுக்கு இயைபுறவில்லை.
மேலும், நீதித்துறையினால் நிறைவேற்றப்படவேண்டிய பல அதிகாரங்கள் அல்லது நீதிமுறை மேற்பார்வைக்குக் கட்டாயம் உட்படுத்தப்படவேண்டிய பல அதிகாரங்கள் எவ்விதமான சுயாதீனமான மேற்பார்வையும் இன்றி இராணுவத்திற்கு வழங்கப்பட்டிருப்பது அரசியலமைப்பில் பொதியப்பட்டுள்ள பல அடிப்படை உரிமைகளை மீறும் விதத்தில் ஒழுங்குவிதிகள் தன்னிச்சையாகப் பயன்படுத்தப்படுவதற்கும் அவற்றின் துபிரயோகமிக்க பாவனைக்குமே வழிவகுக்கும்.
அவசர கால நிலையினைப் பிரகடனப்படுத்தியமை, கருத்து வெளிப்பாட்டுக்கான சுதந்திரத்தினையும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்தினையும் மிகக் கடுமையாகக் கட்டுப்படுத்தி அச்சுதந்திரங்களை மீறி, அதன் மூலம் தன்னிச்சையான கைதுகளுக்கும் மிக நீண்ட காலத் தடுத்துவைப்புக்களுக்கும் இட்டுச்செல்கின்ற கொடிய அவசரகால ஒழுங்குவிதிகளையும் கருத்துவேறுபாட்டினைச் சகித்துக் கொள்ளாமையினையும் கொண்டுள்ள அச்சுறுத்தும் அரசியல் செய்தியினையே அனுப்பியுள்ளது.
அவசர கால நிலையினைப் பிரகடனப்படுத்துவதற்கான ஜனாதிபதியின்
தீர்மானத்திற்குப் பாராளுமன்றம் இப்போது அங்கீகாரம் வழங்கியுள்ளமையானது நிறைவேற்று அதிகாரமும் சட்டவாக்கமும் தற்போது அடக்குமுறைப் பாதையிலேயே செல்கின்றன என்பதையே
சுட்டிக்காட்டுகின்றது.
தவறான தகவல்களையும் வேண்டுமென்றே தவறாக வழிநடத்துவதற்காகப் போலியான தகவல்களையும் அரசாங்கம் பரப்புகின்ற ஒரு சூழமைவில் ஜூலை 09 ஆம் திகதி ஆர்ப்பாட்டங்களின்
போது ஆக்கிரமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலகத்தினைத் தவிர ஏனைய அனைத்துக் கட்டிடங்களையும் போராட்டக்காரர்கள் ஏற்கனவே கையளித்துவிட்டனர் என்பது இங்கே கவனத்தில் கொள்ளப்படவேண்டிய ஒரு முக்கியமான விடயமாகும்.
22 ஜூலை பின்மதியம் ஜனாதிபதி செயலகத்தினைக் காலி செய்யும் தீர்மானம் பகிரங்கப்படுத்தப்பட்டு அது ஊடகங்களில் பரவலாக
வெளியிடப்பட்டது. எனவே, அவ்விடத்தில் இருந்து ஆட்களை வெளியேற்ற வன்முறையினைப் பிரயோகித்தமை அச்சம் நிறைந்த ஒரு சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட குரூரச் செயல் என்பதுடன் இதனை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
எஸ் டபிளியு ஆர் டி பண்டாரநயக்க சிலையினைச் சுற்றி 50 மீற்றர் சுற்றுவட்டத்தினுள் ஒரு குறிப்பிட்ட தனிநபரும் அவருடன்
சேர்ந்து இயங்குபவர்களும் இருப்பதைத் தடைசெய்யும் நீதிமன்ற உத்தரவினைச் சுட்டிக்காட்டி வன்முறைச் செயற்பாட்டினைப் பொலிசார் நியாயப்படுத்தினாலும் பிரதான போராட்டக் களத்தில் இருந்து பல மீற்றர்களுக்கு அப்பாலேயே வன்முறை நடந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், நீதிமன்ற உத்தரவினை அமலாக்குவதற்கு அல்லது தற்பாதுகாப்புக்கு ஆயுதப் படைகளினால் பலம் பிரயோகிக்கப்படவில்லை என்பதை வீடியோச் சான்று தெளிவாகக் காட்டுவதற்கான காரணம் ஆயுதப் படையினர் ஆட்களை அணுகி அல்லது துரத்திச்சென்று குரூரமாகத்
தாக்கியுள்ளமையே ஆகும்.
