இலங்கை ஜனாதிபதித் தேர்தல் (பகுதி 2)


மூன்றாவதாக இன்னும் ஒரு கட்சி இருந்தாலும் அது இந்த பிரதான நீரோட்டதில் முன்னிலை ஓட்டத்தில் இணைவது குறைவு
ஆனால் இம்முறை பல முனைப் போட்டியாக இலங்கை ஜனாதிபதித் தேர்தல் அமைந்திருப்பது முன்னைய ஜனாதிபதித் தேர்களை விட இது மாறுபட்டு இருக்கின்றது
இது தமிழ் பிரதேசத்தில் ஒற்றை சிந்தனையாக தமிழ் குறும் தேசியம் என்ற ஒற்றை முனைப்பாக இரு அணியாக பிரிந்து இம்முறை முதன்மை பெற்று இருக்கின்றது.
தமிழ் சூழலில் ஈழ விடுதலைப் போராட்ட காலத்தில் இருந்த இடதுசாரி கருத்தாடல்கள் செயற்பாடுகள் தற்போது அதிகம் முன்னிலை பெறவில்லை.
ஆனால் இடதுசாரிக் கருத்தியலைக் கொண்ட கட்சிகள் தமிழர் தரப்பிலும் உண்டு சிங்கள் மக்கள் தரப்பிலும் அது இலங்கை முழுவதற்குமான இடதுசாரிக் கருத்தியலைக் கொணட சம உரிமை இயக்கத்தின் தலமையில் மக்கள் போராட்ட முன்னணி என்பதாக தேர்தலில் நிற்கின்றது
ஜனாதிபதித் தேர்தலில் நிற்பவர்களில் தேர்தல் விஞ்ஞாபனம் என்ற அடிப்படையில் முற்போக்கான மக்களுக்கான ஏன் இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வு என்பதாக சிறப்பாக இருப்பது இவர்களுடைய தேர்தல் விஞ்ஞானபனம்தான்
அதே போல் பொருளாதாரக் கொள்கை என்பதாகவும் மூன்றாம் உலக நாடுகளுடன் இணைந்து இலங்கையின் கடனை கையாளுவதற்கான வேலைகளை ஐஎம்எவ் தவிரத்;து செயற்படுவது என்று எல்லோரையும் விட மாற்றாக தமது கொள்கையை முன்வைப்பவர்களும் இவர்கள்.
சுயசார்புப் பொருளாதாரதாரத்தை வலியுறுத்துபவர்கள் என்றாக பலதையும் இவர்களின் தேர்தல் விஞ:ஞாபனம் கூறி நிற்கின்றது
இவர்கள் தேர்தல் வெற்றி ஓடட்த்தில் முன்னிலையில் இல்லாவிட்டாலும் மக்களுக்கான அரசியல் இயக்கம் ஒன்றை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்காகவேனும் இந்த தேர்தலில் தாம் பங்கு பற்றுவதாகவும் அதனை தேர்தலின் முன்பு செய்து போல் பின்பும் தொடரப் போவதாக கூறி இருப்பது சிறந்த விடயம்
ஒரு சிந்தாந்த மாற்றத்திற்கான இடதுசாரிக் கருத்தியலை மக்கள் இயக்கமாக மாற்றும் இவர்களின் செயற்பாடு வரவேற்றகத்தக்கது
இது அதிகம் மக்கள் மயப்படுதப்பட வேண்டும்
இதனை விடுத்து ஏனைய முன்னிலையில் உள்ள வேட்பாளர்கான ரணில், சஜித் அனுரா, நாமல் என்று பார்த்தால் சிங்களப்பகுதிகளில் ஊழல் அற்ற ஒரு மாற்றத்திற்கான ஆட்சியை அனுரா கொடுப்பார் என்ற கருத்தில் ஆதரவு மேலோங்கி இருப்பதை காண முடிகின்றது.
ஆனால் வடக்கு கிழக்கு மலையகத்தில் இவர்களுக்கான ஆதரவுத் தளம் மற்ற மூவரையும் விட குறைவாக இருக்கும் என்பதையும் உணர முடிகின்றது.
இதற்கு காரணம் தமிழ் பேசுபவர்கள் சிறப்பாக யாழ் மேலாதிக்கவாதிகள் எப்போது ஒருவகையான வலதுசாரிக் கருத்தியலை தம்முள் உள்வாங்கி நாம் சிங்கப்பூராக இலங்கையை யாழ்பாணத்தை மாறுவோம் என்பதை நம்பி இந்த தென் இலங்கை அரசியல் கட்சிகளின் பின்னால் செல்பவர்கள்.
அதிலும் ஐதே கட்சியின் ஆதரவாளர்கள். ஆவர்களை நண்பேன்டா என்று கொழும்பிலும் முன், பின் கதவாலும் கொண்டாடுபவர்கள்.
இதனை ‘நல்லாட்சி’யிலும் தற்போது நடைபெற்றுவரும் ஆட்சியிலும் அண்மைய காலத்திலும் அவதானிக்கலாம்
அது தற்போது இரண்டாக பிரிந்து நிற்கின்றது.
ஒன்று ரணில் மற்றையது சஜீத் என்றாக.
