அநகாரிக தருமபாலர், ஏ.இ.குணசிங்கா போன்றோரைப் பின்பற்றியே டி.பி. விஜயதுங்க சிங்களவர்களை மரத்துக்கும் தமிழர்களை அம்மரத்தைச் சுற்றிப் படரும் கொடிக்கும் அந்தக் கொடிக்கு மரத்துக்கு அப்பால் வாழ்வு இல்லை என்ற கோட்பாட்டை முன்வைத்தார்.
“The majority race should be safeguarded for the livelihood of the minority races. When the tree is safe, the vines can get entangled in it and grow. If the majority race is divided and it seeks the assistance of minority races for power, no fruitful activity could take place.” (Sunday Times, 30 January 1994)
ஸ்ரீலங்கா ஒரு பவுத்த நாடு
சிங்கள – பவுத்த கடும்போக்காளர்களில் ஒருவரான சனாதிபதி சந்திரிகா “தமிழர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் அல்லர். இந்த (ஸ்ரீலங்கா) நாட்டைச் சேராதவர்கள் எப்படித் தனிநாடு கோரமுடியும்?” என தென்னாபிரிக்க நாட்டுத் தொலைக் காட்சிக்குக் கொடுத்த செவ்வியில் (1995) கேட்டிருந்தார். அதற்கு முன்னர் அனுராதபுரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா ஸ்ரீலங்கா ஒரு பவுத்த நாடென்றும், நாடும் ஒன்று மக்களும் ஒன்று என்று பேசியிருந்தார்.(http://www.sangam.org/taraki/articles/2006/11-29_Kumaratunge.php?uid=2092)
செப்தெம்பர் 23, 2008 இல் கனடாவில் வெளிவரும் National Post என்ற நாளேட்டுக்கு செவ்வி கொடுத்த படைத்தளபதி சரத் பொன்சேகா இப்படியான இனவாதக் கருத்தை வலியுறுத்தியிருந்தார்.
“I strongly believe that this country belongs to the Sinhalese but there are minority communities and we treat them like our people…We being the majority of the country, 75%, we will never give in and we have the right to protect this country…We are also a strong nation … They can live in this country with us. But they must not try to, under the pretext of being a minority, demand undue things.” (http://www.nationalpost.com/news/story.html?id=832374)
“இந்த நாடு சிங்களவர்களுக்குச் சொந்தமானது. ஆனால் சிறுபான்மை சமூகங்களும் இருக்கின்றன. அவர்களை நாங்கள் எங்களைப் போலவே நடத்துகிறோம் ……….. நாங்கள்தான் நாட்டின் பெரும்பான்மை மக்கள் – 75 விழுக்காடு – எனவே இந்தநாட்டைப் பாதுகாக்கும் உரிமை எங்களுக்குத்தான் உண்டு. அதனை நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம்….நாங்கள் பலம்வாய்ந்த நாட்டை உடையவர்கள் …. அவர்கள் (சிறுபான்மையினர்) எங்களோடு இந்த நாட்டில் வாழலாம். ஆனால் அவர்கள் – சிறுபான்மை என்ற போர்வையில் – தேவைக்கு அதிகமானவற்றை கோர எத்தனிக்கக் கூடாது.”
சரத் பொன்சேகா போலவே சுற்றுச் சூழல் அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர்களில் ஒருவருமான சம்பிக இரணவக்க கீழ்க்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
The Minister of the Environment, Champika Ranawaka, who belongs to the extremist Jathika Hela Urumaya group, went further and opined that “The Sinhalese are the only organic race of Sri Lanka. Other communities are all visitors to the country, whose arrival was never challenged out of the compassion of Buddhists. But they must not take this compassion for granted. The Muslims are here because our kings let them trade here and the Tamils because they were allowed to take refuge when the Moguls were invading in India. What is happening today is pure ingratitude on the part of these visitors.” (http://www.nation.lk/2008/10/26/newsfe6.htm)
இந்த நாடு சிங்களவர்களுக்குச் சொந்தமானது. ஆனால் சிறுபான்மை சமூகங்களும் இருக்கின்றன. அவர்களை நாங்கள் எங்களைப் போலவே நடத்துகிறோம் ……….. நாங்கள்தான் நாட்டின் பெரும்பான்மை மக்கள் – 75 விழுக்காடு – எனவே இந்தநாட்டைப் பாதுகாக்கும் உரிமை எங்களுக்குத்தான் உண்டு. அதனை நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம்….நாங்கள் பலம்வாய்ந்த நாட்டை உடையவர்கள் …. அவர்கள் (சிறுபான்மையினர்) எங்களோடு இந்த நாட்டில் வாழலாம். ஆனால் அவர்கள் – சிறுபான்மை என்ற போர்வையில் – தேவைக்கு அதிகமானவற்றை கோர எத்தனிக்கக் கூடாது.”
