இலங்கை ஜனாதிபதித் தேர்தல் (பகுதி 5)

இது வரை நடைபெற்ற தேர்தல்களில் சிங்களப் பேரினவாதம் மையப்பொருளாக இல்லாது அதனைப் பின்னுக்கு தள்ளி ஊழல் அற்ற ஆட்சி பொருளாதாரம் முன்னேற்றம் ஆட்சி முறமையில் மாற்றம் என்பவை பிரதான அமயப் பொருளாக மாறி இருக்கின்றது இந்த ஜனாதிபதித் தேர்தல்.

இவை இம்முறை பிரதான முன்னணி வேட்பாளர்களிடம் காணப்படும் பொதுப் போக்கு.

சரத் பொன்சோகாவின் சிங்கள பேரினவாதத்தை விஞ்சும் அளவிலான தமிழ் குறும் தேசியவாதம் தமிழ்ப் பொதுவேட்பாளரின் பிரச்சாரங்களில் மேலோங்கி இருந்தது வருத்த்திற்குரியது.

எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் அல்லது மக்களின் கவனத்தைப் பெறும் என்பதற்கு அப்பால் மலையக மக்களின் பிரச்சனையை முன்னிலைக்கு கொண்டு வருவதான கவன ஈர்ப்பாக மலையக மக்கள் பிரதிநிதியாக ஒருவர் போட்டியிடுவதும் இங்கு சிறப்பு.

இதற்கு அப்பால் முன்னிலை சோசலிக் கட்சி தனது இடதுசாரிக் கருத்தியலை பெரும்பாலும் முன்வைத்து இத்தேர்தல் மக்கள் மத்தியில் தொடரப் போகும் அரசியல் இயக்கம் இனியும் தொடர்ந்தும் தொடருவதற்கான ஒரு களமாக தேர்தலுக்குப் பின்னும் என்றான அவர்களின் அரசியலும் இங்கு பிரதானப்படுகின்றது.

முதல் சுற்றில் 50 சத விகிதத்திற்கு மேலாக முதன்மை விருப்பு வாக்குப் பெறுபவர் ஜனாதிபதியாவர் என்ற இலங்கை ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் அடிப்படையில் இதனை அனுர குமார திசநாயகக்கா இதனைப் பெறுவாராகின் அவருக்கான வெற்றி இலகுவாக இருக்கும்.

மாறாக முன்னணியில் இருக்கும் மூவரில் ஒருவரும் 50 சதவிகித வாக்குகளை பெறமுடியாவிடால் ஏற்படும் இழுபறி சஜீத் பிரோமதாசாவிற்கான வெற்றி வாய்ப்புக்களை ஏற்படுத்தலாம் அல்லது ஏற்படுத்தப்படலாம்.

இந்த 50 வீதத்தை முதல் சுற்றிலேயே பெறுவது என்பது தமிழ் பேசும் மக்கள் எந்த அளவிற்கு அனுர குமார திசநாயக்காவிற்கு மற்றய இருவர்களையும் விட வாக்குளை கொடுப்பார்கள் என்பதில் அதிகம் தங்கியிருப்பதாக என்னால் உணரப்படுகின்றது.

ஒவ்வொரு வாக்காளர்களும் தனியான ஒரு விருப்பு வாக்கு(புள்ளடி மூலம் மட்டும்) அல்லது ஒன்றுக்கு மேற்பட்டு ஒன்று இரண்டு மூன்று தமது விருப்பத்தை 1, 2, 3 என வாக்களித்தல்) என மூன்று வரை விருப்பு வாக்குளை செலுத்தக் கூடிய நிலையில் உள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முறமை இந்த குழப்பகரமான நிலமையிற்கு காரணமாக இருக்கின்றது.

70 வருடத்திற்கு மேற்பட்ட ஐதே கட்சி சிறீலங்கா சுதந்திரக் கட்சி அதன் வழித் தோன்றல்களிடம் இருந்து சற்று விலகி அனுராவின் வெற்றி அதிகம் எதிர்பார்க்கப்படும் மாற்றமாக பலராலும் விரும்பப்பட்டாலும் இந்த விருப்பம் முழுமையாக வாக்குளான மாறவேண்டும் அவர் வெல்வதற்கு என்பதை நாம் புரிந்து கொண்டாக வேண்டும்.

அமெரிக்காவின் விருப்பு ரணிலாகவும் இந்தியாவின் விருப்பு சஜித்தாகவும் சீனாhவின் விருப்பு யாராக இருந்தாலும் பரவாய் இல்லை என்றாக இருந்தாலும் இலங்கை மக்களின் விருப்பு மாற்றத்திற்கான விருப்பாக அதிகம் இருக்கும் என்பதே என் கணிப்பாக உள்ளது.

அரகலய போராட்டம் இலங்கையின் அதிகார வர்க்கத்தை ஆட்டம் காண வைத்து ஆட்சியை அகற்றிய விழிப்புணர்வுப் போராட்டமாக பரிணாமம் அடைந்தது.

அப்போது இது சிங்களவர்களின் போராட்டம் என்று பெரும்பான்மை தமிழர்கள் இதில் அதிகம் இணையாமல் தவிர்த்ததைப் போல் இந்த ஜனாதிபதித் தேர்தலும் இலங்கையின் அதிகார ஆட்சி மாற்றத்திற்கும்.. ஆட்சி முறமை மாற்றத்திற்குமான.. சாத்தியங்களை கருத்தில் கொண்டு நாமும் இணைந்தாக வேண்டும்.

இந் நிலையில் தமிழ் பேசும் மக்கள் இதிலிருந்து ஒதுங்கி இருப்பது என்றான வாக்களிக்கும் தன்மை எமக்கான அடுத்த கட்ட அரசியல் நகர்வில் எம்மை இணைக்காது தவிர்க்கும் விடயமாக அமைந்துவிடும் என்பதினால் இந்த மாற்றத்திற்கான வாக்களிப்பில் தமிழர்கள் அவ்வாறாக இணைதலே இராஜதந்திர நகர்வாக இருக்கும் என்பதை மட்டும் தேர்தல் செய்தியாக சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

இதுவரை காலமும் நடைபெற்ற இலங்கைத் தேர்தலை விட இந்தத் தேர்தலை உலக நாடுகள் சிறப்பாக மேற்குலகம் இந்தியா சீனா போன்ற நாடுகளும் அந்த நாட்டின் மக்களும் அதிகம் உன்னிப்பாக அவதானிக்கின்றனர். காரணம் இந்த மாற்றத்திற்கான அறிகுறிதான்.

தேர்தலுக்கு முந்தைய இறுதிப் பதிவு இது தேர்தல் முடிவுகள் வந்த பின்பு தொடர்ந்தும் பேசுவோம் நன்றி ஆர்வத்துடன் இணைந்தமையிற்கு.

(தகவலுக்காக: தேர்தல் ஆணைத்தின் தகவலின்படி எவ்வாறு வாக்களிப்பது:புள்ளடியிட்டு உங்கள் முதல் தெரிவையும் விருப்பு 2 , 3 என இட்டு விருப்பங்களை தெரிவித்தால் உங்கள் வாக்கு முற்றிலும் நிராகரிக்கப்படும். அதாவது முலாவது தெரிவு புள்ளடியும் நிராகரிக்கப்படும். ஒருவருக்கு மட்டும் வாக்குகளிக்க விரும்பினால் புள்ளடி அல்லது 1 .விருப்பங்கள் தேவை எனில் 1 , 2 என அல்லது 1, 2, 3 உரிய பெட்டிகளுக்குள் மட்டுமே எழுத வேண்டும்.)