எனவே, இது முரண்பாட்டினைத் தீவிரப்படுத்துவதற்காக அரசின் தரப்பில்
மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும் என்பதுடன் இதன் காரணமாக நாட்டில் ஸ்திரமின்மை அதிகரித்துள்ளதால் இதற்கான முழப்பொறுப்பும் அரசாங்கத்தினையும் ஜனாதிபதி என்ற ரீதியில் விக்கிரமசிங்கவினையுமே சாரும்.
எவ்விதமான எச்சரிக்கையும் இன்றி இரவிலேயே தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது இங்கு கட்டாயம் கவனத்தில்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன் கோட்டா கோ கம பொது நூலகத்தின் நூல்கள் உள்ளடங்கலாகப் போராட்டக்காரர்கள் தங்களின்
தனிப்பட்ட உடைமைகளையும் விட்டுவிட்டே தப்பி வெளியேறியுள்ளனர்.
அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீதான இந்த வன்முறையினை நாங்கள் முற்றுமுழுவதும் கண்டிக்கின்றோம். போராட்டக்காரர்களுக்கு தலைமைத்துவம் என்ற ஒன்று இல்லை என்ற போதிலும்
போராட்டத்தினை ‘முன்னின்று நடத்தி ஏற்பாடு செய்பவர்கள்’ என அரசு சித்தரிப்பவர்களுக்கு எதிரான முத்திரை குத்தல்களையும் அவர்கள் பற்றிய தவறான தகவல்களையும் அவர்கள் பற்றி வேண்டுமென்று வெளியிடப்படும் பொய்யான தகவல்களையும் நாம் குறிப்பாகக் கண்டிக்கின்றோம்.
சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் ஜனநாயக ஆதரவுப் பிரச்சாரகர்களும் ஊடகவியலாளர்களும் மனித உரிமைகள் சட்டத்தரணிகளும் குருமார்களும் தாக்கப்பட்டதோடு மாத்திரமன்றி இவர்கள் கைதுசெய்யப்பட்டு கருத்து வேறுபாட்டினை நசுக்கும் நடவடிக்கையாக, வன்முறைமிக்க பாசிச சக்திகள் என இவர்கள் மீது அரசினால் முத்திரை குத்தப்படுகின்றது.
அரசாங்கத்தினால் பயன்படுத்தப்படும் மொழி வன்முறைக் கலாசாரத்தினை இயலுமாக்குகின்றது என்பதுடன் தற்போதைய
அரசியல் நெருக்கடியினை இது மேலும் தீவிரப்படுத்தலாம்.
அரசினால் பயன்படுத்தப்படுவதும் மிகவும் கரிசணைக்குரியதும் உள்ளார்ந்த சதிமிக்கதுமான உபாயமார்க்கமாகப் பிரசைகள் அவர்களின்
அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காகத் தன்னிச்சையான முறையிலும் விகிதாசாரமற்ற முறையிலும் சட்டம் து~;பிரயோகம் செய்யப்படுகின்றமை அமைந்துள்ளது.
நாங்கள் போராட்டக்காரர்களுடனும் தற்போது பல்வேறு விதிமுறைத் தண்டங்களுக்கு உட்பட்டுள்ளவர்களுடனும் கூட்டொருமையுடன் சேர்ந்துள்ளோம்.
2022 ஜூலை 9 மற்றும் 22 ஆம் திகதி கட்டவிழ்க்கப்பட்ட போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறை உள்ளடங்கலாக அவர்களுக்குஎதிரான வன்முறைக்கான வகைப்பொறுப்பிற்காக நாம் அழைப்பு விடுக்கின்றோம்.
