காஷ்மீர் தனக்குள் சிறப்பு அந்தஸ்தை உடைய மாநிலமாக நேருவின் அரசியல் சமரசத்தால் உருவாகி இன்று வரை தாக்கு பிடித்து செயற்பட்டது போல் நேருவின் பேரன் ராஜிவ் காந்தியினால் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையும் ஈழ மாகாண சபை என்று உணரப்பட்டு இந்த மாகாணக்காரர்களின் இராஜதந்திரமற்ற செயற்பாட்டினால் பிரேமதாஸாவின் சூழ்ச்சியிற்கு ஜேவிவி சட்ட வடிவம் கொடுத்ததைப் போல் காஸ்மீர் மக்களின் தம்மை பாகிஸ்தானின் சூழ்ச்சியினால் இன்று இந்துவத்துவா பாஜக இனரால் தனக்குள் துண்டாடப்பட்டு தனக்கான சிறப்பு அந்தஸ்தை இழந்து நிற்கின்றது.
இந்த இரண்டு தனக்குள் இரண்டாக துண்டாடப்பட்ட நிகழ்வுகளும் மிகவும் பிழையான கண்டிக்க தக்க விடயங்கள். அதேவேளை இங்கு எல்லாம் இந்நிலமை ஏற்படுவதற்கான வாய்புகளை ஏற்படுத்திய அவ் அவ் பிரதேச உரிமையிற்காக போராடிய அமைப்புகளின் தூர நோக்கற்ற இராஜதந்திரம் பிறழ்ச்சியடைந்த செயற்பாடுகளை அவரவர் சீர் தூக்கிப் பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் இருப்பதையும் நாம் தட்டிக்கழிக்க முடியாது.
எப்படி இலங்கையில் சிறுபான்மை மக்களின் தனித் தன்மைகளை அங்கீகரித்து பல்தேசிய இனங்களின் இணக்கமான வாழ்விற்கு தடையாக இலங்கை பேரினவாத அரசு செயற்படுகின்றதோ இதனை எந்த வகையிலும் குறைவில்லாமல் பாஜக தற்போது செயற்படுத்தி வருகின்றது. இது காஷ்மீருடன் நின்று போகப் போகும் விடயம் அல்ல. தொடரபோகும் இந்துவத்துவா மேலாதிக்க வெறியின் ஆரம்ப ஆட்டம் மட்டுமே.
இலங்கையை எடுத்து நோக்கினாலும் மலையக மக்களின் குடியுரிமையை பறித்து பலவீனப்படுத்தி அவர்களின் குரல் வளையை நசுக்கி இதன் பின்பு வடக்கு கிழக்கு தமிழர்களின் எழுச்சியை இல்லாமல் செய்து சாவு மணி அடித்தது இறுதியில் இணக்கமான செயற்பாட்டையுடைய முஸ்லீம் மக்களை இன்று சர்வதேச பயங்கரவாதிகளுடன் உறவு என்று கழுத்தை நெரித்து கொன்று இன்று எங்கும் பௌத்த சிங்கள பேரினவாதம் மேலெழுந்து ஏகபோகமாக நிற்க விரும்புகின்றதோ இதனையே இந்துவத்துவா என்றும் சமஸ்கிரதம் என்றும் பாஜக பேரினவாதமாக மேலெழுந்து ஏகபோகமாக தலைவிரித்தாட ஆரம்பித்திருக்கும் பாரிய நடவடிக்கையாகவே காஷ்மீரை இரண்டாக உடைத்ததை பார்க்க முடியும்.
இந்தியாவில் இந்தியளவில் இதனை எதிர்க்க காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் உள்ள நிலமையில் இலங்கையில் அவ்வாறு இலங்கையளவில் அளவில் இல்லாமல் இருப்பது பாரிய வேறுபாடு. எவ்வாறு இலங்கையில் தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு பிரிபை ஏற்கவில்லையே இது போலவே காஷ்மீர் மக்களும் தமக்குள் பிரிப்பை ஏற்கப் போவதில்லை. எனவே மேலும் நிலமை சீரற்ற சூழலுக்குள் தள்ளப்படும் வாய்புகளே அதிகம்.
இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களுக்கான பின்புல நட்பு..? சக்தியாக யாரும் இல்லாத நிலலையில் காஷ்மீர் மக்களுக்கான பின்புலங்கள் இருப்பதை நாம் இங்கு கவனத்தில் எடுத்தேயாக வேண்டும். இந்தப் பின்புலங்கள் தமது நலன்களை முன்னிறுத்தி இந்தியாவை மேலும் சிக்கலுக்குள் உள்ளாக்கும் என்பதை பாஜக பாடம் கற்க முன்பே இந்தி மக்கள் மாநிலங்களுக்கு அப்பால் ஒருங்கணைந்து செயற்பட வேண்டிய தருணங்கள் இவை. இதுவே இந்தி உபகண்டத்தின் ஒருமைப்பாட்டை நிலை நிறுத்த உதவி செய்யப் போகும் செயற்பாடாக அமையும்