இலங்கையின் மாகாணசபைகளை மக்களுக்குப் பயனுடையவைகளாக ஆக்குவதற்கு ஏதாவது வழியுண்டா!(கடிதத் தொடர் – 9)

அன்பார்ந்த நண்பர்களே!
ஆற்றல் மிகு தோழர்களே!

சிங்களத் தேசவாதிகள் இலங்கையில் செயற்பட்டுவரும் மாகாண சபைகளை தேவையற்ற செலவுகளை உண்டாக்குகிற வெள்ளை யானைகள் என்கிறார்கள். அதற்கு எதிராக, தமிழ்த் தேசவாதிகள் அதே மாகாண சபைகளை உள்ளடக்கம் எதுவுமில்லாத வெங்காயங்கள் என்கின்றனர்.

இதில் எது சரி? எது பிழை? என்பதற்கப்பால் இரு பகுதியிரும் மாகாண சபைகளை தேவையற்றவை என்று பிரச்சாரம் செய்வதிலும், அதனை எப்படி இல்லாமற் பண்ணுவது என்பதிலும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பது மட்டும் சந்தேகத்திடமின்றித் தெரிகின்றது. எவரினதும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால், மாகாண சபைகள் இலங்கையின் அரசியல் அமைப்பில் ஒரு பிரிக்க முடியாத பகுதியாகிவிட்டன என்பதே யதார்த்தம்.
இலங்கையின் மாகாணசபைகளுக்கான அதிகாரங்கள் பற்றிக் குறிப்பிடுகையில் இங்கு அனைத்து மாகாண சபைகளுக்கும் பொதுவாக உள்ள மூன்று சட்டங்களைக் கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது.

முதலாவதாகக் குறிப்பிடப்பட வேண்டிய சட்டம்:-
13வது திருத்தம் என்று அழைக்கப்படுகின்ற சட்டம். அதாவது 1987ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பில் (ஊழளெவவைரவழைn) 13வது தடவையாக திருத்தப்பட்ட பகுதிகள் – இந்த அடிப்படை விதிகளின் (யசவiஉடநள) அடிப்படையிலேயே இலங்கையில் மாகாண சபை அமைப்புகள் உருவாக்கப்பட்டன.

வாசகர்களுக்கு ஒரு குறிப்பு:-
1987ம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கையின் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவும் கையெழுத்திட்ட இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் (ஐனெழ-டுயமெய Pநயஉந யுஉஉழசன) படியே இலங்கையில் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன என்று பொதுவாகக் கூறப்படுவது வழக்கமாக உள்ளது. இது அரசியல்ரீதியாகச் சரியாக இருந்தாலும் சட்டரீதியாக அது சரியான கருத்து அல்ல.
இலங்கையில் மாகாண சபைகள் 1988ம் ஆண்டே நடைமுறையில் உருவாக்கப்பட்டன. அவை 1978ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கையின் அரசியல் யாப்பில் 1987ம் ஆண்டு 13வது தடவையாக மேற்கொள்ளப்பட்ட திருத்த அடிப்படை விதிகளின் பிரகாரமே உருவாக்கப்பட்டன.

மாகாணசபைகளுக்கான கட்டமைப்புகள் மற்றும் அவற்றுக்கான சட்டங்களை ஆக்குவதற்கான அதிகாரங்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரங்கள் என்பன அரசியல் யாப்பில் திருத்தப்பட்ட பகுதியில் உள்ள அடிப்படை விதிகளின் மூலமே வழங்கப்பட்டுள்ளன.

நிறைவேற்று அதிகாரங்கள் என்பது ஓர் அரசாங்கம் அதனது கடமைகளை பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கும் சட்டங்களுக்கு உட்பட்டு திட்டங்களை ஆக்குவதற்கும் அவற்றை நிறைவேற்றுவதற்கும் சட்டப்படி ஒழுங்குகளையும் கட்டுப்பாடுகளையும்; நிலைநாட்டுவதற்கும், நெறிப்படுத்தல்களையும் முறைப்படுத்தல்களையும் மேற்கொள்வதற்கும் வருமானங்களைத் திரட்டுவதற்கும், வருமானங்களைக் கொண்டு செலவழிப்பதற்குமென உள்ள அதிகாரங்களைக் குறிக்கும். எந்தெந்த விடயங்கள் தொடர்பாக என்னென்ன வரையறைகளுக்குள் மாகாண சபைகள் சட்டவாக்க அதிகாரங்களையும் நிறைவேற்று அதிகாரங்களையும் கொண்டிருக்கின்றன என்பதற்கான பட்டியல்களை அரசியல் யாப்பின் 9வது இணைப்புத் தொகுதியில் உள்ள நிரல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாவதாக இங்கு குறிப்பிடப்பட வேண்டிய சட்டம்:-
1987ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மாகாண சபைகள் சட்டம் (Pசழஎinஉயைட ஊழரnஉடைள யுஉவஇ 1987).

