இலங்கை பாராளுமன்றத் தேர்தல் (பகுதி 3)

அது தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரசை தவிர்த்து உறுதியாக தெளிவாக அமைத்து தொடர்ந்து தேர்தல் வெற்றி தோல்விகளை ஆரம்பத்தில் அதிகம் சிந்திக்காது பயணித்து இருந்தால் இன்று தமிழர் தரப்பில் அதுதான் அதிக தமிழ் மக்களால் ஏற்புடமையாக்கப்பட்ட கட்சி என்றான வளர்ச்சியைக் கண்டிருக்கும் வாய்ப்புக்களை பெற்றிருக்கும்.

ஆனால் கடந்த 15 வருட காலத்தில் ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளி அமைப்புக்களால் சிறப்பாக குறும் தேசிவாதத்தை தவிர்த்து ஜனநாயக முற்போக்கு கூட்டணியாக ஒன்றை அமைக்க முடியவில்லை.

இதற்கான பிரதான காரணம் இந்த அமைப்புகளில் இருந்த ஆளுமைமிக்க பலர் தமக்கான பாராளுமன்றக் கதிரைகள் என்பதில் மட்டும் அதிகம் குறியாக செயற்பட்டனர்.

இதில் சிலர் குளிர் காய்தல் மூலம் வெற்றி காண சில தேவையற்றவர்கள், பொருத்தமற்றவர்களுக்கு தமது கட்சிகளுக்கு அப்பால் வாய்பளித்து தங்கள் வெற்றிகளையும் இழந்து நிற்கின்றனர்.

இதற்கு அப்பால் இங்கு அதனை நான் உடைத்துப் பேச விரும்பவில்லை.
வேணும் என்றால் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் பேசுகின்றேன்.

ஆனால் ஈழ அரசியலில் 40 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்தும் பயணிப்பவர்களுக்கு இங்கு யார் யாரை நான் இங்கு குறிப்பிடுகின்றேன் என்பதை புரிந்து கொள்வார்கள்.

இவ்விடத்தில் இன்னொன்றையும் கூறி ஆக வேண்டும் அது.. தமிழ் அரசியல் அரங்கில் சகலரையும் இணைத்து ஐக்கியப்பட வைக்க உருவான ‘தமிழ் மக்கள் அரங்கம்’ என்ற அமைப்பு கொழும்பில் இயங்கும் தமிழ் கட்சிகள், கிழக்கு தமிழ் கட்சிகள், வட கிழக்கு என்றாக பலரையும் இணைத்து சில மாதங்கள் ஆனால் காத்திரமாக முன்னெடுக்கப்பட்ட ஐக்கியப்பட்ட செயற்பாட்டை உடைத்தவர்கள் அதன் செயற்பாட்டை முடக்கியவர்கள் வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் பரப்பில் உள்ள மூவர்தான். இங்கும் அந்த மூவர் யார் என்று உடைத்துப் பேசவில்லை. ஆனால் வரலாற்றிற்கு தெரியும் இந்த ஈனச் செயலை செய்தவர்களுக்கு.

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற தமிழ் நாட்டின் கோசத்தை காவுபவர்கள் ஒரே ஏக தலைவன் என்றாக வெற்றியை எதிர்பாரத்து அமைய இருக்கும் அரசிலும் பதவி பெறுதற்கான காய் நகரத்தல்கள் தேர்தலுக்கு முன்பே செய்யத் தொடங்கிவிட்டனர். அது பிரேமதாசாவில் ஆரம்பித்து சந்திரிகா, மகிந்த, ரணில் என்றாக எங்கும் வியாபித்து இருப்தான நகர்ச்சிதான்

ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சிகள் அவற்றின் வழித் தோன்றல்கள் இலங்கை சிறுபான்மை மக்கள் மத்தியில் குறைந்த பட்சம் அமைப்பாளர்கள் என்ற வகையலாகவேனும் தமிழ் பேசும் தமிழ் மக்கள், முஸ்லீம் மக்கள், மலையக மக்கள் மத்தியில் அறியப்பட்டு இருந்தனர்.

அந்த அளவிற்கு ஜேவிபி என்ற பிரதான கட்சியின் தேசிய மக்கள் முன்னணியை ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு முன்பு அதிகம் அறிந்திருக்கவில்லை. இதனை விட பிரபல்யம் அடைந்திருக்கவில்லை என்று கூறலாம்.

இதனால் சமான்ய வாக்காளர் மத்தியில் முதல் இரண்டு தேசியக் கட்சியிற்கு கிடைக்கும் வாக்குள் அளவிற்கு தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் அவர்களுக்கு வாக்குகள் கிடைப்பதற்கு இன்னும் அதிகமாக ஏற்படாவில்லை.

மிகக் குகிய காலத்தில் ஜனாதிபதி அனுரகுமார அவர்களின் செயற்பாடுகளும்> பேச்சுகளும் இலத்திரனியல் ஊடகத் தொடர்புள்ள சமானிய தமிழ் பேசும் மக்கள் மத்தியில் சென்றடைந்திருப்பது அதற்கான வாக்கு வங்கியை ஜனாதிபதித் தேர்தலை விட தமிழ் பேசும் மக்கள் பிரதேசங்களில் நிச்சயம் அதிகரித்து இருக்கும்

இதனாலேயே தமிழ் பிரதேசங்கள் எங்கும் அவர்களுக்கான மக்கள் தெரிவு பிரநிதித்துவம் ஏற்படும் என்ற பார்வையை முன்வைக்கின்றேன்.

இதற்கு வலுச் சேர்ப்பதாக திருகோணமலையில் சில தினங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதியின் 1 மணித்தியாலயம் வரையிலான் பொதுக் கூட்டம் அமைந்திருக்கின்றது.

புலம் பெயர் இளையோரையும் நாட்டிற்கு வந்து உங்கள் கல்வி அறிவு, பொருளாதார பலங்களை பாவித்து நாட்டைய யாழ்ப்பாணத்தையும் கட்டி எழுப்புங்கள் என்ற எந்த தமிழ் தலைவரும் பொது வெளியில் அதிகம் பேசாத வியடத்தை பேசியதாக இருக்கட்டும்….

இராணுவ கையடக்க பிரதேசங்களின் விடிவிப்பு, அரசியல் கைதிகளின் விடிவிப்பு…..

பரந்தன், காங்கேசன்துறை, வாழைச்சேனை போன்ற பிரதே தொழிற்சாலைகளின் மீள் உருவாக்கம்…

போதை பொருளுக்கு பின்னால் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் மண் அள்ளும் மாபி கும்பல்கள் இதற்கு பின்னால் இருக்கும் அரசியல்…

இந்தியாவுடனானன நல்லுறவு என்றாக சீனாவை தவிர்த்த பேச்சுகள்….

நிச்சயம் கணிசமான தமிழ் வாக்குகளை அவர் பேச்சை கேட்டவர்கள் இடத்தில் மாற்றம் அடையச் செய்யும்

இதனால் தமிழ் பேசும் பகுதிகளிலும் தமிழ் மக்களை பிரதநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள், முஸ்லீம் கட்சிகள், பாரம்பரிய தேசியக் கட்சிகளின் வழித் தோன்றலுடன் இம்முறை தேசிய மக்கள் சக்தியும் வடக்கு, கிழக்கு, மலையகம் என்றாக பாராளுமன்ற மக்கள் தேர்வு அங்கத்தவர்களை பகிர்ந்து கொள்வர்

(தொடர்ந்தும் பேசுவோம்..)