இரு மொழி பேசும் இனங்களை இலங்கை தன்னகத்தே கொண்டிருந்தாலும் பண்பாட்டு கலாச்சார வாழ்விடம் என்பவற்றின் அடிப்படையில் இது சிங்கள மக்கள், தமிழ் மக்கள், முஸ்லீம் மக்கள், மலையக மக்கள் என்ற தேசிய இனப் பரிணாமத்தை உடைய இனங்களை தன்னத்தே கொண்டதாக இன்று வளர்ச்சியடைந்துள்ளதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஈழவிடுதலை ஆரம்பத்தில் தமிழ் பேசும் மக்கள் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் ஓரளவிற்கு ஓரணியில் திரண்டு இருந்தாலும் பேரினவாதத்தின் செயற்பாடும் தமிழ் பேசும் மக்களின் போராட்டத்திற்கு தம்மை ஈடுபடுத்திய ஆயுதம் தாங்கிய விடுதலை அமைப்புகளும் தமிழ் பேசும் மக்கள் என்ற ஒற்றுமையை சிதைத்துவிட்டனர். இது ஆயுதப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பே பாராளுமன்ற மிதவாதத் தமிழ் தலமைகளினாலும் அவர்களின் தவறான அரசியல் அணுகு முறையாலும் உருவாக்கப்பட்டது.
பிரித்தானியர் இலங்கையை தமிழர்கள் சிங்களவர் என்று பிரித்தாண்டதை சுதந்திரத்திற்கு பின்னரான காலத்தில் சிங்களத் தலமைகள் சிறுபான்மையினரை பல்வேறு கூறுகளாக உடைப்பதில் அது பிரதேச ரீதியிலும் இனரீதியலும் பகை சமூகங்களாக உருவாக்குவதற்குரிய முரண்பாடுகளை எண்ணை ஊத்தி வளர்ப்பது என்ற வகையிலும் வளர்த்து விட்டனர்.
பேரினவாதத்தின் இந்த செயற்பாட்டிற்கு செயல்வடிவம் கொடுத்ததில் தமிழ் தலமைகளுக்கும் பெரும் பங்கு உண்டு. ஆயுதப் போராட்டத்திற்கு முன்பு மலையக மக்களின் குடியுரிமை மறுக்கப்பட்டு பறிக்கப்பட்டு நாடற்றவர்கள் அல்லது இந்தியாவிற்கு திருப்பி அனுபப்பட்டவர்கள் என்ற வகையிலான பேரினவாத்தின் செயற்பாடுகள் நடைபெற்ற போது தமிழ் பேசும் மக்களின் பலம்மிக்க தலமை யாழ் மேலாதிக்கவாத தலமைகள் மலையக மக்களுக்கான ஆதரவுக் குரலை உயர்த்தி எழுப்பவில்லை.
அதே போல் முஸ்லீம் மக்களுக்கு எதிராக 1915 களின் ஆரம்பத்தில் காலிப பிரதேசத்தில் நடைபெற்ற கலவரத்தில் அன்றைய தழிழர் தலைவராக இருந்த இராமநாதன் பிரித்தானியா வரை சென்று நியாயத்திற்கு புறம்பாக சிங்கள தலைவர்கள் பக்கம் நின்று ஏற்படுத்திய இடைவெளி தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் உருவாக்கம் என்ற காலத்தில் சரி செய்யப்பட்டதாக காட்டப்பட்டாலும் முஸ்லீம் தலமைகள் தனித்துச் செயற்பட வேண்டிய நிலமையை உருவானதை தடுக்க போதுமான நம்பிக்கைகளை ஏற்படுத்த முடியவில்லை. இதுதான் பேரினவாதத்தின் விருப்மாகவும் இருந்தது.
ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் மலையக இளைஞர்களும் கணிசமாக முஸ்லீம் இளைஞர்களும் ஈழவிடுதலைப் போராட்டத்தில் தன் எழுச்சியாக தம்மை இணைத்துக் கொண்டனர்.
