மொத்தமாக 28 (சற்று மேலாக கீழாக வரலாம்,
முஸ்லீம் தமிழ் பேசுபவர்கள் நீங்கலாக) தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்றாக வெற்றி தோல்விகள் இந்த பாராளுமன்றத் தேர்தலில்
கனவான் அரசியலாக ஆரம்பித்த டிஎஸ், டட்லி, இராமநாதன், அருணாசலம் என்றாக இலங்கை அரசியல்
‘போர் என்றால் போர்….’ என்று போர் முழக்கம் கொண்ட வெற்றியாக ஆறில் ஐந்து பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்ற வெற்றியைக் கொண்டாடியவர் ஜேஆர் ஜெயவர்த்தன.
இது நடைபெற்றது 1983 தமிழர்களுக்கு எதிரான ஜுலை 23 படுகொலைக்கு பின்னராக பிரித்தானியா பத்திரிகையாளர் சந்திப்பில் ஜேஆரினால் வழங்கப்பட்ட செய்தி செயற்பாடு
இந்த அறுதிப் பெரும்பான்மை வெற்றியிற்குள் ஆன்றைய எதிர்கட்சியான சிறீமாவோ பண்டாரநாயக்காவின் குடியுரிமையைப் பறித்து முடமாக்கிய தேர்தலால் அது கிடைத்து.
போரில் வென்ற ‘வீரையா’ என்ற புகழின் மமதையில் கிடைத்த வெற்றி மூன்றில் இரண்டிற்கு அண்மையாக வென்றவர் மகிழந்த ராஜகபபக்ச.
இது நடைபெற்றது 2009 மே மாதம் தமிழர்களுக்கு எதிரான முள்ளிவாய்கால் படுகொலைகளுக்கு பின்னரான 2020 ஏப்ரல் மாதத் தேர்தல் வெற்றிக்கு பின்னர். சிங்கள மக்களின் பெருபான்மை வாக்குகளால் போரில் வென்றதினால் பெற்றுள்ளேன் என்ற மமதையான பேச்சுக்கள் வெளிவந்தன.
இவ்விரண்டு வெற்றிகளையும் அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு பதிலாக இனி வரும் காலங்களிலும் தேர்தல் வெற்றிகளைப் பெறுவதற்கான பேரினவாத ஆணிகளை அடித்துத் தொடர்ந்தவர்களாக இந்த இருவரும் செயற்பட்டனர்.
கூடவே இவ்விரு வெற்றிகளிலும் தமிழ் பேசும் மக்களின் பங்களிப்பு இல்லாமல் நடைபெற்ற வெற்றிகள் ஆகும்
2015 ம் ஆண்டுப் பொது தேர்தலின் பின்பு எதிர்கட்சி அற்ற அல்லது ஆளும் கட்சியின் அங்கமாக செயற்படும் தமிழ் கட்சியுடன் இணைந்து நல்லாட்சியாக இண்டைக்கு… நாளைக்கு… தீர்வு என்று இறுதிவரை சாக்குப் போக்கு காட்டுவதற்குரிய நிபந்தனை அற்ற ஆதரவை கொடுத்ததினால் ஆட்சிப் பீடம் ஏற்ற ரணிலினால் நடாத்தப்பட்ட அரசு ஆகும்.
இங்கு பெரும்பான்மையும் இல்லை அப்போ அறுதிப் பெருபான்மையும் இல்லை ஆனால் மகிந்தாவின் ஆதரவும் தமிழ் தரப்பு ஆதரவும் பாராளுமன்றத்தில் எல்லோரும் முழு அளவில் இணைந்த ஒற்றை அரசு என்றான நிலையில் நல்லாட்சி பொல்லாத ஆட்சியாக முடிவுற்ற ஆட்சியாகக் கடந்தும் சென்றுவிட்டது.
ரணில் தனது மக்களுக்கும் ஒன்றும் செய்யவில்லை ‘நண்பேன்டா’ என்று நம்பிய மக்களுக்கு ஒன்றும் செய்யாது அடுத்த தேர்தலில் தான் ஒருவர் மட்டும் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்படாமல் பாராளுமன்றம் சென்ற கனவான் நிலைக்கும் தள்ளப்பட்டார்.
கூடவே இந்த வெற்றி ஆட்சி தமிழ் பேசும் மக்களின் முழுமையான பங்களிப்பு இல்லாமல் நடைபெற்ற முடியாத ஆட்சியிற்கான வெற்றியாகவும் அமைந்தது.
மீண்டும் மகிந்தா….. கோத்தபாய…..
