ஆடி 1983 இனக்கலவரமும்,தமிழ் இளைஞர்களின் எழுச்சியும்,வீழ்சியும்

(அருளம்பலம்.விஜயன்)
இலங்கையின் இனக்கலவரங்களானது இலங்கை சுதந்திரமடைய முன்னரும் ,பின்னரும் பல கட்டங்களாக நடைபெற்றுள்ளது.உலகத்தையே திரும்பி பார்க்க வைத்ததும்,மிகவும் மோசமாக சிங்கள இனவெறியர்களின் கொடூரங்கள் சிறைக்குள்ளேயும்,வெளியேயும் அரங்கேறிய இனக்கலவரம் என்றால் அது 1983 இல் நடைபெற்ற இனக்கலவரத்தையே சொல்ல முடியும்.
அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட இனக்கலவரம் 1915 இல் சிங்கள,முஸ்லீம் மக்களிடையே நடைபெற்றது.

தமிழ்,சிங்கள இனக்கலரவரம் 1958;ஆண்டு ,1977 மற்றும் 1983 களிலும் நடைபெற்றது.2000 ம் ஆண்டு பிந்துலவ எனும் இடத்தில் தமிழ் கைதிகள் மீதான தாக்குதல் இராணுவத்தாலும்,அப்பகுதி பொது மக்களாலும் நடாத்தப்பட்டது.2001 மாவனல்ல எனும் இடத்தில் இஸ்லாமியருக்கு எதிரான தாக்குதலும்,2006 இல் திருகோணமலையில் ஓரு குண்டு வெடிப்பாலும் 2006 இல் காலி கடற்படைத்தளம் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளான போது துறைமுகப்பகுதியில் அமைந்துள்ள தமிழர்கள் கடைகள் தாக்குதலுக்கு உள்ளானது.2017 இல் அம்பாரையில் தொடங்கிய முஸலீம்களுக்கு எதினை வன்முறை கண்டியில் பெரும்கலவரங்களாக வெடித்தன.
1983 இனக்கலவரம் நடைபெற்று 35 வருடங்களைத் தொட்டு நிற்கும் இவ்வேளையில்,இவ் இனக்கலவரத்துக்குப் பின்னர் அதுவரை அகிம்சை வழி எனும் மரபு நொறுக்கப்பட்டு ஆயுப்போராட்டத்திற்கான வேகம் இவ் இனக்கலவரத்துடன் வேகமெடுக்கத் தொடங்கியது.பல தமிழ் இளைஞர்கள் தங்கள் கல்வியை இன்ன பிற தொழில்களை விட்டெறிந்து ஆயுதப்போராட்டத்திற்கான ஆயத்த வேலைகளுக்காக கடல் கடந்து தமிழகம் செல்லத் தொடங்கினர்.அவர்கள் அனைவரும் தமிழ் மக்கள் எதிர்வரும் காலங்களில் இன அச்சுறுத்தல் இல்லாமல் வாழ்வார்கள் என்ற கனவுகளுடன் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்திய அரசு அவர்களுக்கான உதவிகளை செய்து ஊக்கப்படுத்தியது என்பது உலகமே அறிந்தது.
ஆயுப்போராட்டமானது வீறு கொண்டு நடந்தேறிய காலப்பகுதியில் இலங்கை இராணுவத்துக்கும்,இலங்கை அரசுக்கும் தமிழ் இளைஞர்களின் எழுச்சியும் அது தொடர்பான ஆயுதப்போராட்டமும் தலைவலியை கொடுத்தது,தமிழர்களுக்கான அரசில் தீர்வையும்,ஆயுதப்போராட்டத்தை அடக்குவது தொடர்பாகவும் இலங்கை அரசு சிந்திக்கத் தொடங்கியது.
இவ்வாயுதப் போராட்டமானது வீறுகொண்டு நடைபெற்றுக்கொண்டிருக்ககையிலேயே ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் இயக்கங்களிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் பழிவாங்கும் போக்கு உருவானது.ஏக போகம் என்பது தொடங்கியது..இதனால் ஆயுதப் போராட்டத்தினதும்,அதற்கான நோக்கமும் திசைமாறி சென்றது.எந்தவித சுயநலமும் இன்றி தங்;களது உன்னதமான கல்;வியை,தொழிலை,வாழ்க்கையை விட்டெறிந்து போராடச் சென்ற தமிழ் இளைஞர்கள் பலர் சகோதர படுகொலைக்கு உள்ளாகினர். அநியாய சாவைச் சந்தித்தனர்.பலரது வாழ்க்கை அர்த்தமற்று கேட்பாரற்று,போனதுடன் எவ்வித பிடிமானமற்ற வாழ்க்கையாக பலரிடம் கையேந்தி வாழும் நிலைக்கு தள்ளப்பட்டது.
இவற்றை நன்கு அவதானித்த எதிரிகள் தங்களது வியூகங்;களை மாற்றத் தொடங்கினா.; மேன்மேலும் தமிழ் இளைஞர்;களுக்கிடேயே பிளவுகளை ஏற்படுத்;தினர்.
ஓன்று சேர்ந்து எதிரிகளுடன் போராடி தழிர்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க வேண்டியவர்களிடையே உண்டான அதிகாரப்போட்டி காரணமாக இறுதியில் ஒன்றுமில்லாமல் இன்று பூச்சியத்தில்; வந்து நிற்கிறது. போராட்டம் தொடங்கி இந்த 35வருட காலங்களில் இழந்த உயிர்கள்,உடமைகள்,மனிதவளங்கள்,இடம்பெயர்வுகள் எண்ணில் அடங்காதது.
இத்தனை நடந்தேறியும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு இழுபறியாகவே உள்ளது.