அந்த வகையில் வாக்குகளில் முன்னிலை பெற்ற அனுர குமார திசநாயக்கா சஜித் பிரேமதாசா ஆகிய இருவரும் தலா முதலாம் இரண்டாம் இடத்தை பிடித்த தேர்தல் முறமைப்படி நிலையில் போட்டியில் இருந்து விலக்கப்பட்ட ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களின் பெற்ற வாக்குகள் (தோராயமாக 25 %) மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டு இதில் யார் இரண்டாவது மூன்றாவது விருப்பு வாக்குளில் அதிகம் பெறுகின்றார்கள் என்பது கருத்தில் கொள்ளப்படும்.
இந்த விருப்பு வாக்குள் ஏற்கனவே முன்னிலையில் உள்ள இரு வேட்பாளர்களின் எற்கனவே அவர்கள் தனிப்பட முறையில் பெற்ற முதன்மை வாக்குகளுடன் இணைக்கப்படும் இதில் மொத்தமாக யார் கூடுதல் வாக்குகள் பெறுகின்றாரோ அவரே ஜனாதிபதியாவார்
இந்த வவையில் இரண்டாம் இடத்தில் உள்ள சஜித் பிரேமதாசா தோராயமாக அனுர குமார திசநாயக்காவை வை விட முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் 13 இலட்சம் பின் நிலையில் உள்ள படியால் முதலில் அவர் இந்த இரண்டாம் கட்ட விருப்பு வாக்கு எண்ணிக்கையில் முதலில் அனுராவை முந்துவதற்கு 13 இலட்சம் வாக்குகளை முதலில் பெற்றாக வேண்டும்.இதன் பின்பு இதற்கு அப்பாலும் சென்றாக வேண்டும்.
வெற்றியை தனதாக்கிக் கொள்ள.அதே வேளை அனுர குமார திசநாயக்க ஏற்கனவே பெற்ற வாக்குகளில் முன்னிலையில் இருப்பதினால் விருப்பு வாக்குகளில் அவர் பெறும் வாக்குகள் அவருக்கு மேலும் பலம் சேர்க்க அதனையும் சேர்த்து சஜித் முன்னேறினால்தான் வெற்றி பெற முடியும் நிலையுள்ளது.
இந்த வகையில் அனுராவிற்கான வெற்றி வாய்ப்புகள் பிரசாகமாக இருப்பதாக தோற்றம் பெற்றாலும்….இனி எண்ணப்படும் 2ம் கட்ட வாக்குளில் கணிசமான வாக்கு ரணிலுடையது என்பதினால் அவற்றில் அனுராவை விட சஜித்திற்கு விருப்பு வாக்குகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கலாம்…?ஆனால் இந்த விருப்பு வாக்குகள் அனுராவிற்கு பின்னிலையில் இருக்கும் 13 இலட்சத்தையும் சஜித் இற்கு கொடுத்து அதற்கும் அப்பால் பாயுமா…? அல்லது பாய வைக்கப்படுமா…? என்பது இன்றைய கேள்வியாக இருக்கின்றது.
முதல் கட்டத் வாக்கு எண்ணிக்கை அடிப்படையிலான தேர்தல் முடிவுகள்:
அனுர குமார திசநாயக்கா – 5,634,915 – 42.315 %
சஜித் பிரேமதாச – 4,363,035 – 32.76 %
ரணில் விக்ரமசிங்க – 2,299,767 – 17.27 %
நாமல் ராஜபக்ச – 342,781 – 2.57 %
ஏனையவர்கள் – 678,893 – 5.09 %
தொடர்ந்தும் பேசுவோம்…..