(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
புதிய போக்குகளுக்கு அடித்தளமிடும் பூகோள அரசியல் நகர்வுகள்
உலக அலுவல்களில் தவிர்க்கவியலாத சக்தியாக, சீனா இன்று மாறியுள்ளது. இந்த மாற்றம், புதியதோர் உலக அரசியல் அரங்கைக் கட்டமைத்துள்ளது. கெடுபிடிப் போர்க் கால அரசியல் சட்டகத்துடன், இதை விளங்கிக் கொள்ளவே பலர் முனைகிறார்கள். இது சீனாவைப் பற்றி மட்டுமன்றி, தற்போதைய உலக ஒழுங்கு குறித்த தவறான சித்திரத்தையே வழங்குகிறது.