பத்மநாபா தலமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் அதனைத் தொடர்ந்து இன்று உருவாகி இருக்கும் தமிழர் சமூக ஜன நாயகக் கட்சி என்ற போன்றவர்கள்தான் தமிழ் பேசும் சகல இனங்களையும் அவரவர் தனித்துவத்தை ஏற்று பயணப்படுவதில் விடாப்பிடியாத இருந்தனர்… இருக்கின்றனர்…
கடந்த காலங்களில் அவர்களின் பேராளர் மகாநாடுகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தமிழர்களுக்குள் இருக்கும் இந்த சிறுபான்மை மக்களின் தனித்துவத்தை சுயநிரண அடிப்படையிலும் ஏற்றுக் கொண்டனர் அவ்வாறு செயற்படுகின்றனர். இதனை அவர்களின் மகாநாடுகளின் பின்பு வெளியிட்ட அரசியல் அறிக்கையில் தெரிவித்தும் இருக்கின்றனர்.
ஈழவிடுதலைப் போராட்ட காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முஸ்லீம் மக்களுக்கு எதிராக வடக்கில் இருந்து முழுமையாக இன சுத்திகரிப்பு செய்தது போன்ற சில மணி நேரத்திற்குள் வடக்கை விட்டு வெளியேற வைத்த கோரச் செயற்பாடுகளும் கிழக்கில் பள்ளிவாசலுக்குள் புகுந்து நடாத்திய கொலைகளும் அவற்றை இன்றுவரை நியாhப்படுத்தும் செயற்பாடுகளும் தமிழ் பேசும் மக்கள் என்று ஓரணியில் சிறுபான்மையினர் ஒன்றாக இணைந்து தமது அரசியல் உரிமைகளை தொடர்ந்தும் வென்றெடுக்க இணைந்து போராடுவதற்கான இணைவுகளை தடை போட்டு வருகின்றன.
இனக் கலவரங்களால் வடக்கிற்கு சிறப்பாக கிளிநொச்சி பகுதியிற்கு இடம்பெயர்ந்த மலையகத்து மக்களை எம்மவர்களாக யாழ் மேலாதிக சிந்தனை வாதமும் அதனை பிரநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற மிதவாதத் தலமைiயும் ஆயுதப் போராட்டத்தில் வெறும் சிப்பாய்களாக அவர்களை களத்தில் முன்னணியில் அனுப்பி கொலை களம் காணவைத்த உணர்வுகளையும் கொண்டே ஈழவிடுதலைப் போராட்டம்.
இது போன்ற செயற்பாடுகளை முன்னிலை வகித்து செயற்பட்டவரகள்தான் புனிதர்களாக சிலரால் பார்கப்படும் பிரபாகரன் தலமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளும் இன்று அவர்களை தமது தலமைகளாக வரிந்து கட்டிக் கொண்டிருக்கும் குறும் தமிழ் தேசிய வாதிகளும்
இந்த பாகுபடுத்தல் போன்ற விடயங்களை அம்பலப்படுத்தும் மாற்றுக் கருத்து முற்போக்கு ஜனநாய இடதுசாரிச் சத்திகளை ஈழவிடுதலைப் போராட்ட அரங்கில் இருந்து அகற்றுவதற்கான வேலைத் திட்டங்களை ஆரம்பித்தவர்கள் இது 1986 ம் ஆண்டு மே மாதம் ரெலோ என்ற அமைப்பில் ஆரம்பித்து அதே ஆண்டு டிசம்பர் 13 திகதி பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எல்எவ் அமைப்பினரை ஆயுதங்களால் கொன்றொழிக்க முற்பட்ட செயற்பாட்டுடன் முடித்து வைத்து ஏக போக தலமையினை உருவாக்கி பலவீனபட்டுப் போனவர்கள்தான் தமிழீழ விடுதலைப் புலிகள்தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது அதுதான் ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றின் ஒரு அங்கம்.
தமிழ் பேசும் மக்களுக்கான போராடும் உரிமையை மறுத்த இந்த ஜனநாயக விரோத பாசிச செயற்பாட்டை புலிகள் செய்து முடித்தனர்
தமிழ் நாட்டில் வாழும் எமது மொழி பேசும் தொப்புள் குடி உறவுகளும் ஈழ மக்களின் பால் இருந்த பாசத்தினால் சிங்கள் இராணுவம் தமிழர்கள் கொல்கின்றார்கள் அதற்கு எதிராக புலிகள்(மட்டும்) போராடுகின்றார்கள் என்ற மாயக் கண்ணாடி ஊடாக புலிகளின் செயற்பாடுகளைப் பார்த்து அவர்களை நிபந்தனையின்றி ஆதரித்த செய்பாடுகள் பெரும்பாலும் தொடர்ந்ததுதான் 1987 இல் இருந்து 2009 வரையிலான காலகட்டம் இதற்கு விதி விலக்காக சில அமைப்புகள் நபர்கள் இருந்தாலும் அதுதான் இன்றுவரை தொடர்வதாக ஒரு விம்பம் இருக்கின்றது.
