நான் இவரைப் இதுவரையில் பார்த்தது இல்லை. ஆனால் இவரை அறிந்திருக்கிறேன்.இஸ்லாமிய மக்களை அவதூறாக கதைக்கும் பல தமிழ் பேசும் சைவர்களை கண்டிருக்கிறேன்.அவர்களுக்காக தோழர் இக்பால் பற்றியும் இஸ்லாமியர் பற்றியும் சிறு பதிவு. 1966 வடபகுதியில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தின் தொடர்ச்சியாக இறுதியாக 1970 மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயப் பிரவேச போராட்டம் நடந்தது.இதற்கு சீன சார்ப்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் உறுதுணையாக நின்றனர்.இந்த போராட்டத்தை சீர்குலைக்க தமிழரசுக்கட்சியினர் தீவிரம் காட்டினர்.ஆனாலும் தடுக்க முடியவில்லை.போராட்டம் உறுதியானது.
இதை நிறுத்த குழப்பமுடியாத தமிழரசுக்கட்சியினர் சாதிவறியர்கள் பொலிசாரின் துணையை நாடினார்கள்.அப்போது பொலிஸ் அதிபராக எஸ்.பி.சுந்தரலிங்கம் யாழ்ப்பாணத்தில் பணியாற்றினார்.கோவிலை சுற்றி பலத்த காவல் போடப்பட்டது.பொலிசாருடன் கூட நின்று முக்கியமானவர்களை போராளிகளை காட்டிக்கொடுக்கும் கும்பலும் நின்றது.இதனால் முன்னணிப் போராளிகளால் உள்ளே போக முடியவில்லை.
இந்நேரத்தில் இந்தப்படம் போராட்டத்துக்கு கைகொடுக்க இஸ்லாமிய இளைஞர்களுடன் வியாபாரிகள் போல வேசம்போட்டு இக்பால் அண்ணன் களம் இறங்கினார்.
ஆலயத்தின் உள்ள வயதான மூதாட்டி பானைக்குள் வெடிகுண்டுகள் சுமந்து வந்தார்.இந்த வெடிகுண்டுகளை வீசி முதற் போராளியாக களம் இறங்கினார் செல்லக்கிளி என்னும் வீரப்பெண்.இவளுக்கு துணையாக இஸ்லாமிய இளைஞர்கள் களம் இறங்கி சாதி வெறியர்களை விரட்டி அடித்து போராட்டத்துக்கு வெற்றியை தேடிக் கொடுத்தவர்கள் யாழ் நகர இஸ்லாமிய இளைஞ்ரகள்.அவர்களுக்கு தலைமை தாங்கியவர் தோழர் இக்பால்.
ஆனால் இந்தக்களம் அவர்களுக்கு அவசியம் அற்றது என்றபோதும் உயிர்களைப் பணயம் வைத்து எங்களுக்காக இஸ்லாமியர்கள் போராடினார்கள்.இது ஒரு வரலாற்றுப் பதிவு.
இஅதே இஸ்லாமியர்களை வெளியேற்றியபோது தட்டிக்கேட்க திராணியற்ற மனிதர்களால் நாங்களும் இருந்தோம்.இது துரோகமான அவமானமான வரலாற்றுப் பதிவு.
இஸ்லாமியர்கள் மனிதர்கள். தோழர்கள் -Vijay Baskaran
நான் 6 மாதங்களின் முன்பு யாழ் சென்ற போது கடை வீதியெங்கும் தேடித்திரிந்தது காண முயயன்ற நபர் இந்த தோழர் இக்பால். பல மூத்த முஸ்லீம் மக்களிடம் இவரை விசாரித்ததில் இவர் அப்போது யாழ் இல் இல்லை என்றும் கொழும்பில் நிற்கின்றார் என்ற தகவலுடன் ஏமாற்றத்துடன் திரும்பினேன் இவரின் தம்பி நசீம் எனது நெருங்கிய நண்பன் இதன் மூலம் இக்பாலை எனக்கு 1977 களில் இருந்து அறிமுகம். யாழ் கடைதெருவின் பள்ளிவாசல் ஒழுங்கையில் மாலயன் கபே பக்கம் இருந்து சந்துவிற்குள் உள்புகுந்தால் வலது பக்கத்தில் இருந்த முதல் தையல் கடை இவர்களுடையது. இவரின் தகப்பனாரால் நடாத்தப்பட்ட கடை பிற்காலத்தில் இக்பால் கட்சியுடன் தன்னை அதிக நேரம் கலக்க இவரின் தம்பி நசீம் இனால் வெற்றிகரமாக நடாத்தப்பட்டு வந்தது இங்கு இக்பாலை பல தடவை சந்தித்து உரையாடியுள்ளேன் தற்போது நசீம் புலிகளின் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்களை முற்று முழுதாக சுத்திகரித் போது இடம் பெயர்ந்து பிரித்தானியாவில் வாழுவதாக அறிந்தேன் தொடர்புகள் இதுவரை கிடைக்கவில்லை – (சாகரன்)