கறுப்பு யூலையின் நாற்பதாண்டுகளின் பின் – 22: அரசை உலுக்கிய மக்கள் எழுச்சியும் எதிர்வினைகளும்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
‘அரகலய’ இன்றைய இளந் தலைமுறையினருக்கு ஒரு புதிய அனுபவம். சுதந்திர இலங்கையின் 75 ஆண்டுகால வரலாற்றில் அரகலயவுக்கு தனியான இடமுண்டு. ஆனால் இது இலங்கையர்கள் எழுச்சி கொண்ட முதலாவது சந்தர்ப்பம் அல்ல. இலங்கை சுதந்திரமடைந்து 5 ஆண்டுகள் நிறைவடைவதற்குள்ளேயே மிகப்பெரிய மக்கள் போராட்டம் 1953இல் வெடித்தது. இது இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியமான நிகழ்வு. கடந்தவாரக் கட்டுரையில் சுட்டிக்காட்டியபடி சுதந்திர இலங்கையின் ஆட்சியாளர்கள் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தவில்லை.