இம்மாநிலம் விவசாயத்தை அடிப்படையான கொண்டதும், இந்தியாவின் மிகவும் முக்கியமான பொருளாதார மையங்களில் ஒன்றாகவும் அமைகின்றது. அஸாமில் சுமார் 38 சதவீத மக்கள் முஸ்லிம்கள் என்பதுடன், அக்குடும்பங்களில் பிறப்பு விகிதம் அதிகமாக உள்ள ஒரு மாநிலமாகும். இந்நிலையில், இந்தியா, அஸாமில் மக்கள்தொகையை மாற்றி, முஸ்லிம்களை முடிந்தவரை சிறுபான்மையினராக வைத்திருக்க விரும்புகின்றது என மனித உரிமை ஆர்வலர்கள் இந்திய (கடும்) கொள்கை வகுப்பாளர்கள் மீது தொடர்ச்சியாகவே குற்றம் சாட்டுகின்றனர்.
மறுபுறம், அஸாம் மாநிலம் நீண்ட காலமாக அரசியல் கொந்தளிப்பைக் கடந்து வருகிறது. ஏனெனில் அதன் அண்டை மாநிலங்கள் அனைத்தும் இந்திய அடக்குமுறையை எதிர்கொள்கின்றன. அண்டை மாநிலங்களில் இந்திய அரசாங்கத்தின் முஸ்லிம் இனத்தவர்களுக்கு எதிராக தொன்றுதொட்டு வரும் அடக்குமுறை மற்றும் மனித உரிமை கட்டுப்பாடுகள் காரணமாக, பலர் அஸாமுக்கு குடிபெயர்கின்றனர் என இடப்பெயர்வுகளுக்கான சர்வதேச ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. 1970 கள் மற்றும் 1980 களில், பங்களாதேஷின் பொருளாதார நெருக்கடி காரணமாக, சிலர் அஸாமுக்கும் குடிபெயர்ந்தனர். ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், பங்களாதேஷின் செழிப்பு காரணமாக, குடியேற்றம் மந்தமானது மட்டுமல்லாமல், அஸாமில் இருந்து சிலர் பங்களாதேஷுக்கும் திரும்பிச் சென்றுள்ளனர் என்றும் குறித்த ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
எது எவ்வாறிருப்பினும், இந்தியாவின் “குடிமக்களின் தேசிய பதிவு” சட்டத்தின் கீழ், அஸாமைச் சேர்ந்த சுமார் 2 மில்லியன் மக்கள் இந்திய தேச குடியுரிமையை இழக்கக்கூடும் என்பதே இப்போதைய கவலையாகும். இது உள்ளூர் மக்களிடையே பெரும் பீதியை உருவாக்கியுள்ளது.
மார்ச் 24, 1971 க்குள் பங்களாதேஷில் இருந்து தாங்கள் மாநிலத்துக்கு வந்தோம் என்பதை நிரூபிக்கக்கூடிய நபர்களுக்கு ஒரு பட்டியல் அறிவிக்கப்படுகிறது. அதை நிரூபிக்க அவர்களுக்கு 120 நாட்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், மாநில சிறைகளில் மற்றும் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள வெளிநாட்டினர் என சந்தேகிக்கப்படும் ஆயிரக்கணக்கான மக்களை இந்தியா ஏற்கெனவே தடுத்து வைத்துள்ளது, ஆனால் நாடுகடத்தப்படுவது தற்போது இந்திய வெளியுறவு கொள்கைகளுக்கு முரணாக அமையும் என்பதால், குறிப்பாக அஸாமிலிருந்து முஸ்லிம்களை பங்களாதேஷுக்கு திருப்ப அனுப்புதல் தொடர்பாக எந்த ஒரு ஏற்பாடும் இல்லாததால், நாடு கடத்த முடியாததாயினும், குறித்த மக்களுக்கு இந்தியராக வரும் வாய்ப்பை தடுப்பதன் மூலம், அவர்களின் மனித உரிமையை பேணுதல் மற்றும் முன்னேற்றம் செய்தலில் இந்திய கொள்கைவகுப்பாளர்கள் தம்மை விலத்திக்கொள்வதற்கு இத்தேசிய பதிவு முறைமையை கையாள்கின்றனர் என மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
