ஜெய் பீம் ! என்ற முழக்கத்திற்குப் பின்னே ஒரு வீர வரலாறு உண்டு. புனே நகருக்கு அருகே உள்ள ‘பீமா’ என்ற நதிக் கரையில் போர் நடந்து 200 ஆண்டுகள் ஆகும் இந்த வேளையில் அதன் வரலாற்றை அறிந்து கொள்வது அவசியம் ! 1800-களில் பார்ப்பன பேஷ்வாக்கள் மராட்டியத்தை ஆண்டு வந்தனர்.
அப்போது,இந்துமத வேதப்பண்பாடுகளும்,மனுசாஸ்திரக் கொடுமைகளும் மிகக்கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டன. தலித்துகள் பகலில் தெருக்களில் நடமாடக்கூடாது;நடந்தாலும் தெருவில் எச்சில் துப்பிவிடக்கூடாது;எச்சிலைத் துப்புவதற்கு தம் கழுத்தில் ஒரு மண் கலயத்தைக் கட்டித்தொங்க விட்டுக்கொண்டு வரவேண்டும்
தலித்களின் கால் தடத்தைப் பார்ப்பனர்கள் மிதித்தால் பார்ப்பனர்களுக்குத் தீட்டாகிவிடும்.அதனால் அவர்கள் பின்பகுதியில் ஒரு பனை ஓலையைக் கட்டிக்கொண்டு நடக்க வேண்டும்.அந்தப் பனைஓலை தனது கால் தடத்தை அழித்துக்கொண்டே வரவேண்டும். தலித்கள் கல்வி கற்கக்கூடடாது.ஆயுதம் வைத்திருக்கக் கூடாது.
இவைபோன்ற எண்ணற்ற சாஸ்திர, சம்பிரதாயக் கொடுமைகளுக்கு எதிராக, தாழ்த்தப்பட்ட மகர் மக்களும்,பிற்படுத்தப்பட்ட மக்களும்,சிறுபான்மை இஸ்லாமியரும் இணைந்து ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினர். 1817 டிசம் 31 இரவு. புனே நகருக்கு அருகே கோரிகான் என்றஊரில் உள்ள ‘பீமா’ என்ற நதிக்கரைதான் போர்க்களம்.
2-ஆம் பாஜிராவ் என்ற பார்ப்பன மன்னனின் தளபதியான, ‘கோகலே’ தலைமையில் 28000 பார்ப்பனப்படைவீரர்கள் ஒருபுறம்.500 மகர் சமுதாய வீரர்களும்,100 பிற்படுத்தப்பட்ட, இஸ்லாமியச் சமுதாய வீரர்களும் இணைந்த படை மறுபுறம். போர் தொடங்கிய 12 மணி நேரத்தில் 600 பார்ப்பனப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.
பார்ப்பனப் படைத்தலைவன் கோகலே களத்திலேயே படுகொலை ஆனான்.ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களும், அவர்களின் ஆதரவுப் படைகளும் சிதறின. பாஜிராவ் கைதானான். பார்ப்பன பேஷ்வாக்களின் மராட்டியப் பேரரசுக்கு இரத்தத்தால் முடிவுரை எழுதியது மகர் ரெஜிமண்ட்.
வெற்றியின் நினைவாக, சாதி ஒழிப்புப் போராளிகள் விதைக்கப்பட்ட ‘பீமா’ நதிக்கரையில் ஒரு வெற்றிச்சின்னம் நிறுவப்பட்டது. 1927 ஜனவரி 1 ல் தோழர் அம்பேத்கர் இந்த நினைவிடத்திற்குச் சென்றார். அன்றுதான் பீமா நதிக்கரை வெற்றியின் நினைவாக “ஜெய் பீம்” எனும் வெற்றி முழக்கம் வெடித்தது.
இந்துமத வேத,சாஸ்திர,சம்பிரதாயங்களுக்கு எதிராகவும், பார்ப்பனர்களுக்கு எதிராகவும்,தலித்துகளும்,பிற்படுத்தப் பட்டவர்களும்,சிறுபான்மையினரும் இணைந்துநடத்திய ஆயுதப் போராட்டத்தின் 200வது வீரவணக்கநாள் 1.1.2018.
– நன்றி தோழர் Aasif