அந்த வகையில் தமிழ் மக்களின் வாக்கு அதிகம் இந்த இருவர் இடையே பிரிந்து செல்வும் வாய்ப்புகள் அதிகம் ஆனாலும் இதில் சஜீத் முன்னைலப் பெறுவார்
வழமையாக இந்த ‘தமிழ் குறும் தேசியம்’ பேசும் கட்சிகளுக்கு மாற்றீடாக சிறீ லங்கா சுதந்திர கட்சியின் வழி வந்த மக்pந்தாவை ஆதரிப்பது என்பது தமக்கான பதவிகளை பெற இம்முறை உதவாது என்ற வகையில் இம்முறை அவர்கள் ஐதே கட்சியான வலதுசாரிகளின் பக்கம் நிற்கும் தாம் இடதுசாரிச் சிந்தனையாளர்களாக காட்டி நிற்கின்றனர்.
தெற்கில் ஒவ்வொரு கட்சியிற்கும் கிடைக்கும் ஆதரவுகளை வாக்குகளாக மாற்றும் கட்சி அமைப்பும் வேலைத் திட்டமும் அதற்கான செயற்பாடும் மற்றைய எவரையும் விட ஜேவிபி அதிகம் உண்டு.
இது அவர்களிடம் இருக்கும் ஒரு சீரிய செயற்பாடாக கடந்த 50 வருடங்களுக்கு மேலாக இருக்கின்றது.
எனவே இவர்களது ஆதரவு சக்திகள் அவ்வளவும் வாக்குகள் ஆகும் வாய்ப்புக்கள் அதிகம்
ஏனையவர்கள் இந்த அளவிற்கு தமது ஆதரவாளர்களை வாக்குச் சாவடிக்கு கொண்டு வருவார்களா என்பது கேள்விக்குறியே.
மொட்டிற்கு தீவிர இனவாதம் பேசும் போரில் வென்றவர்கள் நாம் என்ற வகையில் கணிசமான வாக்கு வங்கி உண்டு இதில் மாற்றம் இருக்காது. ஆனால் இது மட்டும் தேர்தலில் வெல்வதற்கு போதாது
ஆனால் ஒரு தேர்தலில் வாக்குகள் மூன்றாக பொதுவாக பிரிதலில் ஆதரவு எதிர்பு நடுநிலை என்றாக உள்ள சூழலில் இந்த நடுநிலை என்று காணப்படுபவர்கள் இறுதியில் தாம் யாரை ஆதரிப்பது என்று முடிவெடுத்து யாருக்கு வாக்கு போடுகின்றார்களோ அவர்களே அதிகம் வெல்வதற்குரிய வாய்ப்புகள் ஏற்படும்.
அந்த வகையில் இந்த நடுநிலமையாளர்கள் நாமலுக்கு எந்த வகையிலும் வாக்குப் போடும் நிலையில் இல்லை
ரணிலுக்கும் வாக்குபு; போடும் நிலமையும் இல்லை
முதலாமவர் ஊழல் நிர்வாகச் சீர்கேடு ஏதேச்சேகாரம் என்பதாகவும் இரண்டாமவர் தேர்தலில் வாக்குகளால் வெற்றி பெறாது நாட்டை மீட்கின்றேன் என்று ஐஎம்எவ் ஒப்பந்தம் போட்டு காசு வாங்கி மக்களின் வாழ்க்கைச் செலவை எல்லா வகையிலும் அதிகரித்தவர் என்பதாக மக்களின் வெறுப்புகளை அதிகம் சம்பாதித்தவர்
அந்த வகையில் இது வரை ஆட்சிப் பொறுப்பில் அமராத சஜீத் அனுரா இருவரில் ஒருவருக்கான வெற்றி வாய்ப்பு அதிகம் காணப்பட்டாலும் கிடைக்கும் ஆதரவுத் தளத்தை வாக்குகளாக்கும் போட்டியில் தெற்கில் அனுராவும் தமிழ் பேசும் பகுதிகளில் சஜித்தும் அதிக வாக்குளை பெறுவார்கள்.
இவர்கள் இருவரும் ரணிலைப் போல் ஐஎம்எவ் தவர்த்து நாட்டை கட்டியமைப்பதாக ஆணித்தரமாக எங்கும் கூறவில்லை.

அப்படி முடியாது என்பதும் சரியான கருத்தும் இல்லை
ஆனாலும் தமிழ் பொது வேட்பாளர் மலையக பொதுவேட்பாளர் என்பவர்கள் பெறும் வாக்குகள் சஜீத்தின் வாக்கு வங்கியை தமிழ் பேசும் மக்கள் மத்தியில் குறைக்கும் இது எவ்வளவு என்பதை எதிர்வு கூறுவது கடினமானது.
இதுவும் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெல்லுவார் என்பதை தீருமானிக்கப் போகின்றது.
பல முனைப் போட்டியே இதற்கான முக்கிய காரணம் வாக்குள் சம அளவில் இல்லாவிட்டாலும் நான்கு பிளஸ் என்றாக பிரியப் போகின்றது.
இந்த பிரிவில் அதிகம் பாதிக்கப்பட போவது ரணில் சஜித் நாமல் வாய்ப்புகளை அதிகம் பெறப் போவது அனுர.
இதற்குள் ஒரு வலது இடது என்பதுவும் உள்ளொழிந்தும் இருக்கின்றது
இன்னும் பேசுவோம்……