உண்மையில், இந்த நடவடிக்கையின் பின்னால் உள்ள பல சக்திகளில் ஒன்று, “ஆர்.எஸ்.எஸ்” ஆகும் என இந்திய உள்ளூர் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் ஒரு இந்து தீவிரவாத சித்தாந்தமாகும், அது, “இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே, மற்ற சிறுபான்மையினர் அனைவரும் இந்து மதத்திற்கு மாற வேண்டும் அல்லது இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்” என்ற நிகழ்ச்சி நிரலை வெளிப்படுத்தி வருகின்றது. அனைத்து கிறிஸ்தவர்களும் மேற்கத்தேய உலகத்திற்கு திரும்பிச் செல்லலாம் என்றும், அனைத்து முஸ்லிம்களும் மத்திய கிழக்கு அரபு உலகுக்குச் செல்லலாம் என்றும் ஆர்.எஸ்.எஸ் வெளிப்படையாகக் கேட்டுள்ளது என்பதும் அதன் கொள்கையை வெளிப்படையாக அறிய உதவுகின்றது. இந்த தீவிரவாத சித்தாந்தத்தின் வரலாறு 1920 களில் தொடங்கியிருந்தாலும், ஆனால் அவர்களுக்கு கடந்த காலங்களில் போதுமான அரசியல் அதிகாரம் கிடைக்கவில்லை. அனைத்து இந்து மாற்றப்போக்கான கட்சிகளும் “பாரதிய ஜனதா” (பா.ஜ.க) குடையின் கீழ் கூடி இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மையைப் பெற முடிந்தது. இப்போது குறித்த அவர்களின் நிகழ்ச்சிநிரல்களை அனைத்து துறைகளிலும் ஊடுருவி, தங்கள் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்தக்கூடிய ஒரு நிலையைப் பெற்றுள்ளனர்.
மறுபுறம், இந்தியா தனது சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறைகள் ஈடுபட்டுள்ளது என மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இஸ்லாமை வெறுத்தல் என்பது மேற்குலகில் பெரும்பாலான வலதுசாரி – அல்லது தேசியவாத – மக்களால் தொடர்ச்சியாக கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையாக இருக்கும் இந்நேரத்தில், இந்தியாவிலும் குறித்த இஸ்லாமை வெறுத்தல் – அல்லது – வேறு மதங்களின் வளர்ச்சியை தடைசெய்தல் என்பது ஒரு இனச்சுத்திகரிப்புக்கு கொண்டு சென்று விடும் என என அவர்கள் அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர்.
இவை எல்லாம் வெறுமனே இந்தியாவின் மனித உரிமை விவகாரம் என்று மட்டும் பார்க்க முடியாத ஒன்று என்பதே இப்பத்தியாளரின் நோக்கு. இது அத்தனையும் தாண்டி ஒரு பிராந்திய யுத்த முனைப்புக்களுக்கான ஒரு நகர்வாக பார்க்கப்படவேண்டும். இஸ்லாமிய மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக இந்திய அரசாங்கம் வன்முறையை கட்டவிழ்கின்றது என்ற தொனிப்பொருளான வாசகங்கள் முஸ்லிம் நாடுகள் மத்தியில் இந்தியாவை தனிமைப்படுத்திடும் என்பது பாகிஸ்தானின் கணிக்கப்பட்ட சரியான நகர்வு என கருதினாலும், அதன் மூலம் முஸ்லிம் மக்கள் இந்தியாவில் தமது உரிமைக்காக போராட்டத்தில் ஈடுபட ஊக்குவித்தல் – அல்லது போராட்டத்தில் ஈடுபடுகையில் அதன் மூலம் எவ்வாறாக ஒரு இந்தியாவுக்கு எதிரான உள்நாட்டு மற்றும் சர்வேதேச நகர்வை மேலதிக முஸ்லிம் நாடுகளுடன் இணைந்து மேற்கொள்ளல் தொடர்பில் பாகிஸ்தான் அதிக கரிசனை செலுத்தும் என்பது ஒரு புறமிருக்க, முஸ்லிம் மக்களுக்கு எதிராக இந்தியா உண்மையிலேயே விமர்சனங்களில் கூறப்பட்டது போல கட்டுப்பாடுகளை அல்லது மனித உரிமை மீறல்களை நடைமுறைப்படுத்துமாயின், உள்நாட்டு அரசியலை தாண்டி, அந்நிலைமைகள் இந்தியாவை சர்வதேச மட்டங்களில் குறிப்பாக மனித உரிமை சார் விடையங்களில் தனிமைப்படுத்தும் என்பதும் தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிடும்