இலங்கை: தமிழ் பேசும் மக்களின் அரசியல் (பாகம் 2)


அது ஜேஆர் இன் கண்டி யாத்திரையாக இருக்காலம் பிரேமதாசாவின் இணைந்த வடக்கு கிழக்கு மகாண சபை செயற்படவிடாமல் செய்ததாக இருக்கலாம் சந்திரிகா அம்மையார் கொண்டு வர முனைந்த சமஷ்டியை விட மேலான அரசியல் வரைபாக இருக்கலாம் என்று அடுக்கிக் கொண்டு போகலாம்.

இங்கு கவலை தரும் விடயம் இவ்வாறு செயற்பட்டு வரும் தமிழ் தரப்பிற்கு அவர்கள் சுட்டிக் காட்டும் ஐதே கட்சியிற்கு அதிகம் வாக்களிப்பதுவும் இதே தமிழ் மக்கள்தான். விதிவிலக்காக சந்திரிகாவிற்கு வாக்களித்த நிகழ்வை கூறலாம்.

யுத்தத்தின் தளபதியாக இருந்த சரத்பொன்சேகாவை எந்த குற்ற உணர்வும் இன்றி தமிழ் தரப்பு வாக்களிக்குமாறு கூறிய போது அதனை செயற்படுத்திக் காட்டிய பெரும்பான்மை தமிழ் மக்களின் செயற்பாடும் இராஜதந்திரம் அற்ற தமிழ் தரப்பு செயற்பாட்டின் அண்மைய வடிவங்கள்.

இரண்டாவது 1970 பொதுத் தேர்தலில் வட பகுதியில் காங்கிரஸ் – தமிழரசு கட்சிகளுக்கு மக்கள் வழங்கிய தீர்ப்பு வரலாற்றில் என்றென்றும் நினைவுகூரக்கூடிய ஒன்றாகும். அப்படி ஒரு தோல்வி.
தமிழரசுக் கட்சியின் ‘தளபதி’ என வர்ணிக்கப்பட்ட அ.அமிர்தலிங்கம் வட்டுக்கோட்டைத் தொகுதியில் தோல்வியுற்றதுடன், அது தமது கோட்டைகளாகவிருந்த நல்லூர், கிளிநொச்சி தொகுதிகளையும் இழந்தது. அதேபோல, உடுப்பிட்டித் தொகுதியில் தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ‘உடுப்பிட்டி சிங்கம்’ முன்னாள் உப சபாநாயகர் திரு.மு.சிவசிதம்பரம் தோல்வி கண்டதுடன், கட்சியின் தலைவர் ‘முடிசூடா மன்னன்’ திரு.ஜீ.ஜீ.பொன்னம்பலம் யாழ்ப்பாணத் தொகுதியில் தோற்கடிக்கப்பட்டார். தங்கத்துரை திருகோணமலையில் தோற்கடிக்கப்பட்டார்.

தமிழரசுக் கட்சியின் சார்பில் டட்லி அரசில் உள்ளுராட்சி அமைச்சராகவிருந்த திரு.மு.திருச்செல்வம் பாராளுமன்றத்தின் மூலம் தெரிவு செய்யப்படாது ‘செனட் சபை’ என்னும் மூதவை மூலம் கொல்லைப் புறம் வழியாக அமைச்சரானபடியால் 1970 தேர்தலில் போட்டியிடாது வந்த வழியே தப்பிக் கொண்டார்.

இந்த பாரதூரமான தோல்விகளின் காரணமாகவே தம்மை மீண்டும் ‘தகவமைத்து”க் கொண்டு தமிழ் மக்களிடம் வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற நாற்காலியைப் பிடிக்கவே வட்டுக் கோட்டை தமிழீழ பிரகடனமும் தமிழ் மக்களின் ஆணையை உலகிற்கு எடுத்துச் சொல்ல தமக்கே வாக்களியுங்கள் என்று கோஷங்களும் செயற்பாடுகளும்.
உண்மையில் இந்த மிதவாதத் தலமைகள் தமிழ் பேசும் மக்களின் உரிமையை முன்னிறுத்தி இந்த வட்டுக்கோட்டை தீர்மானத்தை எடுத்திருக்கவில்லை. அதனாலே சிறீமாவின் அரசு வீழ்த்தப்பட்டு 1977 ல் ஜே.ஆர் பதவியிற்கு வந்ததும் அவருடன் சமரசம் செய்து மாவட்ட சபை வரை இதே தமிழ் தரப்பு சென்றது.


அப்போ இதுவரை காலமும் தமிழர் தரப்பிற்காக… சிறுபான்மையினருக்காக சட்டமூலமாக்கப்பட்ட ஒரே ஒரு தீர்வு என்றால் அது இந்திய அனுசரணையுடன் இலங்கையில் உருவாகபபட்ட மகாண சபை 13 வது திருத்தச் சட்டமாகும். மைய அரசில் இருந்து மாகாணங்கள் வரை அதிகாரங்களை பரவலாக்கல் என்ற வடிவத்தில் உருவான மாகாணசபை சட்ட மூலமாகும்.

இச் சட்ட மூலம் இந்தியா அனுசரணையுடன் உருவாக்கப்படும் போது குறிப்பாக ஆயுதம் ஏந்திப் போராடிக் கொண்டிருந்த விடுதலை அமைப்புக்களிடம் நேரடியாக அச் சந்தரபத்தில் கருத்தறியப்படவில்லை ஆனால் ஏற்கனவே இந்திய அரசுடன் இருந்த தமிழ் தரப்பு உறவுகள் அடிப்படையிலும், இந்திய மாநிலங்களின் அதிகாரப் பரவலாக்கத்தை கருத்தில் கொண்டும் உருவாக்கப்பட்டது இந்த 13 வது திருத்த மகாணசபை சட்ட மூலம்.

இந்த உடன்படிக்கையை சகல தமிழ் தரப்பும் (சிறப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட) ஏற்றுக் கொண்டே ஆயுத ஒப்படைப்பு, ஜனநாயக வழிக்கு திரும்புதல், அனைத்து கைதிகளும் நிபந்தனையின்றி விடுதலை, பன்முகப்படுதப்பட்ட தலமையை உருவாக்கும் முகமாக சகலரும் தமிழ் பிரதேசங்களில் அரசியல் செய்யலாம் என்று இதற்கு முன்பிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டும்தான் அரசியலை செய்லாம் என்பதை தகர்தெறிந்திருந்தது.
இதுவே இந்த உடன்படிக்கையை ஆரம்பத்தில் ஏகபோகமாக ஏற்று மாற்றுக் கருத்தாளர்களின் மக்களுடனான அரசியல் செயற்பாட்டை பொறுத்துக் கொள்ளமுடியாத பன்முகத் தன்மை மறுப்பே பிரேமதாசாவுடனான தமிழீழ விடுதலைப் புலிகளின் தேன்நிலவு. இலங்கை அரசாங்கத்துடன் முதன் முதலில் உறவை வைத்துக் கொண்ட அமைபு என்ற பெருமை இதே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கே உரியதானதாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பொது போக்கான உறவாடுதல் சந்தர்ப்பம் பார்த்து இல்லாமல் செய்தல் என்பது எதிரியிடம் மட்டும், அல்ல ‘நண்பர்”கள் விடயத்திலும் இருந்தது. இதுவே 1986 மே மாதம் ஆரம்பித்த மாற்று விடுதலை அமைப்புகள் மீதான் தாக்குதல்கள் தடை செய்தல்கள் என்று உலக வரலாற்றில் எந்த நாட்டிலும் இல்லாத ஒன்றை தமிழீழ விடுதலைப் புலகள் தமது செயற்பாடாக கொண்டிருந்தனர்.

யார் நண்பன் யார் பகைவன், எது நட்பு முரண்பாடு, எது பகை முரண்பாடு என்பதை பகுத்தறிவு செய்து செயற்படாமையே இறுதியில் தனிமைப்பட்டு எதிரி இலகுவில் அவர்களை மௌனிக்க செய்வதற்கு வழியும் வகுத்துவிட்டது.

எனக்கு தெரியும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு என் செய்திகள் உவப்பாக இருக்காது என்று. உண்மைகளை நாம் எடுத்துரைக்க வேண்டும் தவறுகளில் இருந்து பாடங்களை கற்றுக் கொண்டு அவற்றை திருத்தி செழுமைப்படுதிய செயற்பாடுகளுடன் நாம் மீண்டும் பலமாக எழவேண்டும் என்பதற்காகவே இதனைக் இங்கு குறிப்பிடுகின்றேன்.

