இந்தியாவும் இலங்கையும் பிரிட்டிஷாரால் நூறு வருடங்களுக்கு மேலாக ஆட்சி செய்யப்பட்ட நாடுகள். சுதந்திரம் கிடைத்தாலும் இந்த நாடுகளை பிரிட்டன் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவே இன்று விரும்புகிறது. இலங்கையில் தமிழர்-சிங்களவர் பிரச்சனை, இந்தியாவில், முஸ்லிம்-இந்து பிரச்சனை என்பன யாவும் வெளியாட்களால் இயக்காப்படும் செயல்பாடுகள். 1971இல் பங்களாதேஷ் பிறந்ததையடுத்து பாகிஸ்தான் இந்தியாவிடம் மண்டியிட்டதும் அமெரிக்க நவீன ஆயுதங்கள் அனைத்தும் சோவியத் ஆயதங்களின் முன்னால் சுருண்டு போனதும் இந்த யுத்தத்தில்தான்.
அப்போது அமெரிக்க அதிபர் நிக்சன் தங்கள் ஏழாவது கப்பல் படையை இந்து சமுத்திரம் அனுப்பி இந்தியாவை பயமுறுத்த எடுத்த நடவடிக்கையும் இந்திரா காந்தியால் தோற்கடிக்கப்பட்டது. இரு நூறு மயில் எல்லைக்குள் அமெரிக்க படைகள் நுழைந்தால் அடித்து விரட்டப்படுவார்கள் என்ற இந்திய கடல் படை அதிகாரியின் எச்சரிக்கையால் அமெரிக்கா தூர இருந்து தனது தூதரகத்தின் அறிக்கைகளையே படிக்க நேர்ந்தது. பாகிஸ்தான் தனது கிழக்கு பாகிஸ்தானை இழந்ததுடன் அவமானத்தின் உச்சிக்கே சென்றது.
பாகிஸ்தானின் படைகள் ஜெனெரல் நியாசி தலைமையில் 91,000 பாகிஸ்தான் படைகள் இந்திய ஜெனெரல் அரோராவிடம் சரணடைந்தனர். முஜிபர் ரஹ்மான் பாகிஸ்தானிய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு பங்களாதேஷ் ஜனாதிபதியானார்.
அப்போது “அல்லலுறும் ” இலங்கைத் தமிழருக்கும் ஒரு தேசத்தினை இஇலங்கைத் தமிழருக்கும் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று தமிழர் தரப்பில் ஒரு கோஷம் முன் வைக்கப்பட்டது.
அதனை இந்தியா நினைத்திருந்தால் பாகிஸ்தானை முறியடித்த படைகள் ஒரு நாளில் செய்து முடித்திருக்க முடியும். ஆனால் இந்திய மத்திய அரசு அப்படியாக “அல்லலுறும் ” தமிழர்களை அப்போது காணவில்லை. அப்போதைய பிரச்சனை நாடற்றவர்கள் என்ற பிரச்சனையும் ஜாதிக விமுக்தி பெரமுனவின் பயங்கரவாதமும் நிலவியது.
அமெரிக்காவின் உற்ற நண்பனான பாகிஸ்தானுக்கு விழுந்த அடி அமெரிக்காவையும் இங்கிலாந்தையும் பெருமளவில் பாதித்தது. அன்றிலிருந்து அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வெள்ளைக் கிறிஸ்தவ ஊடகங்கள் இந்தியாவை மட்டம் தட்டுவதையே தொழிலாகக் கொண்டிருந்தன.
அமெரிக்க வெளிநாட்டு அமைச்சு இந்தியாவை இன்றும் தங்கள் “எதிரிகள் ” நாட்டு லிஸ்ட்டிலேயே வைத்துள்ளன. இந்தியர்களில் பலருக்கு அமெரிக்காவில் கால் வைத்து கஞ்சி குடிப்பது இப்போதும் பிரியப்பட்ட விஷயமே.
1981 இல் பதவிக்கு வந்த ரொனால்ட் ரீகன் “அமெரிக்க எதிர்ப்பாளர்கள் அனைவரும் எதிரிகள் ” என்ற கொள்கையை பிரிட்டிஷ் பிரதமர் மார்கரட் தச்சார் ஆதரவுடன் அமுலாக்க தொடங்கினார். அங்கு அமெரிக்க கொக்கரிக்கும் ஜனநாயகம் எதுவும் இருக்கவில்லை.
இந்தியாவில் காங்கிரசுக்கு இருந்த மக்கள் ஆதரவு அமெரிக்க நிர்வாகத்துக்கு உபத்திரவமாகவே இருந்தது. பிரிவினை வாதிகளை ஆதரிப்பதன் மூலம் பலரை தண்டிக்கலாம் என்பதற்கமைய காலிஸ்தான், ஈழம், என்பன கிளை விடத் தொடங்கின.
இந்தியாவின் உளவு நிறுவனமான RAW- Research and Analyze Wing என்பதினுள் அமெரிக்காவின் ஏஜெண்டுகளை உருவாக்கினார்கள். கெ.வீ. உன்னி கிருஷ்ணன் என்ற ரோ அதிகாரி இலங்கையில் வைத்து ஒரு வெள்ளை ஏர்ஹோஸ்டஸ்சுடன் சல்லாபிக்கும் காட்சிகள் மூலம் பயமுறுத்தப்பட்டதுடன் அமெரிக்காவுக்கு வேலை செய்யும் ஆளாகவே மாறினார். அவரே தமிழ் நாட்டில் சகல “ஈழ ” இயக்கங்களுக்கும் பொறுப்பானவராக இருந்துள்ளார். இந்தியாவினதும் இயக்கங்களினதும் ஒவ்வொரு நகர்வும் இந்த உன்னி கிருஷ்ணன் மூலம் ஜே. ஆர்.ஜெயவர்த்தனாவுக்கு அறிவிக்கப்பட்டே வந்தன. ராஜீவ்-ஜே. ஆர் ஒப்பந்தம் ஏற்பட சில வாரங்களுக்கு முன்னால் உன்னி கிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.