குடிமைச் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக நிலுவையாக இருக்கும் வழக்குகளும் போரட்டக்காரர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீதான பயணத் தடை மற்றும் அவர்களின் பயண ஆவணங்களின் பறிமுதல்
உள்ளடங்கலாக அவர்களுக்கெதிராக இருக்கும் விதிமுறைத் தண்டங்களும் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
ஜனநாயகத்தினை நிலைபெறச் செய்வதற்கு அமைதிவழிக் கருத்துவேறுபாடு அவசியமானதாகும்.
மேலும், தற்போதைய நெருக்கடிச் சூழமைவில், சர்வசேத நம்பகத்தன்மையினைப் பொறுத்த அளவிலும் இது முக்கியமானதாகும். அரசியல் ஸ்திரத்தன்மையினை வலுப்படுத்துவதற்குத்
தேவைப்படுவது சட்ட ஆட்சியும் கலந்துரையாடலுமே அன்றி அடக்குமுறையல்ல.
போராட்டக்காரர்களுக்கு எதிராகவும் குடிமைச் செயற்பாட்டாளர்களுக்கு எதிராகவும் நடத்தப்படும் தாக்குதல்களை இலங்கை அரசும் விக்கிரமசிங்க அரசாங்கமும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதுடன் போராட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறை நிகழ்த்தியவர்கள் வகைப்பொறுப்புக் கூறவைக்கப்பட வேண்டும்.
அமைதியான ஆர்ப்பாட்டங்களும் மனித உரிமைகளைப் பாதுகாத்தலும்
குற்றச்செயல்களல்ல. அரசாங்கம் இதனை நினைவில் கொண்டு இதனை மதிக்க வேண்டும்.
ஒப்பமிட்டவர்கள்
தனிநபர்கள்
- அபிராமி சிவலோகநாதன்
- அய்ன்ஸ்லி ஜோசப் – தலைவர், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்
- அமலி வெதகெதர, பெண்ணியச் செயற்பாட்டார்
- அமலினி த சய்ரா
- அம்பிகா சற்குணநாதன்
- அமீர் பாயிஸ்
- அருணி ஜோன்
- அசிலா தந்தெனிய
- டீ. கவுதமன்
- பிபிலதெனிய மஹாநாம தேரர்
- பிசப் துலீப் த சிகேரா
- பிசப் கென்னெத் பெர்ணாண்டோ
- பிசப் குமார இளங்கசிங்க
- பிரயன் பார்த்தலோமியஸ்
- ஊ. டோசெர்
- கதெரின் மெக்
- சமி சமரவீர
- சமீலா து~hரி
- சந்திரிகா த சில்வா – சுயாதீன ஊடகவியலாளர்
- சன்னக ஜயசிங்ஹ
- கிறிஸ்தோபர் ஸ்டீபன்
- னு. விபூ பாலகிரு~;னன்
- தமரிஸ் விக்ரமசேகர
- தீன உயங்கொட
- டெபோரா பிலிப்
- தீக்சயா இளங்கசிங்க
- தில்ருக்சி ஹந்துன்னெத்தி
- தினுசிகா திசநாயக்க, சட்டத்தரணி
- னுச. நடாசா பாலேந்திரா
- னுச. பாக்கியசோதி சரவணமுத்து
- னுச. ளு.டீ. தனபால
- னுச. சேர்மல் விஜேவர்தன
- னுச. வினோத் ராமச்சந்திரா
- து~;யந்தி மெண்டிஸ் – கொழும்பு பல்கலைக்கழககம்
