அவனது கூற்றுப்படி
இஸ்லாத்தின் படி
மனிதர்கள் மூன்று வகையாம்
- நம்பிக்கை கொண்ட முஸ்லிம்கள்
- வரி செலுத்தி இணக்கம் தெரிவிக்கும் மாற்று மதத்தவர்கள்
- கொல்லப்பட வேண்டிய காஃபிர்கள் இப்படி ஒரு விசயம் திருக்குரானிலோ நபிகள் நாயகம் அவர்களோ கூறியிருக்கிறாரா என்று எனது நெருங்கிய சகோதரர் ஒருவர் என்னிடம் கேட்டார். அவருக்கு ஏற்பட்ட அதே சந்தேகங்கள் எனது மாற்று மத சொந்தங்கள் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும் என்பதால் இந்த விளக்கம் தருவது எனது கடமையாகிறது.
இஸ்லாமிய நம்பிக்கை படி
இந்த உலகம் அனைத்து மத நம்பிக்கை கொண்டவர்களும் வாழ படைக்கப்பட்டது
அவரவர் மார்க்கம் அவரவர்க்கு. லக்கும் தீனுக்கும் வலியதீன் எனும் தெளிவாக திருக்குரான் கூறுகிறது.
உனக்கு எப்படி உன் மார்க்கமோ.அதைப்போல அவருக்கு அவர் மார்க்கம் என்பதை அதன் பொருள்.
யாரையும் வலிந்து நமது மார்க்கத்துக்கு இழுக்கக்கூடாது, மார்க்கத்தை பரப்ப போர் செய்யக்கூடாது , உயிரையும் உடமையையும் காப்பாற்றிக் கொள்ள நம் மீது வலிந்து திணிக்கப்படும் சமயத்தில் போர் செய்ய அனுமதி உண்டு.. ஆனாலும் அமைதியை தேர்ந்தெடுக்கவே முழு முய்றிசியும் செய்யப்பட வேண்டும் .
போரில் வென்றாலும் போர்க்கைதிகளை நல்லமுறையில் நடத்த வேண்டும்
போரில் அதில் ஈடுபடாத அப்பாவிகளைக் கொல்லக்கூடாது
என்பது திருக்குரானில் உள்ளது.
மேலும்
நபிகளார் இஸ்லாத்தை பரப்பும் முகாந்திரம் கொண்டு அவரது வாழ்நாளில் எந்த போரையும் முன்னெடுத்துச்சென்றதில்லை.
போரில் அப்பாவிகள் எனும் சிவிலியன்களை கொன்றதில்லை.
போர் மாண்புகள் கடைபிடிக்கப்பட்டன.
போரில் கைதான போர்க்கைதிகள் மாண்புடனே நடத்தப்பட்டனர்.
நபிகள் நாயகம் தனது சொந்த ஊரான மெக்காவில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு மதினாவில் அடைக்கலம் தங்கினார்
மீண்டும் பெரிய படையோடு மக்காவுக்கு சென்றாலும் அப்போதும் போர் புரியவில்லை. அமைதி வழியையே தேர்ந்தெடுத்தார்.
நபிகளாரின் பாட்டனார் மற்றும் பெரிய தகப்பனார் கடைசி வரை இஸ்லாத்திற்கு மாறவில்லை.
நபிகளாரும் அவர்களை கட்டாயப்படுத்தவில்லை.
இது வரலாற்று உண்மை.
இந்த சஹ்ரான் எனும் மனித குல விரோதி கூறும் மூன்று பிரிவுகள் பற்றி திருக்குரானில் எங்கும் கிடையாது.
இந்த “வரி” தொடர்பானது யாதெனில்..
முகமது நபி அவர்களின் ஆளுமைக்கு உட்பட்ட அரேபிய மண்ணில் ஷரியத் எனும் இறைச்சட்டம் நடைமுறையில் இருந்தது. இப்போதும் சவுதி அரேபியாவில் இருக்கிறது.
அந்த சட்டப்படி முஸ்லிம்கள் யாவரும் ஜகாத் எனும் கட்டாய வரி செலுத்தியே ஆக வேண்டும்.
அதாவது தாங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு பொருள் / செல்வத்தில் 2.5 சதவிகிதம் அரசுக்கு செலுத்த வேண்டும். இது ஏழைகளுக்கு பயன்படும். ஏழ்மையை ஒழிக்க பயன்படும்.
அந்த அரசுக்கு கீழ் வாழ்ந்த மாற்று மத சகோதரர்களுக்கு ஜகாத்தை விட குறைவான ஜிஸ்யா எனும் வரி வசூலிக்கப்பட்டது.
இதுவே உண்மை.
காபிர்கள் என்ற சொல்லின் அர்த்தம் ஒரு இறைவன் தான் என்பதை மறுப்பவர்கள் என்று பொருள். .அது கெட்ட வார்த்தை அன்று.
காபிர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்று குரானில் எங்கும் இல்லை
எங்கும் ஒரு உயிரைக்கொல்ல வேண்டும் என்று குரானில் குறிப்பிடப்படவில்லை.
உங்களை எதிர்த்து போர் செய்து எதிரி வந்தால் / உங்கள் உயிருக்கு/ உடமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் கொல்லுங்கள் என்று உள்ளது.
நபிகள் நாயகம் தான் இறக்கும் தருவாயில் கூட ஒரு யூதரிடம் தனது போர்க் கவசத்தை கடனுக்கு அடமானம் வைத்திருந்து அதன் மூலம் தனது வாழ்க்கையை வாழ்ந்தவர்.
அவரது அரசாங்கத்தில் யூதர்கள் , கிறிஸ்தவர்கள் போன்ற பல்வேறு மத மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர் என்பது வரலாறு.
இந்த படுபாதகன் உளறுவது எல்லாம் பக்கா மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு கிறுக்கனின் வாக்குமூலம்
மனித குல எதிரி அவன்
இவனது போக்கை சரியாக கணித்து
இவனை எதிர்த்தும் இவனது இயக்கத்தை தடை செய்யக்கோரியும் சில ஆண்டுகளுக்கு முன்பே இலங்கை வாழ் தமிழ் முஸ்லிம்கள் அரசிடம் போராட்டம் நடத்தி கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
அரசாங்கம் தான் மேம்போக்காக இருந்திருக்கிறது.
இலங்கை தமிழ் முஸ்லிம்கள் 99.9 சதவிகிதம் பேர் இவனை ஆதரிக்கவில்லை என்பது திண்ணம்.
அந்த வீடியோவை பார்க்கும் எனது மாற்று மத நண்பர்கள் புரிந்து கொள்ள இந்த விளக்கப்பதிவு
கூடுதல் விவரங்களை இஸ்லாமிய நண்பர்கள் கமெண்ட்களாக இடலாம். அதை அனைவரும் படித்து பயன்பெற ஏதுவாக இருக்கும்
இஸ்லாம் பற்றி நல்ல விசயங்களை நாம் கூறக்கடமைப்பட்டவர்கள்