புலிகளாலும் அவர்களின் ஆதரவாளர்கள் அல்லது நிதி பெறுபவர்கள் என்று அறியப்பட்ட பலராலும் புலிகள் ஏனைய விடுதலை அமைப்புகளை அவர்களின் தமிழ் மக்களுக்கான போராடும் உரிமையை தடைசெய்து ஆயுதச் செயற்பாடுகளால் அவ் அமைப்புகளின் போராளிகளை கொலை செய்தது…. முஸ்லீம் மக்களை வடக்கில் இருந்து முழுமையாக தடை செய்து விட்டார்கள் துரத்திவிட்டார்கள் என்ற விடயம் மறைக்கப்பட்டு சிங்கள அரசின் கொடுமையில் இருந்து மக்களை காப்பாற்றும் தியாகத்துடன் புலிகள் போராடுகின்றார்கள் என்ற கதைகளே விம்பங்களே உருவாக்கப்பட்டன. இந்த பாசிச செயற்பாடுகள் மறைக்கப்பட்டு அவர்கள் தியாகச் செம்மல்கள் என்ற ஒரு விம்பம் உருவாகப்பட்டது.
ஏனைய விடுதலை அமைப்புகளின் உறுப்பினர்களை அந்த அமைப்புகளை தடைசெய்து கொலை செய்தது தமிழ் பேசும் முஸ்லீம் மக்களை முழுமையாக வடக்கில் இருந்து இனசுத்திகரிப்பு செய்து என்பனவற்றை பேசுவதை தவிர்த்து அல்லது தெரிந்தும் தெரியாதது போல் செயற்பட்டனர் செயற்படுகின்றனர் புலிகளின் ஆதரவு சக்திகள்.
இதன் வெளிப்பாடு இந்திய அமைதிபடையில் சமாதான் செயற்பாட்டை புலிகள் குழப்ப இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான தமிழ் மகாணமாக பரிணாமம் பெற்று உருவான இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபை அரசை இல்லாமல் செய்து அந்த அரசை ஆட்சி செய்தவர்களை கொலையும் செய்தனர்.
கூடவே இந்திய இராணுவம் தமிழ் மக்களை காக்க வந்த அமைதிபடை தானாக தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் புரிய வந்த இராணுவம் என்பது போன்ற பிம்பங்களை உருவாக்கினர்.
புலிகளின் தமது ஏக போக செயற்பாடுகள் முடிவிற்கு வருவதாக பயந்து மாற்றுக் கருத்த அமைப்புகள் இந்த ஒப்பந்தின் பின்னர் தடையின்றி தமிழ் பிரதேசம் எங்கும் அரசியல் செயற்பாட்டை செய்யலாம் என்பதை விரும்பாத விடுதலைப் புலிளின் செயற்பாட்டின் அங்கங்களே இந்திய இராணுத்திற்கு எதிராக புலிகள் தொடுத்த யுத்தத்தின் பிரதான கூறு ஆகும். இதனை பலரும் இலாவமாக மறைத்து, மறுத்தும் வருகின்றனர்.
1987 இல் ஏனைய விடுதலை அமைப்புகளை முழுமையாக தமிழ் பிரதேசங்களில் இருந்து செயற்பட முடியாமல் துப்பாக்கி முனையில் புலிகள் ஈடுபட்ட பாசிச செயற்பாடுகள் 2009 மே மாதம் முள்ளிவாய்கால் யுத்தத்தின் பின்னரே முடிவிற்கு வந்தது.
இதனைப் பகுத்தாய்வு செய்து புரிந்து கொள்ளும் நிலையில் பிரதான நிரோட்டத்தில் இருந்த தமிழக கட்சிகள் செயற்பாட்டாளர்கள் பலரும் இருக்கவில்லை என்பது வரலாற்றில் ஏற்பட்ட முக்கிய பிறழ்வு ஆகும்.