ரணிலின் நீண்ட நாள் ஏன் ஆயுள் கனவை தேர்தலுக்கு முகம் கொடுக்காத நாட்டின் தலைவர் என்ற பதவியை பெற்றுக் கொடுக்க ‘அரகலய’ கொடுத்த வாய்ப்பாக தொடர்ந்தாலும்…. ஜனநாயகத்தில் மக்களின் வாக்குககளால் இன்று
எமக்கு மூன்றில் இரண்டு தேவையில்லை என்பதை வெளிப்படையாக கூறி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வென்றவர்கள் ஜேவிபி என்ற ஆளுமையின் தலமையில் தேசிய மக்கள் சக்தியாக சகோதரர் அனுர குமார திசநாயக்கா
இந்த வெற்றி இதற்கு முந்தைய வெற்றிகளை விட சிறப்பானது வித்தியாமானது இந்த வெற்றியில் நாடு முழவதற்கும் பங்குண்டு சிறப்பாக தமிழ் பேசும் மக்களும் பங்காளிகள்.
உண்மையில் முதல் இருவரையும் விட அதிக பொறுப்பு சுமை இருப்பதாக அனுராவின் வெற்றியை என்னால் உணர முடிகின்றது.
பெரும்பான்மை சிங்கள மக்களின் அதுவும் பேரினவாத சிந்தனையாளர்களை திருப்திப்படுத்தும் செயற்பாடுகளை தமது ஆட்சியில் செய்தல் என்று பயணிக்க வேண்டி கடப்பாடு அவர்களுக்கும் இருந்தது
ஆனால் அனுராவிற்கு பேரினவாதிகள், பெரும்பான்மை சிங்கள மக்கள், தமிழ் பேசும் மக்கள் என்றாக எல்லோருக்குமான அரசாக அவர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் சுமையை அவர் பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டாக பெற்று இருக்கின்றார்.
உண்மையில் இது பெரும் சுமைதான்
இதற்கும் அப்பால் இடதுசாரிகள் என்பதான பார்வையும் அது சார்ந்த எதிர்பார்பும் மேற்கத்திய வல்லூறுகிளன் கவிழ்ப்புகளுக்கும் தாக்குப் பிடித்தாக வேண்டும் என்ற சுமைகளும் உண்டு.
கூடவே சீனா, இந்தியா என்று நாட்டின் பாகங்களை உதவிகள் என்ற வகையில் கூறு போடுபவர்களையும் சமாளித்தாக வேண்டும்.
அலன் டேல் இன் கொலைக்கு பின்னரான 50 வருடங்களுக்கு பின்னர்… ஏற்பட்ட தேர்தல் வெற்றியில், றோகனா விஜயவீரா இன் 35 வருட கொலைக்கு பின்னர்…. ஏற்பட்ட தேர்தல் வெற்றியில் சிலியின் தற்போதைய ஆட்சி செயற்பாடுகள் அனுபவங்கள் இலங்கையிற்கும் பல விதங்களில் பொருந்தி இருக்கும்.
எனவே அனுராவின் செயற்பாடுகள் சிலியின் அனுபவங்களுடன் பொருத்திப் பார்த்து நகர்த்துதல் என்பவும் இங்கு தேவையாகின்றது
இவை அனைத்தும் இருந்தாலும் தாக்கு பிடிக்க முடியும் வெல்ல முடியும் சுமக்க முடியும் மக்களுக்கான அரசாக தொடர்ந்தும் செயற்படுவதன் மூலம்.
இத்தனைக்கும் அவரிடம் இருக்கும் அனுபவக் குறைவான அதிக பாராளுமன்ற உறுப்பினர்கள் என்றாலும் 50 வருடம் கடந்த அரசியல் ஆர்வலர்கள் செயற்பாட்டாளர் என்று பலரும் இருக்கின்றனர்.
இதற்கு முதலில் மக்களின் பொருளாதாரச் சுமை என்பதை தீர்பது என்பதில் இருந்து ஆரம்பித்து சகல இலங்கை மக்களினதும் ஒத்துழைப்பு உழைப்பு என்பதால்தான் இது சாத்தியம் ஆகும் என்றான அரசியல் அமைப்பு அது திருத்தமாக புதிய அரசியல் அமைப்பாக இலங்கையில் வாழும் அனைத்து தேசிய இனங்களும் தமக்கான தனித்துவம், அடையாளம், உரிமம் என்பவனவற்றை பெருமையாக சுமந்து கொண்ட இணைந்து பயணிக்கும் நாடாக பயணிப்பதன் மூலமே இதனைச் சாத்தியம் ஆக்கலாம்.