- டிலான் பெரெரா
- பாரா மிஹ்லார்
- கங்கா ஜீவனி வெலிவத்த, நடிகை, கவிஞர், சமூகச் செயற்பாட்டாளர்
- கீதிகா தர்மசிங்க – கோல்கேட் பல்கலைக்கழகம்
- ஹரிந்திரினி கொரியா, சட்டத்தரணி
- ஹசங்க டிலான்
- ஹேமசிரி பெரெரா
- ஹேர்மன் குமார
- இந்துமதி ஹரிஹரதாமோதரன் – விழுது
- இரோமி பெரெரா
- து. தயாளினி
- து. வரலாயலினி
- ஜேக் ஓர்லேர்
- ஜமுனாந்த சிவநாதன்
- ஜானகி அபேவர்தன
- ஜயதேவ உயங்கொட, முன்னார் பேராசரிரியர் – கொழும்பு பல்கலைக்கழகம்
- ஜயந்தி குரு உடுத்பல
- ஜோன் சென்
- மு. ஹேமலதா
- மு. சத்தியசீலன்
- மு.து. பிரிட்டோ பெர்ணாண்டோ
- மு.ளு. ரத்னவேல்
- களனி சுபசிங்ஹ
- கவுசல்யா ஆரியரத்ன
- குமரன் நடேசன்
- டு.று.சு. விக்ரமசிங்க
- லால் மோதா
- லால் விஜேநாயக்க, பொதுச் செயலாளர் – யுனைடட் லெப்ட் பவர்
- லெய்சா லோனர்
- லேகா ரத்வத்த
- லுசில் அபேகோன்
- ஆ. நிர்மலாதேவி
- மரியன் பிரதீபா
- மரிசா த சில்வா
- மாயா மெக்கோய்
- மெலனி மானெல் பெரெரா – ஊடகவியலாளர்
- மிராக் ரஹீம் – ஆய்வாளர் மற்றும் செயற்பாட்டாளர்
- மொனிகா அல்பிரட்
- முஜீப் ரஹ்மான், டுடுடீ
- N. ஆர்த்திகன்
- N. ஏ. நுகவெல
- நபீலா இக்பால்
- நகுலன் நேசையா
- நவயுக குகராஜா
- நெய்ல் பிரியந்த பெர்ணாண்டோ
- நிகோலா பெரெரா – கொழும்பு பலக்லைக்கழகம்
- நில்சன் பொன்சேகா
- நிருன் லசங்க
- நிசான் த மெல் – பொருளியலாளர்
- நியந்தினி கதிர்காமர்
- P.N. சஜங்கம
- பசன் ஜயசிங்ஹ
- பிலிப் சேதுங்க
- பிரபு தீபன்
- பிரசான் த விசெர்
- பிரேசி ரேமுனஹெட்டிகே
- பிரியானி கெல்மென்
- Pசழக. அர்ஜூன பாராக்கிரம- போராதனைப் பல்;கலைக்கழககம்
- Pசழக. கமெனா குணரத்ன
- Pசழக. சமலா குமார் – பேராதனைப் பல்கலைக்கழகம்
- பூனி செல்வரத்னம் – இலங்கையில் நீதி மற்றும் சமாதானத்திற்கான பெண்கள்
- சு. கவுந்தினி
- சு. சத்தியா
- சு.து. சுரேந்திரராஜா
- ரஜனி ராஜேஸ்வரி
- ராஜ்குமார் ரஜூவ்காந்த்
- ராமலிங்கம் ர~;சன்
- ரமோனா மிராண்டா
- சுநஎ. அன்ட்ரூ தேவதாசன் – அங்கிலிக்கன் தேவாலயம் – கொழும்பு மறை மாவடடம்
- சுநஎ. அசோக் ஸ்டீபன் ழுஆஐ – முன்னாள் பணிப்பாளர், சமூகம் மற்றும் சமயத்திற்கான மையம்
(ஊளுசு) - சுநஎ. கிறிஸ்டின் பெரெரா – செயற்பாட்டாளர்
- சுநஎ. னுச. ஜேசன் த. செல்வராஜா – யுளளநஅடிடல ழக புழன in ளுசi டுயமெய
- சுநஎ. னுச. ஜயசிரி வு. பீரிஸ்
- சுநஎ. குச. கு.ஊ.து. ஜானராஜ்