ஆனால் 2009 புலிகளின் ஏக போக செயற்பாடும் நட்புசக்திகள் அருகிப் போய் பகை சகத்திகளை தனக்குள்ளும் வெளியேயும் உருவாகிக்கி புலிகள் பாசிச செயற்பாட்டின் உச்சத்திற்கு சென்று பலவீனப்பட்டு இருந்த போது இலங்கை அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கையால் அழிந்தே போயினர்.
இதன் பிற்பாடுதான் தமிழ் நாட்டிற்குள் இணையங்களிலும் எனை ஈழத்து பரப்பிலும் புலிகள் பற்றி பகுத்தாய்வுகள் அதிகம் ஆரம்பிக்கப்பட்டு அவர்களின் உண்மை முகம் பொதுவெளியில் அறியப்படும் செயற்பாடுகள் நடைபெற்றுவருகின்றது ஒரு ஆரோக்கியமான நிலமைதான்
மாற்றுக் கருத்தாளர்களை தமது வதை முகாங்களில் நூற்றுக் கணக்காக அல்ல ஆயிரக் கணக்காக அடைத்து தினம் தினம் கொன்று குவித்த துணுக்காய் முகாம் செயற்பாடுகளும் இதன் பின்னராக தமிழ் பிரதேசம் எங்கும் அவர்களால் பாரமரிக்கப்பட்ட வதை முகாங்களும் தற்போது மெதுமெதுவாக பொதுத் தளத்தில் பேசு விடங்களாக… எழுத்துக்களாக…. விவாதப் பொருளாக…. எழுந்துவருகின்றன.
இதன் மூலம் புலிகளின் உண்மை முகம் அதனை தீவிரமாக நிபந்தனை இன்றி தமது முன்னுதாரணமாக தமது தலமையாக கொண்ட ‘சீமான்’ களின் முகத் திரைகளும் கிழிந்து வருகின்றன.
2009 இறுதி யுத்தத்திற்கு முன்பு இலங்கை அரசால் இராணுவத்தினால் கொல்லப்பட்ட தமிழ் மக்களை விட அதிகமான எண்ணிக்கையான தமிழ் மக்களை மாற்றுக் கருத்தாளர்கள்…. கேள்வி கேட்டார்கள் விமர்சித்தார்கள் என்ற அடிப்படையில் புலிகள் கொன்று குவித்தனர் என்பதை 2009 இற்கு முன்னர் பலரும் பார்க்கத் தவறிவிட்டனர்.
பல் வேறு பொது தள விவாதங்களும் கட்டுரைகளும் கருத்துப் பறிமாற்ங்களும் இவற்றின் உண்மை தன்மையை தற்போது வெளிகொணர்வது ஒரு ஆரோக்கியமான விடயம். ஈழவிடுதலைப் போராட்டத்தில் தாம் மட்டுமே பங்காளிகள் தாங்கள் புனிதமானவர்கள் என்ற விம்மபத்தை உடைத்தெறியும் வரலாறு விடுதலை செய்யும் என் பிடல் காஸ்ரோவின் வாசகங்களை நிரூபிக்கும் வகையிலான செயற்பாடுகள் ஒரு சரியான தலமையை தமிழ் பேசும் மகள் மத்தியில் உருவாக்க உதவும் என்று நம்புவோம்.
இதில் மிகத் தீவிரமாக ஆயவுகளை மேற்கொள்ளும் தமிழ் நாட்டு உறவுகளை நாம் பாராட்ட வேண்டும் வரவேற்க வேண்டும்
உண்மையில் ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான புலிகள் போராடினார்கள் என்பதை விட ஈழத் தமிழர்களை ஒரு பலவீனமான நிலையில் கொண்டுவந்த பள்ளத்தில் தள்ளிவிட்டு தாமும் அழிந்து போனர் என்பதே உண்மை. இதற்காக தவறான செயற்பாடுகளுக்கு அவர்களே பொறுப்பும் கூற வேண்டும்.
இன் அவர்களின் இந்த பாசிச எச்சங்கள் அங்காங்கே ஈழத்திலும் தமிழகத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் மீள் எழ உத்தரிக்கும் செயற்பாடுகளை தமிழ் மக்கள்…. மனித குலத்தின் நன்மை கருதி நாம் தடுத்து நிறுதியாக வேண்டும்.
(நவம்பர் 02, 2021)