இது பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சாதாரண சட்டமே. இதற்கு ஓர் அரசியல் யாப்புக்கு உள்ள சட்ட அந்தஸ்த்து கிடையாது. மாகாண சபைகள் இயங்குவதற்கு அவசியமான ஏற்பாடுகள் தொடர்பாக அரசியல் யாப்பின் 13வது திருத்த பகுதியில் மாகாண சபைகள் தொடர்பாக உள்ள இடைவெளிகளை நிரப்புவதற்கும், மாகாண சபைகளினுடைய நடைமுறைச் செயற்பாடுகள் எவ்வாறாக அமைய வேண்டும் என்பன தொடர்பாகவும் தேவைப்படுகிற ஏற்பாடுகளைக் கொண்டதே இச்சட்டமாகும்.

இதனை பாராளுமன்றம் எந்த நேரத்திலும் சாதாரண பெரும்பான்மை மூலம் திருத்திக் கொள்ள அல்லது இல்லாமல் ஆக்கிவிட முடியும். இந்தச் சட்டம் அரசியல் யாப்பிற்கு அப்பாற்பட்ட – சுதந்திரமான – தனித்துவமான ஒன்று அல்ல. இந்தச் சட்டத்தின் ஒவ்வொரு பிரிவினது அர்த்தமும் 13வது அரசியல் யாப்புத் திருத்தப் பகுதிகளுக்கு அமைவாகவே – இணக்கமாகவே கருத்து விளக்கம்; கொள்ளப்பட வேண்டும். அவரவர் நினைத்தபடி விளக்கம் கொள்ளவோ – கொடுக்கவோ முடியாது.

இந்தச் சட்டத்திலுள்ள பிரிவுகள் தொடர்பாக ஏற்படும் கருத்து வேறுபாடுகளுக்கு அரசியல் யாப்புக்கு அமைவாக – இணக்கமுடைய விதமாக விளக்கம் அளிக்க வேண்டியது உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்துக்கும் கடமைக்கும் உட்பட்டதாகும்.

மூன்றாவதாக இங்கு குறிப்பிடப்பட வேண்டிய சட்டம்:-
1989ம் ஆண்டு பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட மாகாணசபைகள் (மறுமையில் ஏற்பாடுகள்) சட்டம் ஜீசழஎinஉயைட ஊழரnஉடைள (ஊழளெநஙரநவெயைட Pசழஎளைழைளெ) யுஉவஇ 1989ஸ.
இந்தச் சட்டமானது அரசியல் யாப்பில் உள்ள மாகாண சபை நிரலில் தரப்பட்டுள்ள அதிகாரவிடயங்கள் தொடர்பாக மாகாண அமைச்சர்களுக்கும் மாகாண நிர்வாக அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரங்கள் தொடர்பான சட்டமாகும். மாகாண சபைகள் உருவாகி செயற்பட ஆரம்பித்த காலகட்டத்தில் அவை தமக்கான சட்டங்களை ஆக்கிக் கொள்வதற்கு கால தாமதமாகலாம் என்பதனால், மாகாண சபைகள் உடனடியாக அவற்றினது நிறைவேற்று அதிகாரங்களைப் பிரயோகிப்பதற்கு வசதி ஏற்படுத்தும் வகையாகவே இச்சட்டத்தில்; ஏற்பாடுகள் செய்யப்பட்டது.


இங்கு முதலில் எமக்கு பிரதானமானது 13வது திருத்தமே. எனவே முதலாவதாக, மாகாண சபைகள் தொடர்பான அரசியல் யாப்பு விதிகளை பருமட்டாக நோக்குவோம்:-

