வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவநேசன் அவர்கள் நாடுதிரும்பும் அகதிகள் விடயத்தில் அக்கறையாக உள்ளார். அதே போல் கிழக்கு மகாண சபையும் அக்கறை கொள்ள வேண்டும். வடக்கு மாகாண சபை உறுப்பினர் க.சிவநேசன் அவர்கள் சிறைச்சாலை மறுசீரமைப்பு, புணர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களுக்கு தமிழகத்தில் இருந்து நாடு திரும்பும் அகதிகள் தொடர்பாக, அவர்கள் தாயகம் திரும்பியதும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அனுப்பிய கடிதம் 2.11.16 தேனீ வலைதளத்தில் பிரசுரமாகி இருந்தது. அவரது இந்த முயற்சி பாராட்டத்தக்கது.
நானும் அகதிகள் விடயத்தில் அக்கறை உள்ள காரணத்தால், சில விடயங்களை கூறலாம் என நினைத்து இதனை எழுதுகிறேன
சிவநேசன் அவர்கள் குறிப்பிட்டது போல் தாயகம் திரும்பும் அகதிகள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் சில நெளிவு, சுளிவுகளைக் கொண்டிருப்பது அவசியமாகும்.
இதேபோல் கிழக்கு மாகாண சபையிலும் குரல்கள் ஒலிக்க வேண்டும். ஏனென்றால் நாடு திரும்பும் மக்கள் கிழக்கைச் சோந்தவர்களாகவும் இருக்கிறார்கள.அவர்கள் பல வருடங்களுக்கு முன்னர் தங்களது இருப்பிடங்களை விட்டுவிட்டு வெறுங்கையுடன் சென்றவர்கள். அவர்களை சமூக,பொரளாதார அந்தஸ்தில் உயர்த்துவதற்கு அவர்களை ஆளும் அரசுகளுக்கே தலையாய கடமையும் உள்ளது.
இந்தியாவில் பிறந்த குழந்தைகள் நாடு திரும்பும் பட்டத்தில் அவர்கள் இந்தியாவில் முறையான ஆவணங்களைக் காண்பித்து சென்னையில் உள்ள இலங்கைத் துணைத்தூதரகத்தில் அவர்களது இலங்கை பிறப்புச்சான்று மற்றும் இலங்கை குடிருமைச்சான்றை பெற்றுக்கொள்ள முடியும்.தவறும் பட்டத்தில் தாயகம் திரும்பியவுடனும் எடத்தக்கொள்ள முடியும். 21 வயது பூர்த்தியானால் அவர்கள் இலங்கைப்பணம் ரூ.25000 கட்டவேண்டும் அது மட்டுமல்ல ஆறு மாதம் வரை காத்திருப்பத்திருப்பதடன் பின்வரும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்திய பிறப்புச் சான்றிதழ், இந்திய குடும்ப அட்டை,தாய் தந்தையின் இலங்கை பிறப்புச் சான்றிதழ்,தாய் தந்தையின் திருமணச்சான்று,நாடு திரும்பிய கடவுச்சீட்டு,இலங்கையில் வாழ்விடத்தை உறுதிப்படுத்திய பிரதேச செயலர், கிராமசேவையாளர் கடிதம், இலங்கை குடும்ப அட்டை,போன்ற ஆவணங்களுடன் உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதில் சமாதான நீதவான் உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு மேலதிகமாக தாய்வழி பாட்டன் தந்தை வழிப்பாட்டன் பிறப்புச்சான்றிதழ்கள் அல்லது அதனை உறுதிப்படுத்தக் கூடிய இணைப்பு ஆவணங்கள் தேவை.
இந்த நடமுறைகள் இலங்கையில் இருக்கின்ற போதும் அதனை இலகுபடுத்துவடன் தாயகம் திரும்புகிறவர்களுக்கு ஒரு ஆறுதலையும் கொடுக்கும். இதே போல் இந்தியாவில் கல்வி கற்றவர்கள் நாடு திரும்பும் பட்டத்தில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் இலங்கையில் சமவலுச்சான்று பெறவேண்டும். இதற்கு ரூ2500 செலுத்தவேண்டும். 10ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்தவர் முறையே க.பொ.த (சாதாரணம்),க.பொ.த(உயர்தரம்) சமவலுச்சான்று இலங்கையில் பெற வேண்டும்.
இப்படி பல்வேறு பட்ட விடயங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நாடுதிரும்பும் மக்களுக்கு, இலங்கை அரசும் கூடவே மகாண சபைகளும் சில வசதிகளை செய்யுமிடத்தே அம்மக்கள் நிம்மதியுடன் வாழ வழிமுறைகளை ஏற்படுத்தும். குறிப்பாக இருப்பிடம் இது தமிழகத்தில் இருந்து நாடு திரும்பும் பலருக்கு பெரும் பிரச்சினையாக இருக்கும் சொந்தக்காணி உள்ளவர்கள் இதில் இருந்து ஓரளவு தப்பித்தாலும் காணி இல்லாதவர்கள் பாடு பெரும்பாடாக அமைந்துவிடும். இதற்காக இலங்கையில் உள்ள அரசு காணிகள் இவர்களுக்கு வழங்குவதற்கான திட்டமும் முக்கியமானது.
(அ.விஜயன்)
மத்திய குழு உறுப்பினர்
தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி(SDPT))