இலங்கை பாராளுமன்றத் தேர்தல் (பகுதி 4)

விகிதாசாரப் பிரிதிநிதித்துவம் என்ற தேசிய அளவிலான, மாவட்ட அடிப்படையிலான பிரதிநிதித்துவ வாய்ப்பு கடந்த தேர்தலில் வாக்காளர்களால் நேரடியாக ஒரு உறுப்பினரைக் கூட பெற முடியாத ஐ.தே கட்சியிற்கு ஒரு ஆசனத்தை வழங்கி அது ரணில் விக்ரமசிங்காவை பாராளுமன்றத்திற்கு அனுப்பியதோ இதே மாதிரியான வாய்ப்புகள் சில தேசிய கட்சிகளுக்கு கிடைக்க இம்முறையும் வாய்ப்புகள் உண்டு.
அவ்வாறான வாய்ப்புகளுக்கு அப்பால் நேரடித் தேர்வாக பாராளுமன்றம் போவதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைக்காது.

பெரும்பான்மையாக என்பதை விட முழுமையான சாத்தியப்பாடுகளை தமிழ் கட்சிகளுக்கு ஏற்படுத்தி இருக்கின்றது அது தமிழரசுக் கட்சி ஈறாக.
தேசியக் கட்சிகளின் பாரம்பரியக் கட்சிகளான ஐ.தே கட்சி சுதந்திரக் கட்சி இவற்றின் வழத்தோன்றல்களும் இந்த பட்டியலில் அடங்குவர். இதில் அதிகம் அடிவாங்கப் போகும் கட்சியாக பொது ஜன பெரமுன அமையப்போவது அவர்களுக்கான தற்காலிக அரசியல் பின்னடைவுதான்.

இது வரை ஆட்சி அதிகாரத்தில் அதிகம் நேரடி பங்குதாரராக இல்லாது இருக்கும் சஜித் இன் ‘சுத்தமானவர்’ என்ற பிம்பம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பலமான எதிர்கட்சியாக வருவதற்கான வாய்ப்புகள் இருப்பினும் அரசியல் ரீதியான பலவீனமானவர்களாக பாராளுமன்றத்தில் அமர்வர்.

தமிழர் தரப்பில் இம்முறையும் குறைந்தளவு ஆசனங்களை பெற்றாலும் அதிக ஆசனங்களை தமிழ் பகுதியில் பெறும் கட்சியாக வீடுதான் பெறப்போகின்றது.

புலிகளின் தீவிர ஆதரவு சக்தியாக அவர்களால் நம்பப்படும் கட்சியிற்கு தேர்வு ஆசனம் நிச்சயம். அது கடந்த பாராளுமன்றத்தில் இருந்தது போன்ற அளவிற்கு வர வாய்ப்புகள் உண்டு.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி அனுரகுமார அளவிற்கு தமிழ் பிரதேசங்களில் தமிழ் பிரதிநிதிகளாக அருண் ஹேமசந்திரா அளவிற்கு யாரும் அதிகம் அறிமுகம் ஆகவில்லை என்பதற்கு அப்பால் மலையக மகனான சந்திரசேகரை எந்தளவிற்கு யாழ்ப்பாணிய மேலாதிக்க மனிநிலை அங்கீகரிக்கு என்பது கேள்விகளாக நின்றாலும் அனுராவில் அலை அவர்களுக்காக கௌரவமான எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர்களை வடபகுதியில் பெற்றுக் கொடுக்கும்.

வடபகுதியில் யாழ்ப்பாணம், வவுனியா என்றான அனுராவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் எந்த அளவிற்கு இலத்திரன் இயல் ஊடகங்கள் மூலம் சமான்ய மக்களை சென்றடைந்தது என்பதே இந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க போகின்றது.

வழமைபோல் மலைய கட்சிகள், முஸ்லீம் கட்சிகள் தங்கள் மக்களின் அடையாளத்தை முதன்மைப்படுத்தி சில வெற்றிகளை ஒன்று இரண்டாக பெறுவர்.