சரத் பொன்சேகா போலவே சுற்றுச் சூழல் அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர்களில் ஒருவருமான சம்பிக இரணவக்க கீழ்க்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
The Minister of the Environment, Champika Ranawaka, who belongs to the extremist Jathika Hela Urumaya group, went further and opined that “The Sinhalese are the only organic race of Sri Lanka. Other communities are all visitors to the country, whose arrival was never challenged out of the compassion of Buddhists. But they must not take this compassion for granted. The Muslims are here because our kings let them trade here and the Tamils because they were allowed to take refuge when the Moguls were invading in India. What is happening today is pure ingratitude on the part of these visitors.” (http://www.nation.lk/2008/10/26/newsfe6.htm)
“சிங்கள இனம் மட்டுமே ஸ்ரீலங்காவின் ஒரே பூர்வீக இனமாகும். ஏனைய சமூகங்கள் இந்த நாட்டுக்கு வந்துள்ள வருகையாளர்கள் ஆவர். அவர்களது வருகையை நாம் பவுத்தர்களுக்குரிய இரக்க குணம் காரணமாக எதிர்ப்புக் காட்டாது விட்டு விட்டோம். ஆனால் இந்தக் கருணையை அவர்கள் வெறுமனே எடுத்துக் கொள்ளக் கூடாது. இங்கே முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்றால் எமது அரசர்கள் அவர்களை வாணிகம் செய்ய அனுமதித்தார்கள். தமிழர்களைப் பொறுத்தளவில் அவர்கள் இந்தியாமீது மொகலாயர்கள் படையெடுத்த போது அடைக்கலம் கேட்க அனுமதிக்கப்பட்டவர்கள். இப்போது நடப்பது என்னவென்றால் அந்த வருகையாளர்கள் முற்றிலும் செய்நன்றி இல்லாது நடந்து கொள்கிறார்கள்.”
சிங்கள – பவுத்த பேரினவாதிகள் இலங்கை முழுவதும் தங்களுக்கே உரியதென்றும் இலங்கை சிங்கள – பவுத்தர்களுக்கு உரிய நாடென்றும் தமிழர்கள் படையெடுத்து வந்தவர்கள், காலிகள், கொள்ளைக்காரர்கள், புறசமயத்தவர் என்றும் மகாவம்சம் சித்திரிக்கிறது. இன்றைய சிங்கள – பவுத்த இனவாதிகள் மலைநாட்டுத் தமிழர்கள் கூலிவேலை செய்வதற்காகத் தென்னிந்தியாவில் இருந்து இங்கு கொண்டு வரப்பட்டவர்கள் என்கிறார்கள். அந்த மக்கள் இந்த நாட்டில் குடியேறி 200 ஆண்டுகளாகி விட்டன. மாடாக உழைத்து காடுகளைப் பசும் தோட்டங்களை உருவாக்கி ஓடாகப் போனவர்கள். அப்படியிருந்தும் அந்த மக்களைக் கேவலமாகப் பார்க்கும் போக்கே காணப்படுகிறது.
ஒட்டுமொத்தத்தில் தமிழர்களுக்கு எதிரான இனவாதத்தை இந்த சிங்கள – பவுத்த இனவாதிகள் தென்னிலங்கையில் விதைத்து வருகிறார்கள். இலங்கையில் உள்ள தமிழர்களை அடக்கி ஒடுக்கி அவர்களது நிலத்தை அபகரித்து அவர்களது அடையாளத்தை அழித்து விடத் திட்டமிட்டுச் செய்யப்படும் எத்தனம் இதுவாகும். மறுபுறம் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் தங்கு தடையின்றி நடந்து கொண்டிருக்கிறது. பாவற்குளத்தில் ஆசியாவில் மிக உயரமான புத்தர் சிலை கட்டுவதற்கான ஆயத்தங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பாவற்குளம் நூறு விழுக்காடு தமிழ்க் கிராமமாகும். இதே வேகத்தில் சிங்களக் குடியேற்றம் தொடருமானால் கிழக்கு மாகாணம் போல வடக்கிலும் தமிழர்கள் சிறுபான்மை ஆக்கப்பட்டுவிடுவர் என்பது நிச்சயம்.
உண்மையில் இலங்கையின் பூர்வீக குடிமக்கள் யார்?
இந்த நாடு சிங்கள பவுத்தர்களுக்கு மாத்திரம் உரியது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று பொதுபல சேனாவின் தலைவர் ஞானசார கல பொட தேரர் கூறியிருக்கிறார்.