  1. இலங்கையின் பாராளுமன்றமாக இருந்தாலென்ன அல்லது மாகாண சபைகளாக இருந்தாலென்ன அவை உருவாக்கும் சட்டங்கள் இந்த அரசியல் யாப்பு விதிகளை மீறாதவையாகவே இருக்க வேண்டும்.
  2. பாராளுமன்றத்தாலோ அல்லது எந்தவொரு மாகாண சபையாலோ ஆக்கப்படும் எந்தவொரு சட்டமும் இலங்கையின் அரசியல் யாப்பின் அனைத்து விதிகளுக்கும் உட்பட்டதா அல்லது எந்தவொரு அரசியல் யாப்பு விதிக்கும் முரணானதா என்பதை நிர்ணயிக்கும் அதிகாரம் இலங்கையின் உச்ச நீதிமன்றத்துக்கு மட்டுமே உண்டு.
  3. மாகாண சபைக்கு அரசியல் யாப்பு விதிகள் மூலமாக வழங்கப்பட்டுள்ள எந்தவொரு அதிகாரமாயினும் கொழும்பு மத்திய அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரப் பிரயோகத்தின் விளைவாக மீறப்படுகிறதா அல்லது மீறப்பட்டுள்ளதா என்பதை நிர்ணயிக்கிற அதிகாரமும் உச்சநீதிமன்றத்துக்கே உரியதாகும்.
    அதேபோல
  4. மாகாணசபையின் எந்தவொரு நிறைவேற்று அதிகாரப் பிரயோகமும் கொழும்பு மத்திய அரசாங்கத்தின் எந்தவொரு அதிகாரத்திலும் தலையீடு செய்கிறதா அல்லது தலையீடு செய்துள்ளதா என்பதை நிர்ணயிக்கிற அதிகாரமும் உச்சநீதிமன்றத்துக்கே உண்டு.
  5. இலங்கையில் ஒரு சட்ட நகல் (டீடைட) பாராளுமன்றத்தில் பிரேரிக்கப்படுவதற்கும் அதனை சட்டமாக பாராளுமன்றம் நிறைவேற்றுவதற்கும் இடைப்பட்ட காலத்தில் அந்த சட்ட நகல் அரசியல் யாப்பை மீறுகிறதா இல்லையா என்பதை உச்சநீதிமன்றம் ஆய்வு செய்து முடிவு கூறுவதற்கான அதிகாரத்தை உச்சநீதிமன்றத்துக்கு இலங்கையின் அரசியல் யாப்பு வழங்குகிறது.
  6. அதேவேளை, இலங்கையின் அரசியல் யாப்பானது, பாராளுமன்றம் ஒரு சட்டத்தை ஆக்கியதன் பின்னர் அதனை மீளாய்வு செய்யும் அதிகாரத்தை உச்சநீதிமன்றத்துக்கு வழங்கவில்லை என்பது இங்கு விசனத்துக்கு உரியதொரு விடயமாகும்.
  7. நடைமுறையில் இருக்கும் ஒரு சட்டமாயினும் சரி அல்லது பாராளுமன்றத்தினால் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு சட்டமாயினும் சரி அதன் அரசியல் யாப்பு வலிமையை மீளாய்வு செய்யும் அதிகாரம் இலங்கையின்; உச்சநீதிமன்றத்திற்கு வழங்கப்படாமையானது “அரசியல் யாப்பின் அடிப்படையில் செயற்படும் ஜனநாயக முறை”யைக் கொண்ட ஒரு நாட்டிற்கு பொருத்தமானது அல்ல. சரியாக – உரிய வகையாக “சட்டத்தின் ஆட்சி” நிலை பெறுவதற்கு இந்த மீளாய்வு அதிகாரம் மிகவும் அவசியமாகும். இவ்வாறானதொரு குறைபாட்டின் மூலம் பாராளுமன்றத்துக்கு நாட்டின் அரசியல் யாப்பையும் விட உயர்ந்ததொரு நிலை வழங்கப்படுகிறது. அஃது ஒருபுறமிருக்கட்டும்.
    நான் இங்கு கூற விழைவது,
  8. மாகாண சபையினால் ஆக்கப்படும் எந்தவொரு சட்டமாயினும் அல்லது மாகாண அமைச்சரவையினால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு தீர்;மானமாயினும் அது அரசியல் யாப்புக்கு உட்பட்டதா இல்லையா என்பதை ஆளுநரோ அல்லது ஜனாதிபதியோ தீர்மானிக்க முடியாது. அதனைத் தீர்மானிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு மட்டுமே உடைய அதிகாரமாகும்.
  9. மேலும், மாகாண சபைக்கு என்னென்ன சட்டவாக்க அதிகாரங்கள் உள்ளன, அத்துடன் என்னென்ன விடயங்களில் எவ்வெவ்வகையாக மாகாண சபைகளுக்கு நிறைவேற்று அதிகாரங்கள் உள்ளன என்பதையும் அரசியல் யாப்பு விதிகளின் மூலமாகவே நிரணயிக்கப்பட்டுள்ளன.
