ஈழத்தமிழனை பார்த்து வாயடைத்து நின்ற இந்திய ராணுவம்
87 களில் அமைதிப்படை என பாரத்த்தில் இருந்து வந்த இந்திய ராணுவம் ஈழத்தை அதுவும் யாழ் குடாநாட்டை பார்த்து வாயடைத்து நின்றது சுவாரசியமான சம்பவம். கோடிக்கரையில் இருந்து 50 மைல் தனுஸ்கொடியில் இருந்து 20 மைலில் உள்ள இடம் தானே என எண்ணிவந்த தமிழக வீரர்களுக்கும் சிறீலங்கா தானே வங்கதேசமோ பாகிஸ்தானோ நேபாள் போலோ இருக்கும் என எண்ணிவந்த இந்திய வீரரும் யாழ்ப்பாணம் பார்த்து வாயடைத்து நின்றது சுவாரசியமான சம்பவம்.
அப்படி என்ன இருந்த்து அங்கு
எல்லா வீடுகளும் பெரிய கல் வீடுகள்.
எல்லா வீட்டிலும் யப்பான் பொருட்கள்.
யப்பான் மோட்டார் சைக்கிள்கள்.
அன்றே பலர் மலேசியா ஐரோப்பா அமெரிக்கா என வெளி தேசங்களில் உயர்பதவிகளில்.
80% பேர் அரசு சேவையில்.
அதிலும் பலர் உயர் உத்தியோகத்தில்.
எழுத்தறிவு 98% மேல்.
தரம் மிகு பாடசாலை உட்கட்டமைப்பு என யாழ்ப்பாண செழிப்பை பார்த்த இந்திய ராணுவ வீரர்களுக்கு மலசலகூடமே பார்த்திராத இந்திய கிராமங்களில் இருந்து வந்த ராணுவ வீரர்களுக்கு தலை சுத்தாதா என்ன.
அன்று என் தந்தையிடம் முத்து எனும் தமிழக வீரன் சொன்னாராம்
சார் நீங்க எங்கள விட 100 வருடம் முன்னோக்கி இருக்கீங்க நாங்க 100 வருடம் பின்னோக்கியே இருக்கோம்.இதை என் தந்தை இன்றும் சொல்வார்.
அப்படி இருந்த தமிழர் வாழ்வை சீர்குலைத்து அகதி வாழ்க்கைக்கும்
வறுமைக்கும் இட்டுச் சென்ற பெருமை புலிகளையே சாரும்.
(Thamil Manavan)