இதற்கு மறுப்புத் தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் “இந்த நாட்டின் ஆதிக் குடிகள் வேடர்கள், நாகர்கள் என்பதை கல பொட தேரர் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனை ஏற்றுக்கொள்ளாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறித் தத்தம் மூதாதையர்கள் வந்த நாடுகளுக்குத் திரும்ப வேண்டும். ஏன் பவுத்த மதம் கூட இந்தியாவில் இருந்து வந்தது தான். அதையும் பாரத நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். எனவே இத்தகைய நடைமுறைச் சாத்தியமில்லாத கூற்றுக்கள் கூறுவதை நிறுத்த வேண்டும்” என கொழும்பில் மே 22, 2013 அன்று இடம்பெற்ற அதிகாரத்தைப் பகிர்ந்து அய்க்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாட்டில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில் “தமிழர்களின் நிலம், கடல் பறி போகின்றது. தமிழர்களின் மொழி, கலாசாரம், மதம் அழித்தொழிக்கப்படுகின்றது. அரசியல் அமைப்பில் 13 ஆவது திருத்தம் என்ற உரிமையைக் கூட வழங்க மறுத்துவிட்டு, இந்த நாட்டை சிங்கள, பவுத்த நாடு என்று அறிவிக்கின்றீர்கள். விமல்வீரவன்ஸ, சம்பிக்க இரணவக்க, குணராசஅமரசேகர, ஞானசார கல பொட தேரர் ஆகியோர் உசுப்பி விடப்பட்டுள்ளனர். இதற்குப் பின்னால் இந்த அரசு இருக்கின்றது” எனக் குற்றம் சாட்டினார்.
“செப்தெம்பர் மாதம் வடக்கு மாகாண சபைத் தேர்தல் என்று சர்வதேச சமூகத்துக்கு உறுதி வழங்கிவிட்டு இன்று நீதிமன்றத்தின் பின்னால் சென்று ஒளிவதற்கு இந்த அரசு முயற்சிக்கின்றது. இப்படியே போனால் ஓடி ஒளிவதற்கு இடமில்லாத நிலைமை ஏற்படப் போகின்றது” என்றார்.
சிங்கள – பவுத்த பேரினவாதிகள் விஜயனது வருகையோடுதான் இலங்கைத் தீவின் வரலாறு தொடங்குகிறது எனப் பேசியும் எழுதியும் வருகிறார்கள். ஆனால் இந்தக் கதையைக் கூறும் மகாவம்சமே விஜயனது வருகைக்கு முன்னர் இலங்கைத்தீவில் நாகர், இயக்கர், அரக்கர், புலிந்தர் இருந்தனர் என்றும் அவர்கள் கொற்றமும் கொடியோடும் அரசாட்சி செய்தார்கள் என்றும் கூறுகிறது.
விஜயனது வருகைக்கு முன்னர் நாகர், இயக்கர் வம்சத்தைச் சேர்ந்த மன்னர்களே இலங்கையை ஆண்டு வந்தார்கள். அந்த அரசர்களுள் மணியக்கிகா, மகோதரன், குலோதரன் ஆகிய நாகவம்ச மன்னர்களும், குவேனி, மஹாகல சேனன் ஆகிய இயக்க வம்ச மன்னர்களும் குறிப்பிடத் தகுந்தவர்கள்.
இலங்கையில் உள்ள நாகர் புத்தர் சிலை
மகாவம்சம் மற்றும் ஜாதக கதைகள் இலங்கையை தம்பபாணி எனக் குறிப்பிடுகிறது. இலங்கையில் உள்ள நாகதீபம், கல்யாணி (இன்றைய களனி) என்ற இடங்களையும் அங்கே இயக்கர்களும் இயக்கிகளும் வாழ்ந்தார்கள் எனக் குறிப்பிடுகின்றன. மகாவம்சம் இயக்கர்கள் தெற்கிலும் (மகியங்கன) நாகர்கள் வடக்கிலும் (நாகதீபம்) வட மேற்கிலும் (கல்யாணி) வாழ்ந்ததாகக் குறிப்பிடுகிறது. இவர்கள் திராவிட இன மக்களாவர்.
இந்த நாகர்கள் கோதாவரி மற்றும் நர்மதா நதிகளுக்கு இடையில் மற்றும் அவந்தி மற்றும் மவுரியக் காலங்களில் மற்றும் அதற்குப் பின்பும் வாழ்ந்த நாகர்களுடன் தொடர்பு உள்ளவர்களாக இருக்கக்கூடிய சாத்தியம் உள்ளது. பழைய தமிழ் மரபுப்படி பல்லவ வம்சத்தின் பாரம்பரியம் பீலிவளை என்ற நாக இளவரசியை சோழன் கிள்ளிவளவன் திருமணம் செய்து கொண்டதன் மூலம் உருவானது எனச் சொல்லப்படுகிறது.
