இலங்கையில் இனப்பிரச்சனையை அடிப்படையாக வைத்து நடைபெற்ற யுத்தமும் திறந்த பொருளாதாரக் கொள்கையுமான பயணமானதே கடந்த 50 வருடங்களுக்கு மேலான இலங்கையின் பயணம்.
யுத்தம் முடிவுற்ற பின்பு மக்களை ஒருங்கிணைத்து யுத்தத்தில் கிடைத்த பாடங்களை கருத்தில் கொண்டு நாட்டை அபிவிருத்திப் பாதையில் கட்டியெழுப்புவதற்கு பதிலாக தொடர்ந்தும் மக்களை ஒருங்கிணைக்காத பேரிவாதப் போக்கும் இராணுவ மயப்படுத்தலுமாக தொடர்ந்து பயணப்படுவதாகவே 2009 இல் இருந்து இன்று வரை தொடர்கின்றது.
யுத்தம் முடிவடைந்த பின்பு கிடைத்த உதவிக் கடன்களையும் ஊழல், இலஞ்சம் ஆடம்பரம் என்பதற்குள் அதிகம் விரயம் ஆக்கியதே இலங்கையின் செயற்பாடுகள். உற்பத்திசார்ந்த பொருளாதாரம் என்பதை விட இறக்குமதி சார்ந்த பொருளாதாரமாக பயணப்படட்ட வேளையில் உலகெங்கும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரனாவினால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவும் இலங்கை போன்ற நாடுகளை அதிகம் பாதித்தது.
இலங்கையிற்கு உதவி என்று வந்தவர்களும் அது யுத்தகாலம் அதற்கு பின்பு என்று இரு காலகட்டத்திலும் எமது தேசத்தை அதிகம் பங்கு போடும் தமது நலன் சார்ந்த செயற்பாட்டிற்காகவே எமது நாட்டிற்குள் புகுந்தனர். இவர்களை எதிர் கொள்ளும் ஐக்கியப்பட்ட சிந்தனையும் செயற்பாடும் இலங்கையின் எந்த அரசிற்கு இருக்கவில்லை.
வருவாய் தரும் உல்லாசப் பயணத் துறை, தேயிலை ஏற்றுமதி, ஆடைகளின் ஏற்றுமதி, வெளிநாடுகளில் வேலை செய்வோரால் வரும் அந்நிய நாட்டுச் செலவாணி என்பனவும் பெருந்தொற்றால் அடிபட்டுப் போக ஏற்கனவே வாங்கிய கடனுக்கான வட்டியை செலுத்த மேலும் ‘கடனை அடைக்க கடன் வாங்குதல்’ என்பதற்குள் செல்ல வேண்டிய நிர்பந்தம் இலங்கையிற்கு ஏற்பட்டது. இது மிக வேகமாக இலங்கையில் பொருளாதாரத்தை வங்குரோந்தடையச் செய்தது.
மக்கள் தமது அடிப்படைத் தேவையான பொருட்களைப் பெறுவதற்கு வரிசையில் நின்றது மட்டும் இல்லாது அவற்றை பெறமுடியாத அவலங்களுக்குள் உள்ளானார்கள். பொருட்களின் விலையும் தட்டுப்பாடும் நாணய மதிப்பிறக்கமும் கட்டுப்பாடற்ற வகையில் நாளுக்கு நாள் ஏறியது.
இதனால் மக்களின் அதிருப்த்தி உச்சத்தை அடைய அதனைச் சரி செய்ய ஆளும் அரசு மேலும் எங்காவது என்று கடன் வாங்க ஓட கடன் தருவதற்கு நிபந்தனைகளை விதித்துக் கொண்டு சீனா இந்தியா சர்வதேச நாணய நிதியம் என்று மேற்குலகம் இலங்கையிற்குள் சுதுரங்கம் ஆடுகின்றது. மக்கள் பட்டினிச் சாவை நேக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
ஒவ்வொருவரும் தமது செல்வாக்கு சொல்வாக்கு மண்டத்திற்குள் இலங்கையை கொண்டு வருதல் என்பதாக காய் நகர்த்தல்களை மேற்கொள்கின்றன. ஏற்கனவே கடன் பெறுகையில் நடைபெற்ற குழறுபடியால் அந்தந்த நாடுகளின் செயற்பாடுகளுக்கு எதிராக கருத்துக் கூற முடியாத சிக்கலுக்குள் ஆளும் தரப்பினர் எதிர் கட்சித் தரப்பினர் என இருதரப்பும் சிக்கித் தவிக்கின்றனர். கூடவே அமெரிக்காவின் குடியுரிமை பெற்ற ஆட்சித் தலைவரும் நிதி அமைச்சரும் இன் பிறரும் அந்தந்த நாட்டிற்கு எதிராக பேசமுடியாது கைக் காப்பிட்டவர்களாக நிற்கின்றனர்.