  10. எனவே, மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவது நடைமுறையிலிருக்கும் இலங்கையின் அரசியல் யாப்பே தவிர நாட்டின் ஜனாதிபதியோ அல்லது மாகாணங்களின் ஆளுநரோ அல்லது மத்திய அமைச்சர்களோ அல்ல என்பதை முதலில் இங்கு தெளிவுபடுத்திக் கொள்வது அவசியமாகும்.
  11. அரசியல் யாப்பின் விதிகளுக்கு அமைவாக சட்ட நகலை ஆக்கி அதனை முறைப்படி மாகாண சபையால் நிறைவேற்றுகிற போது அதனை ஒரு வல்லமையான சட்டமாக்குவதற்கு ஆளுநர் கையொப்பம் இடல் வேண்டும்.
  12. அவ்வாறு அது சட்டமானதும் அந்த சட்டத்தின்படியாக கூறப்பட்டுள்ள கடமைகளை, பொறுப்புக்களை, அதிகாரங்களை நிறைவேற்றும் – பிரயோகிக்கும் அதிகாரம் மாகாண அமைச்சரவைக்கு உரியதாகும்.
  13. மாகாண சபையால் உருவாக்கப்படும் ஒரு சட்டம் அரசியல் யாப்புக்கு முரணானது என ஆளுநர் கருதினால் அதனை வரையறுக்கப்பட்ட காலப்பகுதிக்குள் ஜனாதிபதியினூடாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காகச் சமர்ப்பிக்க வேண்டுமே தவிர ஆளுநரோ அல்லது ஜனாதிபதியோ அந்த சட்டத்தை தமது விருப்பப்படி நிராகரிக்க முடியாது.
  14. மாகாண ஆட்சியின் அமைச்சர்களும் அதிகாரிகளும் மாகாண சபையின் நிறைவேற்று அதிகாரங்கள் என அரசியல் யாப்பினால் வழங்கப்பட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான கடப்பாடுகளும் நெறி முறைகளும் கட்டுப்பாடுகளும் மாகாண சபையின் சட்டங்களின் மூலமாகவே வழங்கப்படுதல் வேண்டும். அவை ஜனாதிபதியினாலோ அல்லது ஆளுநரினாலோ தரப்படுபவை அல்ல.
    சட்ட மேதையான முதலமைச்சர் சட்டங்களை சட்டபூர்வமாக அணுகுவதை விட்டுவிட்டு “ஜனாதிபதி சட்டப்படி நடக்கவில்லை”, “ஜனாதிபதி சொன்னபடி நடக்கவில்லை”, “ஆளுநர் விடுகிறார் இல்லை”, “ஆளுநர் சொல்லுக் கேட்கிறார் இல்லை” என்று சின்னப்பிள்ளைகள் அழுவது போல கருத்துக் கூறுவதற்கான காரணங்கள் என்ன என்பதுதான் இங்கு புதிரான ஒரு விடயமாக உள்ளது.
  15. தென்னிலங்கையிலுள்ள மாகாண சபைகள் அனைத்திலும் மத்திய அரசாங்கக் கட்சி ஆட்களே முதலமைச்சராகவும் அமைச்சர்களாகவும் இருப்பதனால் அங்கெல்லாம் ஆளுநர்கள் அவர்கள் சொற்படி நடந்து கொள்கிறார்கள். மாறாக வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரும் அமைச்சர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்களின் தீர்மானங்கள் மற்றும் ஆலோசனைக்கு அமைவாக நடக்காமல் ஆளுநர் தன்னிச்சைப்படி நடந்து கொள்கிறார்”
  16. “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சர்களாகவும் அமைச்சர்களாகவும் இருப்பவர்கள் வெறுமனே ஆளுநருக்கான ஆலோசகர்கள் மட்டுமே”,
  17. “13வது திருத்தப்படியும் மற்றும் மாகாண சபைகள் சட்டப்படியும் மாகாண ஆஈட்சிக்கான நிறைவேற்று அதிகாரங்கள்; ஆளுநருக்கே வழங்கப்பட்டுள்ளன”,