தென்பகுதி துணைக்கண்டத்தில் அவர்களுடைய பெயருடன் தொடர்புள்ள நாகர்கோவில், நாகப்பட்டினம்,நாக்பூர் போன்ற ஊர்கள் உள்ளன.
ஈழத்தில் பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட பல தொல்லியற் சான்றுகள் தமிழ் (திராவிட) இனமக்கள் வாழ்ந்ததை உறுதிப் படுத்துகின்றன. பழைய கற்காலம் தொட்டு (ஒரு இலட்சம் வருடங்களுக்கு முன்னர்) திராவிட இனமக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். கிமு 10 ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே ஈழம் எங்கும் நாகரிகம் மிக்க மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. விவசாயத்திலும் நீர்பாசனத்திலும் சிறந்து விளங்கிய மக்கள் குடியிப்புகள் காணப்படுகின்றன. பயிர்செய்நிலம், சிறுகுளம், இடுகாடு கொண்ட குடியிருப்புகள், இம் மக்களின் இரும்பு உபயோகம், இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை, ஆழ்கடல் மீன்பிடி முறை, நீர்ப்பாசன முறை, கறுப்பு மட்பாண்ட உபயோகம் என்பன காணப்படுகின்றன. ஆனைக்கோட்டை, கந்தரோடை ஆகிய இடங்களில் எலும்புக் கூடுடன் கிடைத்துள்ள ‘கோவேந்தன்” ‘கோவேதன்” என்ற சொற்கள் பொறிக்கப்பட்ட வெண்கல முத்திரையும், வடமேற்கே பூநகரி தொடக்கம் களனி ஆற்றங்கரைவரையும், தென்கிழக்கே மட்டக்களப்பு தொடக்கம் அம்பாறை மாவட்டம் வரையும் காணப்படும் கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்கள் என்பனவும் கிமு 10 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே ஈழத்தில் நாகரிகம் மிக்க தமிழ் (திராவிட) இனம் வாழ்ந்ததைத் தெரிவிக்கின்றன.
பவுத்தம் இலங்கையில் பரவி ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னரே பவுத்த நாகர்களுக்கும் பவுத்த தமிழர்களுக்கும் சிங்கள அடையாளம் கொடுக்கப்பட்டது. இலங்கையில் இனப் பிரிவையும், மதப் பிரிவையும் உண்டாக்கியவர்கள் புத்த பிக்குகளே.
பின்னால் வந்த இசுலாம் மதம் இன்னோர் பகுதித் தமிழர்களைப் பிரித்தெடுத்துவிட்டது. தொடர்ந்து வந்த கிறித்தவ மதம் மேலும் ஒரு பகுதி தமிழ்மக்களை சிங்களவர்களாக இனம் மாற்றம் செய்துவிட்டது. மலைநாட்டுத் தமிழர்கள் அயல் கிராமங்களில் உள்ள சிங்களப் பெண்களை மணம் செய்து கொள்வதால் அவர்களும் சிறிது சிறிதாக தமிழர்கள் என்ற அடையாளத்தை இழந்து வருகிறார்கள். ஈழத்தில் தமிழர்கள் சிறுபான்மையாக மாறியதற்கு இந்த மதமாற்றமும் மொழி மாற்றமும் காரணிகளாகும்.
கிபி 140அளவில் கிரேக்க புவியியல் அறிஞர் புகழ்பெற்ற உலகப் படத்தை வரைந்தார். இதில் இலங்கைத் தீவை தப்ரபேன் (Tabrobana) என்று குறிப்பிட்டதுடன் அவரது படத்தில் குறிப்பிட்டுள்ள இடங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாகவே காணப்படுகின்றன.
தப்பிரபேன் என்பது தாமிரபரணி என்ற பெயரின் ஒரு உருமாற்றம். தீபவம்சத்தில் இந்தப் பெயர் தம்பபாணி என்றும் கிரேக்கர்கள் இதை தழுவி தப்ரபேன் என அழைக்கலானார்கள். விஜயன் இலங்கையில் வந்திறங்கிய இடத்தில் (புத்தளம்) ஒரு நகரை உருவாக்கி அதற்கு தம்பபாணி (செப்புநிற பூமி) என்று பெயர் இட்டதாக மகாவம்சம் (அதிகாரம் VII) கூறுகிறது.