அதுவும் இன்றைய இலத்திரனியல் ஊடக யுகத்தில் ஒரு செய்தி மிகவும் வேகமாக ஒலி ஒளி எழுத்து ஊடகங்கள் வழியாக உடனடியாக எங்கும் பரவி ஒரு பொது அபிப்பிராயத்தை ஏற்படுத்தி விடுகின்றது.
அதுவும் அந்த செயற்பாடு அந்த சமூகத்தின் பண்பை கலாச்சாரத்தை அரசியல் செயற்பாட்டை உடையதாக இருக்கும் போது அது இன்னும் பலமான தாக்கத்தை சர்வ தேச சமூகத்திடம் அந்த சமூகத்திற்கு எதிர்காலத்தில் ஏற்படுத்தி விடும்அண்மையில் ஈழத் தமிழர்கள் அதிகம் வாழும் புலம்பெயர் தேசமான கனடாவின் ரொரன்ரோவில் நடைபெற்ற தெரு விழாவில் ஒரே தன்மையுடைய இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் இவ்வாறுதான் ஈழத் தமிழர் மீதான் பார்வைவையை சர்வதேச சமூகத்திடம் எடுத்துச் சென்றிருக்கின்றது.
பல நாடுகளின் தேசிய இனங்கள் குடியேறி வாழும் கனடாவில் கோடை காலத்து களியாட்டங்களாக வார இறுதிகள் தோறும் தெருவை மறித்து பல்வேறு இனங்களின் தெரு விழாக்கள்; பலவேறு இடங்களில் நடைபெறுவது வழமை.இதனை அரசும் ஊக்குவிக்கின்றது.
அதில் ஒன்று தான் தமிழர்களின் இந்த தெருவிழா. இந்த தெரு விழாவை நடத்தக் கூடாது பகிஸ்கரிக்க வேண்டும் என்றாக இரு குழுக்கழுக்கிடையே நடைபெற்ற குழப்பங்களே இந்த பதிவை எழுத்த வைத்திருக்கின்றது
இத்தனைக்கும் இந்த இரு குழுக்களும் யுத்த காலத்திலும் அதற்குப் பின்னரும் ஒரே தன்மையுடன் பயணித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கிளை அமைப்புகள்தான்பணம் சேகரித்தல் என்பதை ஈழத் தமிழர்களின் விடுதலை என்பதாக ஆரம்பித்து அதிகம் சுய உழைப்பில் ஈடுபடாத மக்கள் பணத்தில் சீவிப்பவர்கள் இதில் அதிகம் அங்கம் வகிக்கின்றனர்
யுத்தம் முடிந்த பின்பும் எதோ ஒரு காரணங்களைச் சொல்லி பணம் வசூல் செய்யும் செயற்பாடுகளைத் தொடருபவர்கள் இவர்கள்.இதற்கான பொது அமைப்பை உருவாக்கி கனடிய அரசு வழங்கும் சலுகைகள் நிதி உதவிகளை வாங்கி இந்த பொது அமைப்பிற்குள் தமது வட்டத்திற்கு அப்பால் யாரும் நுளைய முடியாத இரும்பு வளைத்தை போட்டு செயற்படுபவரகளே இந்த தமிழ் ஈழத் தமிழர் அமைப்புகள்.
கிடைக்கும் வழங்கள் வாய்ப்புகள் நிதிகள் அது சார்ந்த நிதி சேகரிப்பு கௌரவம் என்று எல்லாவற்றையும் தமக்குள் பங்கிடும் ஒரு செயன் முறையை மிகவும் இலாவகமாக பல ஆண்டுகள் செய்து வருபவர்கள் இவர்கள்இதற்காக புலிகளின் இருப்பு காலத்தில் இலங்கை அரசுடன் பகிரங்க உறவுகளை வைத்திருக்காதவர்கள் இவர்கள்.
யுத்தம் முடிந்த பின்பு ஊருக்கு போய் வருதல் என்பதாகவும் இலங்கை அரசுடன் இதிலும் சிறப்பாக தமிழ் மக்கள் அதிகம் குற்றம் சாட்டும் இறுதி யுத்தத்தின் ராஜபக்சா குடும்பத்துடன் அவர்களின் அதிகார வர்க்கத்துடன் உறவுகளை ஆரம்பித்தவர்கள்.