    என்றெல்லாம் பொதுவாகக் கூறப்படுகிறது. சட்டங்கள் பற்றித் தெரியாதவர்களும் அல்லது அரசியல் யாப்பு பற்றி அரைகுறையாகப் புரிந்து கொள்ளுபவர்களும் அவ்வாறு கருதுவது -கூறுவது வேறுவிடயம். ஆனால் சட்டமேதைகளான திரு சம்பந்தர், திரு விக்கினேஸ்வரன், திரு சுமந்திரன் மற்றும் அவர்களின் சட்ட ஆலோசகர்களும்; மாகாண அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரங்கள் தொடர்பான அரசியல் யாப்பு விதிகளை அவ்வாறாக அர்த்தப்படும் வகையாகத்தான் புரிந்து கொள்கிறார்களா? என்பதுதான் இங்குள்ள பிரதானமான கேள்வியாகும்.
    இலங்கை அரியல்யாப்பின் 13வது திருத்த ஏற்பாடுகளின்படி, மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் மாகாண சபை உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்களின் ஆதரவைக் கொண்டிருக்கின்ற வரையில்,
  18. மாகாண அமைச்சரவையின் தீர்மானத்தை – ஆலோசனையை மீறி ஆளுநர் எதுவும் செய்ய முடியாது, அத்துடன்
  19. மாகாண அமைச்சரவையின் ஆலோசனை இல்லாமல் ஆளுநர் எதனையும் செய்யக் கூடாது
    என்று அர்த்தம் கொள்வதுதான் அரசியல் யாப்பு விதிகள் தொடர்பான சரியான அர்த்தம் என்று கொள்வதில் என்ன தவறு உள்ளது என்பதுவும் எனது கேள்வியாகும். அரசியல் யாப்பின் 13வத திருத்தத்தின் ஊடாக சேர்க்கப்பட்ட அடிப்படை விதிகளிலும் சரி அல்லது அரசியல் யாப்பின் வேறெந்த பகுதியிலும் சரி ஆளுநர் தன்னிச்சையாக செயற்படுவதற்கென “சிறப்பான பொறுப்போ செயற்பாடோ” வழங்கப்படவேயில்லை என்பதை வலியுறுத்திக் குறிப்பிட விரும்புகிறேன்.
    கொழும்பு மத்திய அரசாங்கம் தனக்கு வசதியாக அரசியல் யாப்பின் எந்த விதி பற்றியும் எந்தவிதமான விளக்கத்தையும் கொண்டிருக்கலாம். ஆனால் அதுவே சட்டமாக முடியாது. கொழும்பு மத்திய அரசாங்கத்தவரின் கட்டளைகளுக்கு உட்பட்டதாக ஆயுதப்படைகளும் பொலிஸ_ம் இருக்கலாம் அதற்காக ஜனாதிபதியும் மத்திய அமைச்சர்களும் தாங்கள் விரும்பியபடி எதையும் செய்யக் கூடிய சண்டியர்கள் என்ற மனோபாவத்தில் செயற்படக் கூடாது. அப்படியான மனோபாவத்தில் அவர்கள் நடந்து கொண்டால் அது நாட்டின் அடிப்படையான சட்டங்களை மீறியதாகவே கருதப்பட வேண்டும்.
    இங்கு ஆளுநருக்கே அனைத்து அதிகாரங்களும் என மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்றே வைத்துக் கொள்வோம். அதற்காக, அதனை மாகாண சபையும் மாகாண அமைச்சரவையும் ஏற்கத்தான் வேண்டுமா? அதனை சட்டப்படி எதிர் கொள்ள வேண்டும்.
    அரசர் காலத்திற்தான் அமைச்சர்கள் வெறும் ஆலோசகர்கள். அரசன் அந்த அமைச்சர்களின் ஆலோசனையை ஏற்கலாம் அல்லது ஏற்காமல் விடலாம். இது அரசர்கள் காலம் அல்ல.
    இலங்கையின் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் மாகாண சபைகளின் ஆளுநர்களும் ஒரே தன்மையுடையவர்கள் அல்ல. மாகாண சபை ஆளுநர்கள் ஜனாதிபதியைப் போல நிறைவேற்றதிகார ஆளுநர் அல்ல. இங்கு அடிப்படையானதொரு வேறுபாடு உண்டு. மாகாண ஆட்சிக்கான நிறைவேற்றதிகாரம் உண்மையில் மாகாண அமைச்சரவைக்கே உண்டு. இலங்கையிலுள்ள மத்திய அரச அமைப்பு முறை பிரெஞ்சு அல்லது அமெரிக்க அரசமைப்பு முறையை ஒத்ததாக ஜே. ஆர். ஜெயவர்த்தனா உருவாக்கினார். ஆனால் இங்கு மாகாண சபைகள் பிரித்தானிய பாராளுமன்ற ஜனநாயக பாரம்பரியத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை.
    இதன் தொடர்ச்சி அடுத்த கடிதத்தில் மேலும் தொடரும்

இப்படிக்கு
உங்கள் அன்பின் தோழன் – நண்பன்
வரதராஜப்பெருமாள்