- சுநஎ. குச. ஜெயபாலன் குரூஸ்
- சுநஎ. குச. நந்தன மனதுங்க
- சுநஎ. குச. டேரன்ஸ் பெர்ணாண்டோ
- சுநஎ. ளுச. தீபா பெர்ணாண்டோ
- சுநஎ. ளுச. நிகோலா எமானுவேல்
- சுநஎ. ளுச. நொயெல் கிறிஸ்டின் பெர்ணாண்டோ
- சுநஎ. ளுச. ரசிகா பீரிஸ் ர்கு
- ரெயான் நடேசராசா
- ரொஹான் விக்ரமரத்ன
- ரோஹினி டெப் வீரசிங்க
- ரோஹினி ஹென்ஸ்மென் – எழுத்தாளர், ஆய்வாளர் மற்றும் செயற்பாட்டாளர்
- ருகி பெர்ணாண்டோ
- ருவன் லகாந் ஜயக்கொடி
- ளு. ஈஸ்வரன்
- ளு. இதயராணி
- ளு. கோபிகா
- ளு. மரியரோசலின்
- ளு. நித்தி
- ளு. தர்சன்
- ளு. திலீபன்;
- ளு. வீரப்பிரிய
- சப்ரா ஜஹீட்
- சகாயம் திலீபன்
- சம்பத் குணரத்ன
- சம்பத் சமரகோன்
- சந்துன் துடுகல
- சஞ்;சன ஹத்தொட்டுவ
- சங்க ரணதீர
- சாரா ஆறுமுகம்
- சரித இருகல்பண்டார
- செல்வராஜா ராஜசேகர் – ஆசிரியர், ஆயயவசயஅ.ழசப
- சமலி த சில்வா பரிசியு
- சர்மினி ரத்நாயக்க
- சர்மினி விக்ரமநாயக்க
- சிவந்த ரத்நாயக்க
- சிரீன் சரூர்
- சித்ரலேகா மௌனகுரு – சுயாதீனப் பெண்ணிய ஆய்வாளர், மட்டக்களப்பு
- சொனாலி தெரனியகல
- சிறிநாத் பெரெரா
- சுப்ரம் ராமசாசுவாமி
- சுசித் அபேவிக்ரம – சமூகச் செயற்பாட்டாளர்
- சுனந்த தேசப்பிரிய
- சுரேன் த பெரெரா, சட்டத்தரணி
- சுவஸ்திகா அருலிங்கம்
- தானியா ராஜபக்ச
- தியாகி ருவன்பதிரன
- உபேக்சா தாப்ரூ
- ஏ. சாமினி
- ஏ. சஜந்துக
- வேலாயுதன் ஜயசித்ரா
- வேலுசாமி வீரசிங்கம்
- ஏநn. குச. சமுவேல் ஜே பொன்னையா, கொமும்;பு மறை மாவட்டம் ஊhரசஉh ழக ஊநலடழn
- வெனுரி பெரெரா
- விராஜ் அபேரத்ன
- விசாகா திலகரத்ன, முன்னாள் பிரதம ஆணையாளர், ளுசi டுயமெய புசைட புரனைநள ரூ நுஒ-
ஊழ அநஅடிநசஇ ஆழுNடுயுசு - விமல் ஜயக்கொடி
- யாலினி டிரீம்
அமைப்புக்கள் - மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி மையம் (ஊர்சுனு)
- மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் (ஊPயு)
- தபிந்து கலெக்டிவ்
- காணமால் பேனவர்களின் குடும்பங்கள் (குழனு)
- பாதிக்கப்பட்ட குடும்;பங்களின் மன்று மன்னார்
- மனித உரிமைகள் அலுவலகம் (ர்சுழு)
- மாயன்மய் – சாதியத்திற்கெதிரான பெண்ணியக் கூட்டு
- தேசிய கடற்றொழில் கூட்டொருமை இயக்கம் (Nயுகுளுழு)
- ரீகன்சிலியேசன் அன்ட் பீஸ் டெஸ்க், கொழும்பு மறை மாவட்டம்
- ரிவலியூசனரி எக்சிஸ்டென்ஸ் போர் ஹியூமன் டிவலப்மன்ட்(சுநுனு