இது போல் முஸ்லீம் வெறுப்பு அரசியலை பகிரங்கமாக செய்து கிழக்கில் சந்திரகாந்தன் தனக்கான ஆசனத்தை நிறுவ முயலுவார். ஆனால் இம்முறை கடும் பிரயத்தனம் இல்லாவிட்டால் இதற்கான சாத்தியம் அவருக்கு இல்லை.

தேசிய அளவில் 130 வரையிலான ஆசனங்களை மொத்தமாக பெறும் வகையிலான வீச்சு தேசிய மக்கள் சக்தியிற்கு இருக்கும் நிலையில் ஏனைய கட்சிகள் தோரயமாக 90 வரையிலான ஆசனங்களை பெறுவதினால் கூட்டு அரசாங்கம் என்ற நிலை ஏற்பட வாய்ப்புகள் இல்லை.

இதனால் ஏனைய கட்சிகளுக்கு சிறப்பாக வடக்கு கிழக்கு மலையகம் என்றாக தமிழ் பேசும் மக்களின் கட்சிகளுக்கான அமைசர் அவை இடம் என்பது எட்டாக் கனியாகவே இருக்கும்….

இந்நிலையில் அமையப் போகும் அரசாங்கம் சந்திக்க போகும் சவால்களா..

கடந்த பல வருடங்களாக கட்டமைக்கப்பட அரசு இயந்திரமும், அது சார்ந்த நிர்வாகமும், இராணுவக் கட்மைப்பும்தான் அமையப் போகும் புதிய அரசில் தொடரப் போகின்றன.

இதில் மாற்றங்களை உடனடியாக ஏற்படுத்துவது என்பது இலகுவானது அல்ல.

ஆனால் இதற்குள் இருக்கும் புரையோடி இருக்கும் ஊழல், அதிகாரச் துஸ்பிரயோகம், நீதிக்கு எதிரான செயற்பாடுகள், அரசியல் அமைப்பிற்கு மாறான செயற்பாடுகளை சிறிது சிறிதாக சரி செய்ய முடியும்.

இதற்கான ஒத்துழையாமையும், எதிர்பும் உள்ளுக்குள் இருந்து கொண்டே இருக்கும்.

அரசியல் அமைப்பில் ஏற்படுத்தப்படும் சில மாற்றங்கள் மக்களுக்கானதாக அமைகப்பட்டு அதனை செயற்படுத்துவதே மாற்றத்திற்கான சிறந்த வழியாக இருக்கும் இதில்.. உடனடியாக இவ்வாறு அமைத்தல் அவசியாகின்றது.

உள்ளுர் உற்பத்தியை உச்ச நிலையிற்கு கொண்டுவருதல்….

இளைஞர் சக்தியை நாட்டை கட்டியமைப்பதற்காகக அறிவுசார் உழைப்பையும் உடல் உழைப்பும் அணிதிரட்டப்பட்டு செயற்படுத்தியாக வேண்டும்….

அது கடற் தொழில், விவசாயம், தொழில் நுட்பம், தொழிற்சாலை உருவாக்கம் என்பதான பார்வையுடன் கூடுதலாக உல்லாசப்பயணத் துறை நாடு தழுவியதாக தென் இலங்கையிற்கு அப்பால் விஸ்தரிகப்பட வேண்டும்…..

இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டி அமைத்து பொருளாதார மேம்பாடாக வாழ்க்கைச் செலவு குறைப்பு என்பதாக அத்தியாவசிய பொருட்கள், சேவைகளுக்கான கட்டுப்படியான வாழ்க்கைச் செலவுக் குறைப்பு என்பதை ஏற்படுத்த முடியும்….

குறிப்பாக தவிர்க்கப்படக் கூடிய இறக்குமதிகள் அது முட்டை, அரிசி என்பதாக தவர்த்து இவற்றை ஏற்றுமதி என்பதாக முன் நகரத்தியாக வேண்டும்….