தற்போது ஏற்பட்டுள்ள அந்நிய செலவாணிப் பட்டினியை தமக்கு சாதமாக்கி இலங்கை அரசை தமது வளத்திற்கு கொண்டு வருவதற்கான நிபந்தனைகள் ஒரு புறம் மக்களின் அரசு மீதான கோவங்கiயும் வெளிநாட்டுச் செல்வாக்கு வலையத்திற்குள் இருக்கும் என்.ஜி.ஓ கள், எதிர்கட்சிகள் மூலம் ஒருங்கணைத்து கலகங்கள் நடைபெறுகின்றன.
இனிவரும் நாட்களில் இது இன்னும் அதிகரித்ததாக நாடு எங்கும் பரவும் நிலை ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளே அதிகம். ஊரடங்குச் சட்டமும் கருவிகளின் பாவிப்பும் இந்த கலகத்தை அடக்க போதுமானவை அல்ல. மாறாக மாற்றம் ஒன்றுதான் கலகத்தை தற்காலிகமாகவேனும் அடக்கும். அத்திசை வழியில் பயணிப்பதையே இலங்கையில் செல்வாக்கு செலுத்த நினைக்கும் நாடுகளும் விரும்புவர்… செயற்படுத்துவர்….
தற்போது இதற்கான பதில் கூறும் நிலையில் இருப்பதுவும் தற்போது ஆட்சியில் இருக்கும் அரசுதான். இதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியதும் இந்த அரசுதான்.
மேற்கு உலகும், இந்தியாவும் விரும்பும் தமது சொல் கேட்கும் மக்களிடம் ஆதரவு இல்லாவிட்டாலும் கனவான் தோற்றம் உடைய ரணிலை தலைவர் ஆக்க விரும்புகின்றனர். இதற்கு ‘சமாதானமாக’ ஆட்சி மாற்றத்தை மாற்றம் என்பதை விட ஆட்சி ஒப்படைப்பு ஒன்றை ஏற்படுத்தும் செயற்பாட்டிலும் இற்ங்கியிருப்பதாக அவதானிக்க முடிகின்றது.
இந்த ஆட்சி மாற்றத்தின் பின்பு இலங்கையின் பணப் பட்டினியிற்கு சற்று தீனி போட்டு தமது விருப்பத்திற்கு ஏற்ப இலங்கையில் அடுத்த சில வருடங்கள் ஆட்சியைக் கொண்டு போவதற்குரிய செய்பாடுகளை இலங்கையை பங்கு போட நினைக்கும் நாடுகள் செயற்படுத்தத் தொடங்கிவிட்டன. இது அனேகம் நடைபெற்றுத் தீரும் என்பதைக இலங்கையில் இரந்து வரும் செய்திகள் கட்டியம் காட்டி நிற்கின்றன. இதற்கான காய் நகர்த்தல்கள் வெளிப்படையாக தற்போது தெரிய ஆரம்பித்திருக்கின்றன.
தற்போதைய ஆட்சியாளர்கள் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு வெளியேறும் நிலை ஏற்படும்போது ‘சர்வ வல்லமை”யுடைய ஜனாதிபதி தனது குடும்ப வாரிசுகளுக்கு தமிழ் மக்களின் வாக்குளை அதிகம் கிடைக்கச் செய்யக் கூடிய ஒரு தீர்வை பிரகடனப்படுத்திவிட்டு வெளியேறலாம் என்பதுவும் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம் ஆகும்.
இந்த சதுரங்க ஆட்டத்தில் இலங்கை சிறுபான்மை இனங்கள் (மொழி ரீதியாக ஒத்தவர்கள்) தமக்குள் பல கட்சிகளும் அமைப்புக்களும் என்று இணைந்து ஒரு பொது உடன்பாட்டை ஏற்படுத்தி அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கம் ஒன்றை உறுதி செய்யும் அரசியல் உடன்பாட்டை அடைவதற்கு முத்தரப்பினருடனும் பேசி உடன்பாட்டை ஏற்படுத்த வேண்டும்.
அது அனேகமாக அர்த்தமுள்ள அதிகாரமுள்ள மகாணசபை முறமையாகதான் இப்போதைக்கு இருக்க முடியும். காரணம் 13 வது திருச்தச் சட்டத்தின் அடிபடையிலேயே அதிகாரப் பரவலாக்கத்தை சர்வதேச நாடுகள் செயற்பட எத்தனிக்கும்.
அது வரை மக்கள் குறுகிய காலத்திற்கேனும் தமக்கான உணவுத் தேவையிற்காக சுயசார்பு உற்பத்தி முறமையிற்குள் அதிகம் கவனம் செலுத்தியே ஆகவேண்டும்.