இதற்குத்தான் மக்கள் உங்களுக்கு ஆணை தந்து இருக்கின்றார்… அது மூன்றில் இரண்டாக
தமிழ் மக்கள் பெரும் அளவில உங்களுக்கு வாக்களித்து இருந்தாலும் தமிழ் மக்களின் வீட்டுச் சிந்தனை இன்னும் மாறவில்லை தங்களுக்குள் மக்களுக்கான ஒரு முற்போக்கு மாற்றுச் சிந்தனையை அவர்கள் இனம் காணவில்லை.
இனம் காட்ட வேண்டி சமூக ஜனநாயகச் செயற்பாட்டாளர்களும் அதிகம் மக்களிடம் இதனை எடுத்துச் செல்லவில்லை என்ற விமர்சனம் என்னைப் போன்றவர்களை நோக்கியதும் ஆகும்.
மாறாக 50 இற்கு 50 என்றும் ஏமாறுவதற்கும்….. சமஸ்டி என்று வெல்வதற்கும்…. தனிநாடு என்று அதற்கான சர்வஜனவாக்கெடுப்பு என்று நம்புவதற்கும் தமிழ்ச் தேசியம் என்று தொடர்ந்தும் நம்புவதற்கும் ஏமாறுவதற்கும் இனியும் அவ்வாறு நடப்பதற்கும் தமிழர்கள் அரைவாசிப் பேர் இருக்கின்றனர் என்றே தேர்தல் முடிவுகளின் அந்த எட்டு ஆசனங்கள் கட்டியம் காட்டி நிற்கின்றது.
இந்த 50 வீதமானவர்களின் விகிதம் இனி அதிகரிக்குமா…? அல்லது நீறு நீத்துப் போகுமா….? என்பது தென் இலங்கையில் இனி நடைபெறப்போதும் அரசியல்… ஆட்சிதான் தீர்மானிக்கப் போகின்றது.
இந்த 50 வீதமானவர்களின் விகிதம் இனி அதிகரிக்குமா…? அல்லது நீறு நீத்துப் போகுமா….? என்பது தென் இலங்கையில் இனி நடைபெறப்போதும் அரசியல்… ஆட்சிதான் தீர்மானிக்கப் போகின்றது.இதனை அனுரகுமார திசநாயக்காவின் அரசு புரிந்து செயற்பட்டாக வேண்டும்.
இத்தனைக்கும் இந்த 50 இற்கு 50, சமஸ்டி, தனிநாடு, தேசியம் என்றால் என்ன..? என்பதில் பலருக்கும் புரிதல் இல்லாமல் எல்லோரும் கூறுகின்றார்கள் நாமும் கூறுகின்றோம் என்றாக பயணப்படும் மக்கள் கூட்டமாக தொடர்ந்தும் சமான்ய மக்களைப் பேணுவதில் மட்டும் கவனமாக செயற்படுகின்றனர் இவர்கள்.
இது வரை காலமும் தேசியக் கட்சிகளின் ஆதரவாளர்கள், கட்சிகள் அல்லது தேர்தலுக்கு பின்னர் வெற்றி அரசு ஆதரவாளர்களாக மாறி ஆளும் கட்சியுடன் இணைந்தவர்கள் அரசுடன் இணக்க அரசியல் என்று அபிவிருத்தி என்றாக வெறும் பொக்கற்றுடன் சென்று சொத்துகளை அதிகம் சேர்த்தவர்களாக செயற்பட்டே வந்தனர் பெரும்பான்மையினர்.
இவர்களை இனம் கண்டு இம் முறை வீட்டில் உட்கார வைத்த தமிழ் பேசும் மக்கள்
தேசியம் தேசியம் என்று புதிசு புதிசாக குறுத் தேசியக் காய்ச்சல் காய்ந்தவர்களின் கடந்த 75 வருட உசுப்பேத்தல்களுக்கு இம்முறை ஆப்பு அடித்துவிட்டனர் 50 வீதமான தமிழர்கள்.
மே 2009 ஆண்டிற்கு பின்னரான புலித் தேசியத்தை தவிர்க்க முற்பட்ட சம்மந்தரும் அவரின் வழித்தோன்றல் சுமந்திரனின் அரசியல் செயற்பாடுகள் இம்முறை தமிழரசுக் கட்சி தமிழர் மத்தியில் அறுதிப் பெரும்பான்மை பெறக் காரணமாகி இருக்கின்றது.
இல்லாவிடால் ஒரு நாடு இரு தேசம் ஜனநாயகத் தேசியம் இதற்கும் அப்பால் அதி தீவிரம் காட்டிய குறும் தேசியவாதிகளுக்கு கிடைத்து சிறீதரன் என்றவர் காட்டும் ஏக தேசியத் தலைவரின் ஒற்றை விரல் அடையாள அரசியல் இன்றும் சுருங்கி இருக்கும்
மட்டக்களப்பின் மூன்று இனி கிழக்கின் மாணிக்கத்தை சுமந்திரன் வழியில் அதிகம் வயலின் வாசிக்க வைக்கும்.
முஸ்லீம் வெறுப்பு அரசியல் கிழக்கில் கொடுத்த பாடம் பிள்ளையான் வகையறாக்களுக்கு பாடமாக அமையலாம்.
மலையகத்து தொண்டமான் தொழிற்சங்க சந்தாப் பண அரசியல் லயனுக்கு அப்பால் மக்களை அழுத்துச் செல்லாதும் இனி மெது மெதுவாக கரையும்.
ஆனால் விளிம்பு நிலை மக்களை உண்மையாக மையப்படுத்தி இடதுசாரி அரசியலை யார் செய்தாலும் அதற்கான வாய்ப்புகள் அங்கு உண்டு.
அருண் சித்தார்த் போன்றவர்கள் தனது பேரினவாதக் கட்சியுடனான இணைப்பில்லாது தமது அரசியலை வர்க்க அடிப்படையில் சமூக ஒடுக்குமுறைக்கான அரசியலை தொடர்ந்து இருந்தால்….
அவசர அவசரமாக தாறுமாறாக ஆனால் சில உண்மைகளைப் பேசிய அருசுனாவின் இடம் அருணிற்கு கிடைத்திருக்கலாம். அதனை அவர் பெரும் தேசியக் கடசியுடன் அதுவும் ஐதே கட்சி என்றான முதலாளித்துவக் கட்சியுடன் இணைத்து தற்போது தொலைத்தாகவே உணர முடிகின்றது.
அன்றேன் 50 வீதற்கு மேற்பட்ட தமிழ் மக்களுக்குள் சிறுபான்மையினர் என்று கூறி கொள்ளப்படும் கணிசமான வாக்கு விகிதாரப் பிரநிதித்துவத்தால் உடுப்பிட்டி இராசலிங்கம் மாதிரி இல்லாத வெற்றியைக் கொடுத்திருக்கும். இன்று பொதுவாழ்வில் அவர் இதனைத் தொலைத்துவிட்டதாக உணர்கின்றேன்.
20 வரையிலான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு அமையப் போகும் புதிய அரசில் சிறுபான்மையினரின் குரல் வலுவாக எதிரொலிக்குமா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
மூன்றில் இரண்டு சுமையுடன் தமது ஆட்சியை ஆரம்பிக்க போகும் அனுராதபுரத்தின் கிராமமான தம்புத்தேகமவின் மைந்தன் நாட்டின் மையப்புள்ளியாக தனது வாழ்வை ஆரம்பிதிருப்பது போல் அனைத்து இலங்கை மக்களுக்குமான மையமான தலமைத்துவ ஆட்சிக் கொடுப்பார் என்று நம்புவோம்.
{2024 இலங்கை பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்:
- (தேசிய மக்கள் சக்தி (NPP) மொத்தம் 159 உறுப்பினர்கள் (நேரடித் தெரிவு: 141, தேசியப் பட்டியல் மூலம்: 18)
- ஐக்கிய மக்கள் சக்தி(SJP) மொத்தம் 40 உறுப்பினர்கள் (நேரடித் தெரிவு: 35, தேசியப் பட்டியல் மூலம்: 5)
- அகில இலங்கை தமிழரசுக் கட்சி(AITK) மொத்தம் 8 உறுப்பினர்கள் (நேரடித் தெரிவு: 7, தேசியப் பட்டியல் மூலம்: 1)
- புதிய ஜனநாயக முன்னணி: (நேரடித் தெரிவு : 3)
- சிறீலங்கா பொது ஜன பெரமுன: (நேரடித் தெரிவு: 2)
- சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்: (நேரடித் தெரிவு: 2)
- ஐக்கிய தேசியக் கட்சி: (நேரடித் தெரிவு : 1)
- ஜனநாயக தமிழத் தேசிய கூட்டமைப்பு: (நேரடித் தெரிவு : 1)
- அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்: (நேரடித் தெரிவு : 1)
- அகில இலங்கை மக்கள் கட்சி : (நேரடித் தெரிவு : 1)
- இலங்கை தொழிலாளர் கட்சி: (நேரடித் தெரிவு : 1)
- சுயேச்கை குழு 17: (நேரடித் தெரிவு : 1)
}