அது பின்னர் இலங்கையில் ஆட்சியில் அமரும் எல்லோருடனும் தொடர்ந்ததே வரலாறுஇதற்கு இமாலயா பிரகடனம் எம் பிரதேசத்தின் அபிவிருத்தி புனருத்தாரணம் புனர் நிர்மாணம் வடமாகாண விக்னேஸவரன் ஆட்சி என்று எதோ ஒன்றை முன்னிலைப்படுத்தி இராணுவ வானூர்த்திகளில் பயணப்படும் அளவிற்கு உறவுகளை பகிரங்கமாகவும் இரகசியமாகவும் வைத்திருந்தவர்கள்… வைத்திருப்பவர்கள்….
இவர்கள்கூடவே தமிழ் மக்களுக்கு தாம் வாழும் புலம் பெயர் நாட்டில் பாராளுமன்றம் வரை சென்று குரல் கொடுப்போம் என்றான வாக்கு அரசியலை இங்கு உருவாக்கி குத்து விளக்குகளை பொது நிகழ்ச்சிகளில் ஏற்றுவதற்குரிய பிரமுகராக மாறுவதற்கும் இந்த குழுக்களைப் பாவித்தவர்கள் எம்மவர்கள்.
தமிழர்களின் தெருத் திருவிழா என்பது இரு புறமும் சேர்த்து ஆறு வழிச்சாலையை வார இறுதியில் முழுமையாக மூட வைத்து கடைகள் விரித்து தென் இந்திய திரை சின்னத் திரைப் பிரபல்யங்களை அழைத்து வந்து வியாபாரங்களுக்கு கடை அமைக்க பூத்திற்கு இத்தனை இலட்சங்கள் நாள் குத்தகையாக வசூலித்து தென் இந்திய பிரபலயங்களின் மினுக்கங்களை மக்களை இரசிக்க வைத்து ‘தமிழரின் திமிரை’ தாம் காட்டுவதற்காகவே இந்த தெருவிழா என்று பீற்றிக் கொள்பவர்கள் இந்த விழா அமைப்பாளர்கள்.
இதில் தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம் என்று பிற சமூகத்தினர் இனம் காணும் வரையிலான தடயங்களை அதிகம் பதிப்பதற்கான செயற்பாடுகளோ தயாரிப்புகளோ இல்லாது இருப்பது இந்த ஏமாற்று வேலையின் உச்சக் கட்டம்.
கொத்து ரொட்டியும் சின்னத்திரை சிலு சிலுப்புக்களும் தமிழ்த் திரை இசைப்பாடல்களும் கோட்டும் சூட்டும் என்றாக வலம் வந்து இங்கும் உண்டியலை குலுக்குபவர்கள் இவர்கள்
சில வருடங்களுக்கு முன்பு மட்டக்களப்பு வியாளேந்திரனை அழைத்து வந்து உண்டியல் குலுக்கலை ஆரம்பித்து வைத்து அவருக்கான இன்றைய அரசியலை ஆரம்பித்து வைத்தவர்களும் இவர்கள் தான்.
அன்று இவர்கள் எல்லோரும் ஒன்றாக நின்றே அதனையும் செய்தனர்யுத்தத்தின் பின்னர் இந்த 15 வருடங்களாக ஏற்படாத இந்த ஒரே நச்சு விதைகளில் இருந்து உதிர்த்த பூக்களிடையே இம்முறை தெருவில் சண்டித்தனமாக உருவெடுத்ததற்கு ராஜபக்சாக்களுடன் உள்ள தொடர்பு என்று வெளி உலகிற்கு காட்டப்பட்டாலும் இதில் சொல்லாததாக பணத்தை பங்கிடுவது எப்படி…? யார் தமிழ் மக்களின் மத்தியில் தேசியம் பேசும் விண்ணர்கள் என்று காட்டுவதில் இருந்த போட்டியே பிரதான இடத்தை பிடிக்கின்றது
1985 களில் யாழ்ப்பாண பல்கலைக் கழக கiலாசபதி கலையரங்கத்தில் நடைபெற்ற ‘தமிழ்கள் மத்தியில் ஒரு முற்போக்கான கலாச்சாரா விழுமியங்களை கட்டமைக்க வேண்டும் என்று மண்டபம் திரள் கூட்டம் நடைபெற்றது.இதில் முக்கிய பேச்சாளர் பலர் பல்கலைக் கழகத்தை சேர்ந்தவர்கள் இருந்தாலும் இதில் குறிப்பாக 1987 களின் பின்னர் புலிகளின் வரலாற்றுத் துறைப் பொறுப்பாளர் மு. திருநாவுக்கரசரும் ஆவார்
நானும் இந்த கூட்டத்தில் பார்வையாளராக கலந்து கொண்டேன்.