இது வரை காலமும் இலங்கை சிறுபான்மை மக்களுக்கு ஏன் தமிழ் தரப்பிற்கு உருவான ஒரே ஒரு சட்ட மூலமாக தீர்வு மாகாண சபையே. இதற்குள் அதிகாரம் எவ்வளவு இருக்கின்றது…? இன்னும் வேணும் என்பதை தொடர்ந்தாற் போல் போராடி பெற்றிருக்க முடியுமா…? இணைந்த வடக்கு கிழக்கை நிரந்தரமாக அப்படியே கொண்டு சென்றிருக்க முடியுமா….? காணி பொலிஸ் அதிகாரம் உண்டா…? போன்ற விடயங்களுக்குள் தற்போது போகாமல் அது பற்றி தனியான பதிவொன்றில் பேசுவோம்.

மாகாணசபை என்பது தமிழ் தரப்பிற்கு தமது அதிகாரங்களை நிறுவ முற்படுவதற்கான ஆரம்ப புள்ளியான ஒரே ஒரு சட்மூலமாக்கப்பட்ட தீர்வு என்பதையே நான் இங்கு கூற விளைகின்றேன். இதிலிருந்து நரந்து செல்வதையும் நாம் செய்தே ஆகவேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றேன் தற்போதைய கள யதார்தங்களில் இதனையே எடுத்தியம்பி நிற்கின்றன. இதனை 1990 இலேயே ஆய்வறிந்த தலைவராக பத்மநாபா இருந்தார்.

இந்த இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சiபையை குறுகிய காலம் என்றாலும் பல்வேறு விமர்சனங்கள் , வெற்றிகள் தோல்விகள், கெட்டதுகள் நல்லதுகள், என்று செயற்படுத்தியவர்கள்தான் பத்மநாபாவின் தலமையிலான அன்றை ஈபிஆர்எல்எவ் இனர். கூடவே சகலரையும் இணைத்துக் கொண்டுதான் இந்தப் பயணம் நடைபெற்றது. அது அரசியல் கட்சிகளான தமிழ் தரப்பு முஸ்லீம் தரப்பு ஏன் சிங்களத் தரப்பு என்று யாவரையும் இணைத்த ஒரு பன்முகப்படுத்தப்பட்ட செயற்பாட்டை செயற்படுத்த முனைந்தனர்.

அரசியல் கட்சிகளுக்கு அப்பால் அமைந்த இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் அமைச்சர் அவையில் தமிழ், முஸ்லீம், சிங்களவர் என வடக்கு கிழக்கில் வாழ்ந்த மூவின மக்களையும் பிரநிதிப்படுத்தி உருவாக்கினர். கூடவே வடக்கு கிழக்கு என்ற பிரதேச ரீதியிலும் இந்தப் பிரநிதித்துவத்தை பேணத் தவறவில்லை.

இதில் உச்சமாக டி.எஸ் செனநாயக்கா காலத்திலிருந்து உருவான திட்டமிட்ட குடியேற்றங்களால் செயற்படுத்தப்பட்ட வடக்கு கிழக்கை பிரித்தாளும் செயற்பாட்டின் மூலம் தொடர்பற்ற தாக்கும் திருகோணமலையில் தமிழ் மக்களை சிறுபான்மையினராக்கும் சேருவாவலை குடியேற்றம் போன்றவற்ற பேரினவாத செயற்பாட்டை முறியடிக்கும் நோக்கோடு செயற்பட்ட மாகாணசபையின் செயற்பாடு ஆகும். ஆமாம் வடக்கு கிழக்கு மாகாணசபையின் தலமையகத்தை திருகோணமலையில் நிறுவினர் பத்மநாபா தலமையிலான அமைப்பினர். மாறாக யாழ்ப்பாணத்திற்குள் முடங்கி கிடக்கவில்லை.

சரி இந்த ஒரே ஒரு சட்மூலமாக்கப்பட்ட மகாணசபை முறமையை சவாலாக இறுதிவரை ஏற்று செயற்படுத்திய அவர்கள் இன்று எங்கே…..? ஜுன் மாதம் 19 ம் திகதி தமிழ் நாட்டின் கோடம்பாக்கத்தில் இதன் தலமைப் மக்கள் தொண்டன் பத்மநாபா உட்ட 13 பேர் தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.

மிகுதி நாளை தியாகிகள் தினமாக தொடரும்…..