(அ. வரதராஜா பெருமாள்)

வங்கி வட்டி வீதங்கள் அதிகரித்தன விலை வீழ்ச்சி ஏற்படவில்லை
- கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து நிலையான வைப்புகளுக்கு வழங்கப்படும் வட்டி வீதங்களையும், வழங்கும் கடன்களுக்கு அறவிடும் வட்டி வீதங்களையும் வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு அதிகரித்துள்ளன. அதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மத்திய வங்கியினூடாக ஊக்குவித்துள்ளது. மத்திய வங்கி வர்த்தக வங்கிகளுக்குக் கொடுக்கும் கடனுக்கு வழங்கும் வட்டி வீதத்தை 15 தசம் (புள்ளி) .5 சதவீதமாக்கி, வர்த்தக வங்கிகள் மத்திய வங்கியில் வைக்கும் வைப்புக்கு வட்டியாக 14 தசம் .5 சதவீதமுமென ஆக்கியுள்ளது. அதேவேளை, அரச வர்த்தக வங்கிகள் வெளியார் மேற் கொள்ளும் நிலையான வைப்புகளுக்கு வழங்கும் வட்டி வீதத்தை 16 சதவீதம் தொடக்கம் 24 சதவீதம் வரை அறிவித்துள்ளன.