மிக மோசமான அந்நியச் செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள வேளையில், இலங்கைக்கு மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக இந்தியா 1 பில்லியன் டொலரை கடனாக வழங்கியுள்ளது.
நிதி நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா வழங்கிய இந்த கடன் வசதி இலங்கைக்கு மிகவும் முக்கியமானது என்றாலும், இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியை சமாளிக்க முடியுமா? என்பதை பற்றியே சிந்திக்கவேண்டும்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் புதுடெல்லி விஜயத்தின் போது பாரத ஸ்டேட் வங்கிக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது யாவரும் அறிந்த விடயமாகும். எனினும், இந்திய அரசாங்கத்துடன் இதற்கு முன்னர் வாங்கப்பட்ட கடன்கள், அவற்றுக்கான வட்டியுடன் எவ்வாறு மீளச் செலுத்தப்போகிறது என்பதே பெருங் கேள்வியாக உள்ளது.
ஏற்றுமதி வருவாய் குறைந்துள்ளது. இறக்குமதி ஓரளவுக்கு கட்டுப்படுத்தபட்டாலும். அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை இறக்குமதி செய்தே ஆகவேண்டிய நிலைமைக்குள் அரசாங்கம் சிக்கிக்கொண்டுள்ளது.
இதற்கிடையே கடுமையான நிபந்தனைகளின் கீழ், சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்கான தீவிர முனைப்பில் அரசாங்கம் இறங்கியுள்ளது. அதுத்தொடர்பில் சர்வக்கட்சி மாநாட்டில் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டமை அறிந்தது.
2022 ஆம் ஆண்டளவில், இந்தியா ஏற்கெனவே 1.4 பில்லியன் டொலர்களை உதவியாக வழங்கியுள்ளது, இதில் 400 மில்லியன் டொலர் பணப் பரிமாற்ற வசதி, 0.5 பில்லியன் டொலர் கடன் ஒத்திவைப்பு மற்றும் இலங்கைக்கு அத்தியாவசிய எரிபொருள் இறக்குமதியை பராமரிப்பதற்காக மற்றோர் அரை பில்லியன் ஆகியவை அடங்கும்.
, “அண்டை நாடு முதலில், இந்தியா இலங்கையுடன் உள்ளது” என்று ஒருபில்லியன் டொலர் கடனை வழங்கியதன் பின்னர், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தனது ட்விட்டரில் பதிவொன்றை இட்டிருந்தார் என்பது யாவரும் அறிந்த விடயமாகும்.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு இந்திய அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இலங்கையின் சமீபத்திய கடன் உதவிக்கு நன்றி தெரிவித்த இலங்கைப் பிரதமர், இலங்கையின் விவகாரங்கள் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி தொடர்பில் இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் விசேட கவனம் செலுத்தும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியில் தொடர்ச்சியான டொலர் பற்றாக்குறைக்கு மத்தியில் இலங்கை, இந்த ஆண்டு கிட்டத்தட்ட 7 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது.
தற்போது நாட்டு மக்கள் எதிர்நோக்கும் சில சிரமங்களைப் போக்கும் வகையில் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு விநியோகித்து வருகின்றது.
“யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு உட்பட முல்லைத்தீவில் உள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ராகேஷ் நட்ராஜ் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் உலர் உணவுகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர்” என இந்திய உயர்ஸ்தானிகராலயம் அண்மையில் தெரிவித்தது. .
“இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கு எவ்வித நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை” என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, ஒருபில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெற்றுக்கொண்டு, இந்தியா திரும்பிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“நிபந்தனைகள் ஏதுமில்லை. அத்தியாவசியப் பொருட்களுக்காக வாங்கப்பட்டது. வழக்கமாக வங்கியில் கடன் வாங்கும் போது வட்டியும் தவணையும் செலுத்தி, 3 வருடங்கள் கழித்து அடைத்துவிடுவார்.” அண்டை நாடான இந்தியா இலங்கைக்கு எப்போதும் விசுவாசமாகவே இருந்து வருகின்றது என அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், பொருளாதார, சமூக மற்றும் உலக அரங்கில் இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இலங்கை விவசாயிகளுக்கு தேவையான அளவு நனோ உரத்தை வழங்க இந்தியாவும் ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
“மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களைப் பெறுவதற்கு நாங்கள் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்கியுள்ளோம். வர்த்தக அமைச்சகம், வெளிப்படைத்தன்மையுடன், இதுவரை இறக்குமதி செய்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து, அனைவருக்கும் பொருட்களை விரைவாகக் கொண்டு வருமாறு வணிக சமூகத்தை வலியுறுத்துகிறது. பொது.” நிதி அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள், சீனாவிடம் இருந்து பெற்ற கடனை எவ்வாறு திருப்பி செலுத்துவது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கேட்டனர்.
” அவர்களைப் பற்றி அதிகம் நினைக்க வேண்டாம். ஜனாதிபதி ஒரு நீண்ட கால திட்டத்தில் தானே செயல்படுகிறார்.” தற்போதுள்ள எரிபொருள் வரிசைகள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், சில சமயங்களில் உரிய நேரத்தில் முன்பதிவு செய்து கொள்வதில், தாமதம் ஏற்பட்டுள்ளதால், தற்போது புதிய அமைச்சர்கள், அமைச்சர்கள், சம்பந்தப்பட்டவர்கள் ஆர்வத்துடன் உத்தரவு பிறப்பித்து வருகின்றனர்.
நிதி அமைச்சர் என்ற முறையில் , தேவையான ஆதரவு எங்களிடம் உள்ளது.” தருவோம். அதிகாரிகள் செய்யும் தவறுகளால் அமைச்சரும் அரசாங்கமும் தர்மசங்கடத்தில் உள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் நிதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வீட்டில் குழந்தை குழப்படி செய்தாலும், பெற்றோர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
இதேவேளை, இந்தியாவிடமிருந்து கடன் பெறுவதற்கு நிபந்தனைகள் இல்லை என அரசாங்கம் தெரிவித்த போதிலும், அமைச்சரவை அனுமதியைப் பெறுவதற்கு முன்னர் அரசாங்கம் இந்தியாவுடன் மூன்று பாதுகாப்பு உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். மூன்று பாதுகாப்பு உடன்படிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மக்களுக்கும் பாராளுமன்றத்திற்கும் வெளிப்படுத்த வேண்டும் என எல்லே குணவன்ச தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து இந்தியாவை பெரிதும் நம்பியிருப்பதுடன், இலங்கையில் பாரியளவிலான முதலீடுகளில் ஈடுபட்டுள்ளது.
இதன்படி, திருகோணமலை பவர் கம்பனி லிமிடெட் (TPCL) என்ற கூட்டு முயற்சியின் கீழ் சம்பூர் சூரிய சக்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புதிய முதலீட்டு ஒப்பந்தத்தில் இந்தியாவும் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளன. பாரிய நிலப்பரப்பை உள்ளடக்கிய திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகம் தொடர்பில் இரு தரப்பினரும் முன்னதாக இணக்கப்பாட்டுக்கு வந்திருந்தனர்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், திருகோணமலை துறைமுகம் உள்ளிட்ட கிழக்குப் பொருளாதார மையங்களைக் கைப்பற்ற இந்தியா முயற்சிக்கிறதா? என்றக் கேள்விகளும் எழும்பாமல் இல்லை.
நாட்டில் நாளுக்கு நாள் வரிசைகள் நீள்கின்றன. அத்தியாவசிய பொருட்களின் தேவைகள் அதிகரித்துள்ளன. தலையைத் தூக்க முடியாத அளவுக்கு பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இவ்வாறான நிலையில், இந்தியக் கடனினால் சமாளிக்க முடியுமா? என்பதுதான் எம்முன்னிருக்கும் கேள்வியாகும்.
(Tamil Mirror)