கூட்டம் முடிந்த பின்பு பல்கலைக கழக முன்றலில் உள்ள மர நிழலில் தோழர்களுடன் கதைத்துக் கொண்டிருந்த போது சுட்டுவிரலால் என்னை அழைத்த ‘ஒருவர்’எவ்வளவு முடியுமோ அவ்வளவு முடியும் அளவிற்கு தமிழர்களில் மிகச் சிலர் பாவிக்கும் அத்தனை தூசண வார்த்தைகளால் என்னை ஏசி
‘…..இதற்கான பதிலை தரவேண்டும்…. அவரை உடனே விடுவிக்க வேண்டும்…’ என்று என்னை அணுகியவர் புலிகளின் ஆரம்ப காலத்து பதின்மர்களில் ஒருவரான சந்தோசம் என்பவர்.அரியாலைச் சேர்ந்த உமைநேசன் இவர் திருகோணமலையின் புலிகளின் பொறுப்பாளராக இருந்தவர்.
தற்போது அவர் மரணமைந்தும் விட்டார்
இதனைக்கும் அன்று புலிகள் உட்பட ஈபிஆர்எல்எவ் ரெலோ ஈரோஸ் என்பன ஐக்கிய முன்னணியாக செயற்பட்ட காலம் இதுஇந்த சம்பவம் என்னை மனத்தளவில் பாதிக்க அன்று தன்னை பொதுவானவராக அடையாளகப்படுத்திக் கொண்டிருந்த திருநாவுக்கரசரிடம் எனக்கு நடந்தைதை ஆதங்கமாக உடனே வெளிப்படுத்திய போது….
‘….இப்படியும் நடைபெறுகின்றது இப்படியான சம்பவங்களைத்தான் நீங்கள் புரட்சிகரமான கலாச்சாரத்தை கட்டியமைக்க வேண்டும்….’ என்று பேசினீர்களா என்றதற்கு….
‘….. இப்படியானவர்களும் இருக்கின்றார்கள் என்று கூற அதுவும் உங்களை போன்ற மென்மையான பண்பானவர்களை அவ்வாறு பேசியது மனத்திற்கு சங்கடமக இருக்கின்றது….’ என்று அவர் கடந்து போய்விட்டார்
இத்தனைக்கும் உமைநேசன் பல்கலைக் கழகத்தின் என் சக வகுப்பு மாணவன். ஐக்கிய முன்னணியில் உள்ள அமைப்பின் உறுப்பினர் மூத்த போராளிஇந்த ஒரு சம்பவத்தைத்தான் நான் ஒரு குறியீடாக இங்கு முன்வைக்கின்றேன்
அண்மையில் தெருவிழாவில் நடைபெற்ற தெருச்சண்டையில் பலரும் பாவித்த சொல்கள் சந்தோசம் அன்று பாவித்த சொற்களின் தொடர்ச்சிதான்…..
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தை புலிகள் தாக்கிய போது வீரசிங்கம் மண்டபத்தில் நின்றபடி வாக்கி ரோக்கியால் தனது சாகாக்களுக்கு போர் முனையில் ஆகக் கூடிய பின் முனையில் நின்றபடி இதே தூசண வார்தைகளை பாவித்து முன்னோக்கி நகருவதற்கான ஆணைகளை கிட்டு பாவித்தார்.
அன்றைய காலத்தில் பிரபல்ய செய்தி.
