🏁 இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமானம் ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரென கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார்.
🏁 இந்திய அமைதி காக்கும் படையினை இலங்கைக்கு அனுப்பி தமிழர்களுக்கு கூட்டாச்சி முறையிலான உரிமையை பெற்று தர இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா வும் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியும் முயன்றார்கள்…
இதை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்…
சிங்கள அதிபர் பிரேமதாசா வுடன் இணைந்து இந்திய அரசின் அமைதிப்படைக்கு எதிராக…
நாங்கள் அண்ணன் தம்பி களுக்கிடையே ஆயிரம் இருக்கும் இதில் மூன்றாவது நபரான இந்திய மாமாவுக்கு என்ன வேலை வெளியேறுங்கள்…
என்றதால் வேறு வழியின்றி அமைதிப்படை வெளியேறியது…
இருப்பினும் 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி அன்று ஸ்ரீபெரும்புதூரில் பாசிச புலிகளின் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
(இராமச்சந்திர மூர்த்தி.பா)