ஈழப்போராட்டம் அதன் பிரதான போக்கு முன்னுதாரணமல்ல. படிப்பினையாக எடுத்துக் கொள்ளலாம். அதன் இருண்ட பக்கம் ஜனநாயக விரோதமானதாகவும் போராடவந்தவர்களை உள்ளிருந்தே கொல்லும் வியாதியாகவும் உடல்மீதியின்றி அழிப்பதாகவும் காணமல் போக்கடிக்கச் செய்வதாகவும் அமைந்திருந்தது. முற்போக்கு ஜனநாயவாதிகள் மனித உரிமைவாதிகள் பெண்ணுரிமைவாதிகள்கள் ஊடகவியலாளர்கள் சக சமூகங்கள் சக போராளிகள் மக்கள்- தலைவர்கள் எவரும் எதுவும் விதிவிலக்காக இருக்கவில்லை அதன் சாரம்சமான பாசிச இயல்பு எல்லாவற்றையும் ஏப்பம் விட்டது.
ஆரம்பத்தில் ஜனநாயக இடைவெளியை கொஞ்சநஞ்சமேனும் கொண்டிருந்தது பின்னர் எல்லாவற்றையும் சுவடில்லாமல் அழித்தது.
கடைசியில் துன்பியலாக தன்னையும் அழித்தது.
தமிழக மாணவர் இளைஞர்களின் எழுச்சி காந்திய அறங்களில் வேர்கொண்டிருந்தது. வேறுபட்ட அபிப்பிராயங்களுக்காக கண்மூடித்தனமான துரோக முத்திரை, பால் ரீதியான தூற்றுதல்கள், தீண்டாமை போன்றவற்றை அண்டவிடாமல் பார்க்க வேண்டும் .
அவை முளையிலேயே எல்லாவற்றையும் நாசம் செய்துவிடும்.
கருத்து இடைவெளி வேறுபடும் உரிமை உலகத் தமிழ் சூழலில் பாதுகாக்கப்பட வேண்டும்.
(Sugu)