இதுதான் அந்த இயக்கத்தின் புலம்பெயர் தேசத்து அடியாட்களின் ‘கலாச்சாரமாக’ தெரு விழாவில் தொடர்ந்திருந்தது.இந்தச் தெருவில் சண்டை ஈடுபடும் போது ஊடக வெளிச்சத்திலும் வெளிப்பட்டது.
2009 மே 18 இற்கு முன்னர் வருடா வருடம் நடைபெறும் பிரபாகரனின் மாவீரர் உரையிற்கு அன்று மாலையே பொழிப்புரை செய்வது ‘தேசத்தின் குரல்’ என்ற அடையாளத்துடன்பாலசிங்கத்தின் வழமை.
இந்த பொழிப்புரையில் இருக்கும் நாகரீகம் அற்ற பொது வெளியில் பேசுவதற்கு ஏற்ற சொற் தொடர்களை தூசணங்களை பாவிப்பதும் அதனை கை கொட்டி இரசிப்பதாகவுமே இந்த கூட்டத்தை தமிழ் மக்களின் புரட்சிகரமான காலாச்சாரமாக கட்டியெழுப் இருந்தார்கள் இதன் வெளிப்பாடுகளும்தான் அண்மைய தெருச்சண்டையில் வெளிப்பாடுகள்
கனடாவில் அரசியல் ஆளுமை செலுத்திய பொப் ரே இன் ஈழத் தமிழர்களுடனான கூட்டத்திற்கு வந்து அவரைப் பேசவிடாமல் கூட்டத்தை குழப்பி செயற்பாடுகளின் தொடர்ச்சிகள் தான் இந்த தெருவிழாக் குழப்பங்களின் செயற்பாடுகள்.
அன்று அந்த கூட்டத்தை இந்த இருதரப்பினரும் ஒன்றாக நின்றே குழப்பத்தை செயற்படுத்தினர்இத்தனைக்கும் அன்று ஐ.நா வரை உலக நாடுகள் வரை பொப் ரே இன் அரசியல் ஆளுமை இருந்ததும்….2004 போர் நிறுத்த காலத்தில் யாழ்ப்பாணத்திற்கு சென்று வந்த பொப் ரே ‘…..இரு தரப்பும் நெருங்கி வந்து பிரச்சனையை தீர்ப்பதற்கான எந்த வாய்ப்புகளும் இல்லை…’ என்று யதார்த்தங்களை வெளியிட்டவர்
ஒரு சமூகத்தின் பெரும்பான்மையாக ஆளுமை செலுத்திய அரசியல் செயற்பாடுகளின் வெளிப்பாடக இதனைப் பார்க்க முடியும்.
இதனை நாம் சுய விமர்சனமாக பார்த்து இதனை திருத்துவதற்கு…. சரி செய்வதற்கான… செயற்பாடுகள் உலக அரங்கில் ஈழத் தமிழர்களின் அபிலாசைகள் அரசியல் கோரிகைகள் நியாயமானவை என்ற எற்புடமையை நாம் சலர்வ தேச சமூகத்திடம் நாம் பெற முடியும்.
அவ்வாறு பெற முடியாத சூழலில் நாம் தொடர்ந்தும் தோற்றுப் போனவரகளாகத்தான் தொடர வேண்டிய நிலை ஏற்படும்.
தற்போது உலகெங்கும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான போராட்டங்களில் காட்டப்படும் கண்ணியங்களை நாம் பாடங்களாக கொள்வோம்.’தொப்பி புரட்டி’ ‘வயித்துக் குத்துக்காரன்’ என்று வடக்கில் இருந்து முஸ்லீம்களை விரட்டிய போது அதற்கான நியாங்களை எழுத முற்பட்டவர்கள் எழுதியவர்கள் இன்னமும் எழுத்திக் கொ ண்டிருப்பவர்கள்…
வடக்கிற்கு இடம் பெயர்ந்த மலையக மக்களை கூலிகளாக சிப்பாய்களாக மட்டும் பாவித்து வயித்துக் குத்துகாரன் என்று இன்று வரை மூன்றாம் தரப் பிரஜைகளாக ஒரே மொழி பேசுபவர்களை அவ்வாறு செய்பவர்கள் அதனை ஊக்கிவித்தவர்கள்தான் தென் இந்தியாப் பாடகர் சிறீநிவாசை அதே மொழியாடலில் வடக்கத்தையான் என்று ஏசி மேடையில் இருந்து விரட்டி அடிக்க முற்பட்டவர்கள்.