கடன் வாங்கி சீவித்தல் என்பதை தவிர்க்கும் பொருளாதார மேம்பாடு ஏற்பட வேண்டும்…..

இதில் ஐஎம்எவ் உடனான கடன் பெறுதல் என்ற பொறி முறையும், இந்தியா, சீனா என்ற நாடுகளில் உதவி பெறுதல் என்ற விடயங்களை கையாளுதல் என்பதே இலங்கை அரசிற்கு பெரிய சவாக அமையப் போகும் விடயம்…..

இது உருவாகும் தேசிய மக்கள் சக்தி அரசை அகற்றல் என்ற வரையிலான குழப்பங்கள் வரை புற நிலையில் இருந்து சிலர் உருவாக்க முயல்வதை தடுத்து நிறுத்தல் என்பதாக இராஜதந்திர அணுகு முறை தேவை என்பதையும் அவசியமாக்குகின்றது.

வெளிநாட்டிற்கு ஓடுதல் என்பது ஒரு வருடத்திற்குள் முழு இலங்கைக்குமாக குறையும் என்பதான அறிகுறிகள் அரசு முன்னேறி நகர்வதை உணரத்தும்.

அது காலப் போக்கில் மேற்கத்திய நாடுகளுக்கு குறிப்பாக பொருளாதாரக் காரணங்களால் இடம் பெயர்ந்தவர்கள் இலங்கையிற்கு திரும்புதல் என்பது தமிழ் நாட்டு அகதி முகாங்களில் இருந்து அகதிகள் வேகமாகவும் அடுத்த கட்டமாக ஏனைய மத்திய கிழக்கு மேற்கத்திய நாடுகள் என்று நகருமாயின் 5 வருடம் என்பது இலங்கை உச்சத்ததை தொடர வாய்புகளை ஏற்படுத்தும்.

அதற்கு சிங்கள மக்களுக்கு அப்பால் ஏனைய தமிழ் பேசும் சிறுபான்மை மக்கள் இலங்கை எங்களின் நாடு என்பதாக உணரவும் மாற்றங்கள் நடைபெற்றாக வேண்டும்.

இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மலையகப் பொருளாதாரம் மலையக மக்களின் வாழ்வாதரம் மேன்மை அடைந்து சிறப்பாக்கப்பட்டு உருவாக்கப்பட வேண்டும்.

உயர் கல்வி முறையில் விருப்புடைய, நம்பிக்கை ஏற்படுத்தும் தொழில்சார் கல்வி முறை உருவாக்கப்பட்டு அதில் பெறப்படும் தயாரிப்புகள் உள்ளுர் சிறு குறு தொழில் முனைவிற்கு ஆதாரம் என்றாக வளர்ச்சியடைந்தாக வேண்டும்.

இவை எல்லாவற்றிற்கும் செலலூக்கத்துடன் செயற்படும் அதிகாரப் பரவலாக்கம் என்பது மாகாணசபை, உள்ளுராட்சி சபை என்பதாக அர்த்ததுடன் உரிமைகளுடன் செயலூக்கத்துடன் செயற்படும தேர்தல ஆட்சி நிர்வாக ஓழங்கு முறை தாமமதம் இன்று நடைமுறைக்கு வந்தாக வேண்டும்.

இராணுவக் குறைப்பு அது முகாங்களாக இராணுவத்தினரின் எண்ணிக்கை என்பதாகவும் அபகரிக்கப்பட நிலங்கள் என்பன இராணுவத் தேவை ஆகழ்வாரய்ச்சி என்பதானவை நிறுத்தப்பட பட வேண்டும்.
ஆட்சியிற்குள் மதம் இனப்பாகுடு முற்றாக முழுதாக தவிர்கப்பட வேண்டும்

புதிய பாராளுமன்றம் அமைந்து புதிய அமைச்சர் அவையின் பின்ராக தொடருவோம் உரையாடலை..

(தேர்தல் முடிந்தாலும் ஆட்சி பற்றிய கருத்துகள் தொடரும்…)