இந்தக் கால இடை வெளியில் இயக்கங்கள் பலம் பெற்று இலங்கையில் வேரூன்றி விட்டன. சகல இயக்கங்களிலும்-டெலோ தவிர- இந்திய எதிர்ப்பும் வேரூன்றி விட்டிருந்தது. இந்தியாவையும், இந்துக்களையும் அழிக்கத் துடிக்கும் பாதிரிகளும் தமிழ் கோஷங்களுடன் செயல்படத் தொடங்கி விட்டிருந்தனர். தமிழ் நாடு ஈழப் பிரச்சாரத்தின் கேந்திரமாக்கப்பட்டது. அமெரிக்கப் பணம் சகல இடங்களிலும் செல்வாக்கு செலுத்தியது. கிறிஸ்தவர்களான கோபாலசாமி, சைமன் நாடார் போன்றோருக்கு புலிகளுக்கான வியாபார பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
சகல இயக்கங்களுக்கும் ஆரம்பத்தில் பல சூட்கேசுகள் பாதிரிகள் மூலம் வழங்கப்பட்டன.. அதனாலேயே இன்றும் இந்த ஈழ இயக்கங்கள் பாதிரிகள் பற்றி மூச்சே விடுவதில்லை.
தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இருக்கும் அகலத்தை அதிகரிக்க 1983 இல் தமிழ்-சிங்கள கலவரம் புலிகளாலும், யு என் பி கட்சியினாலும் கன கச்சிதமாக நடத்தப்பட்டது. புலிகள் தம் பங்குக்கு இந்திய ஆதரவு காட்டும் தமிழ் குழுக்களை மட்டுமல்ல சாதாரண தமிழர்களையும் கொன்று தள்ளினார்கள். ஜெயவர்த்தனாவால் சரத் முத்தேட்டுவகம என்ற கம்யூனிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினரையே “வாகன விபத்தில்” கொல்ல முடிந்தது. புலிகளும் தங்கள் பங்குக்கு அண்ணாமலை, விஜயானந்தன் போன்ற கம்யூநிஸ்ட்டுக்களை கொன்று தள்ளினார்கள்.
இலங்கைத் தமிழர்களுக்காக பேசிய ஒரே ஒரு நாடு இந்தியாதான். ஆனால் இந்திய-இலங்கை ஒப்பந்தம் மூலம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர இந்தியா முயன்றதை புலிகள் சிங்களவர்களுடன் சேர்ந்து எதிர்த்தது அசாதாரணமான விஷயம். பல தமிழர்கள் ஆதரவு கொடுத்தான் புலிகள் எதிர்த்தமை மிகவும் கீழ்த்தரமான முடிவாகவே இன்றும் உள்ளது.
இன்று இந்தியாவில் பல தலைமைகள் மாறி விட்டன. ஈழ வியாபாரமும் படுத்து விட்டது. பணம் கிடைக்காவிட்டால் சகல அரசியலுக்கும் இந்த நிலைமைதான்.
புலிகள் அழிக்கப்பட முடியாதவர்கள் என்ற ஒரு விம்பம் பலமாகப் பலரினதும் மனதில் படிய வைக்கப்பட்டது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வர முடியாதபடி அரசியல் அமைப்பை ஜே.ஆர். ஜெயவர்த்தனா சர்வ அதிகாரமும் மிக்க ஜனாதிபதிக்கு மாற்றினார், பாராளுமன்றம் கேலிக்குள்ளாக்கப்பட்டது. அந்த அரசியலமைப்பை எழுதியவர் வெறு யாருமல்ல. எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் மருமகன் எ.ஜே.வில்சன் என்பது பலரும் அறியாத விஷயம். தமிழ் வாக்குகளும், யு என் பி வாக்குகளும் எந்த தேர்தலிலும் அதிகமாக இருந்த படியால் பாராளுமன்றத்தை செல்லாக் காசாக்கினார்கள். சந்திரிகா குமாரணதுங்க தெரிவு செய்யப்பட்டதுடன் அந்த திட்டமும் தவிடு பொடியானது. பின்னர் தெரிவு செய்யப்பட்ட மஹிந்த ராஜ பக்ஷ புலிகளை வேரோடு அழித்து யுத்தத்துக்கே முடிவு கட்டினார். அதனால் அவர் அமெரிக்காவின் பல திட்டங்களை தகர்த்ததுடன் தமிழர்களின் தனிநாடும் பாதிரிகளின் தனி நாடும் சமுத்திரத்தினுள் மூழ்கியது.
இப்போ மோடி அரசில் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைகளில் பாரிய மாற்றங்கள் எதுவுமே தென்படவில்லை. ஆனால் மோடிக்கு அமேரிக்கா சீனப் பூச்சாண்டியை காட்டிக் கொண்டிருக்கிறது. இந்தியப் பத்திரிகைகள் அனைத்துமே வெளிநாட்டு நிறுவனங்களால் நடத்தப்படுவதும் ஹிந்து எதிர்ப்பை சாதாரணமாகக் கக்குவதும் தொழிலாகப் போய் விட்டது.
இந்த நிலையில் இலங்கைத் தமிழர்கள் சிங்களவர்கள் ஆதரிக்கும் கட்சிகளை ஆதரித்து தங்கள் பிரச்சனைகளை (அப்படி ஏதாவது இருந்தால் ) தீர்த்துக் கொள்ள முயலலாம்.
(Sivananthan Muthulingam)