இது ஒன்றும் புதிதாக உதித்தது அல்ல ஒரு வரலாற்றுப் பிறழ்வின் தொடர்ச்சிதான் ஒன்று.இங்கு மேலே உள்ள பத்தியில் பாவித்து அந்தந்த சமூகங்களை இழிவுபடுத்துவதற்காக குறிபிடுமு; சங்கேத வாரத்தைகளில் எனக்கு உடன்பாடும் இல்லை அதனை பாவித்தமையிற்காவும் வருந்துகின்றேன்….
மன்னிப்பும் கேட்கின்றேன்
இதனை புலம் பெயர் தேசத்தில் உள்ள சிலர் மட்டும் அல்ல அதே பிரதான நீரோட்டத்தில் உள்ள இயக்கத்தினரும் பாவித்தனர். இந்த ‘புரட்சிகர’ தமிழ் காலசாரம்தான் இயகத்தால் யுத்த காலம் முழுவதும் கலாச்சாரம்தான் வளர்தெடுகப்பட்டிருக்கின்றது.
அதனால்தான் அந்த 1984 காலகட்டத்து கைலாசபதி கலையரங்க கூட்டத்தை இங்கு குறிப்பிட்டேன்இது ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பில் இருந்து ஆயுதப் பயமுறுத்தலால் வளர்க்கப்பட்டாலும் இதற்கு மன்பே இருந்த வலதுசாரி தமிழ் மிதவாக அரசியல்வாதிகளின் செயற்பாட்டின் தொடர்ச்சிதான்
நாடு கடத்துவதற்கான ஒப்பந்தத்தில் நம் தமிழ் மிதவாதத் தலமைகள் ஆதரவு தெரிவித்த பாராளுமன்ற செயற்பாடுகளில் நாம் இதனைக் காணலாம்
யாழ் பல்கலைக் கழகத்திற்கு இலங்கை இந்திய ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்தியாவால் வழங்கப்பட்ட சொகுசு பேரூந்தை பல்கலைக் கழக முன்னறில் வைத்து கொழுத்தியவர்களுக்கு அதனை நியாயப்படுத்தியவர்களுக்கு இங்கும் தெருவிழாவில் ஊடக வாகனத்தை கொழுத்தியதியதை ஒன்றும் நாம் எதிர்பார்காததை செய்தாக உணர முடியவில்லை.
இதற்குள் வேறு சில காப்புறுதி இரகசரியங்கள் இருந்தாலும் இந்த அழித்தல் என்பது அன்றே ஆரம்பமானதுதான்
சர்வ தேச சமூகமே ஈழத் தமிழர்களின் பெருபான்மையானவரகள் பண்பான காலாச்சார விழிமியங்களை உடையர்கள்.
இந்த தெருச்சண்டையில் ஈடுபடும் சில வீணர்களின் செயற்பாடுகளை வைத்து ஈழத் தமிழர்கள் அனைவரும் அவ்வாறானவர்கள் என்ற முடிவிற்கு வராதீர்கள்.
எங்கள் சமூகம் ஒரு வளர்ச்சியடைந்த கலாச்சாரப் பின்புலத்தை உடையது என்பதை நம்புங்கள்.
ஆனால் இந்த வீணர்களை நிராகரிக்காமல் கடைகளை வைத்து முழுமையாக அவியாத சாப்பாடுகளை விற்று பணம் பண்ணும் வியாபாரக் கூட்டத்தினரும் இணைந்து எம் கலாசார உணவுகள் உடைகள் கலை நிகிழ்ச்சிகளை நாறடிக்கின்றார்கள்.
இது ஒரு தெருச் சண்டைதான் இது ஈழத் தமிழ் சமூகத்தின் பொது போக்கின் செயற்பாடு அல்ல என்பதை சர்வ தேச சமூகத்திற்கு எடுத்து கூறும் வரலாற்றுப் பொறுப்பில் இதனை எழுதுகின்றோம்