2018.
ஆண்டின் கடைசி நாள்.
புத்தாண்டைப் பார்க்க விரும்பவில்லை அவர்.
எல்லா நேரிய கலைஞர்களையும்போலவே-
குமைந்த மனோநிலையில்
இருந்திருக்கக்கூடும் .
இல்லாமலிருந்திருந்தால்தான் வியப்பு.
இடதுசாரிச் சிந்தனைகளைத் திரையில் கோர்த்த இயக்குநர் ம்ருணாள் சென்
நேற்று மரணமடைந்துவிட்டார்.
தரமான இந்திய சினமா என்றாலே
சத்யஜித் ரே, ம்ருணாள்சென் என்று
எவர் வாயும் முணுமுணுக்கும் வரலாற்றை நிறுவியவர்களுள் ரெண்டாமவரும் விடைபெற்றுச் சென்றார்.
கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றி
மேற்கு வங்க சமூகத்திலும், அரசியலிலும்
மார்க்சியத் தாக்கத்தை ஏற்படுத்திய கலைஞன்…
உலக சினமாவின் ஓர் இந்திய முகம்…
வங்காளம்,ஹிந்தி, தெலுங்கு, ஒடிசா மொழிகளில் ஏறக்குறைய 30 திரைப்படங்கள்…
மேலும் குறும்படங்கள், ஆவணப்படங்கள்…
சிறந்த திரைக்கதை – சிறந்த படம் – சிறந்த இயக்கம் என
18 தேசிய விருதுகளைப் பெற்ற திரைப்படங்கள்….
தாதாசாகேப் பால்கே,பத்மபூஷண்,
சோவியத்நாட்டின் நேரு சோவியத் விருதுகளுடன்…….
பிலிம்பேர் விருதுகள்….
1975 மாஸ்கோ திரைப்பட விழா விருது…
1979 மாஸ்கோ திரைப்பட விழா விருது…
1977 கர்லோவை வரை திரை விழா சிறப்பு விருது…
1979 பெர்லின் Interfilm விருது…
1981 பெர்லின் Interfilm விருது…
1981 பெர்லின் – Grand Jury விருது…
1983 கேன்ஸ் திரைப்பட விழா விருது…
1983 வல்லாடோலிட் Gold spike விருது…
1984 சிகாகோ திரைப்பட விழா விருது…
1984 மான்ட்ரியல் திரைப்பட விழா விருது…
1989 வெனிஸ் திரைப்பட விழா விருது…
2002 கெய்ரோ திரைப்பட விழா விருது…
– என்று பெருமைகள் சூழ்ந்த பெருமகன்.
2002இல் வெளியான அவரது
கடைசித் திரைப்படத்துக்கு
இப்படிப் பேர் வைத்தார் :
‘இது என் பூமி’.
அது நிலைபெறும். ஆமாம்.
வருத்தமுடன் அல்ல.
வாழ்த்தி வழியனுப்புகிறோம்
தோழர் ம்ருணாள்.
(Rathan Chandrasekar)