இப்பொழுது மட்டுமல்ல, எப்போதும் இலங்கையில் சீனா, இன ரீதியாக யாரோடும் எந்தத் தரப்புகளோடும் உறவாடல்களை வைத்துக் கொண்டதல்ல. அரசியல் விவகாரங்களைக் கையாண்டதுமில்லை.
சீனாவினுடைய அரசியலும் அணுகுமுறையும் வேறு. அது நீண்ட கால நோக்கில், தன்னுடைய வளர்ச்சிக்கேற்ப விஸ்தரிப்பைச் செய்யும் அடிப்படைகளைக் கொண்டது. அதற்கமைய விடயங்களைக் கையாள்வது. இதற்குள் சில நாடுகள் தாமாகவே சிக்கிக் கொள்வதுண்டு. சிலவற்றைச் சீனா மடக்கிப் பிடிப்பதுண்டு. இலங்கையில் முதலாவது வகையான தானாகவே சிக்கிக் கொண்ட நிலைமையே நடந்து கொண்டிருக்கிறது.