ஈ.பி.ஆர்.எல்.எவ் – புளொட் கட்சிகளுடன் த.தே.ம. முன்னணி இணையத் தயார்!

(இதைவிட சைக்கிள் ஓட்ட இவருக்கும், இவர் அப்பாவிற்கும், என் இவரின் தாத்தாவின் இறுதி கால வாழ்விற்கும் வேறு வழி இருக்கவிலலை எல்லாம் தமது சொந்த வாழ்விற்காகதான், இவரை அரவணைத்து இவரின் பரம்பரை செய்து பாவங்களை யாரும் சுமக்காதீர்கள்  – சாகரன்)

செய்தி:

தாயகம், தேசியம், சுயநிர்ண யம், வடக்கு-கிழக்கு இணைப்பு இவற்றை யார் ஏற்றுக்கொண்டு தமிழ் மக்களின் நலன்களுக்காக செயற்பட முன்வருகின்றார்களோ, அவர்களு டன் இணைந்து செயற்பட தயார் என தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் ஆகிய கட்சிகளும் இந்த கொள்கையை ஏற்றுக்கொண்டால் அவர்களுடனும் இணைந்து செயற்பட தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்ந்தும் இந்த கொள்கையோடு இருந்தால் அவரையே மாற்று தலைமையாக ஏற்றுக்கொள்ளவும் நாம் தயாராக இருப்பதாகவும் தலைமைகள் விடுகின்ற தவறுகளை கூட்டமைப்புக்குள் இருந்துகொண்டே சுட்டிகாட்டியவர்தான் விக் னேஸ்வரன். அதில் மாற்றுக்கருத்து இல்லை எனவும் கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.

கந்தர்மடத்தில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று நடைபெற் றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்ற வகையில் அங்கு சென்று மோசடி செய்து இனத்தை விற்றுக் கொண்டு இருக்கும் நிலையில், அதனை மாற்றுவதற்கு களத்தில் முடிவுகளை எடுத்து வருகின்றோம். கடந்த வருடம் ஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரம் கையொப்பங்களை நாங்கள் திரட்டியிருந்தோம்,
அதற்கு அடுத்த கட்டமாக தமிழ் மக்களின் பேராதரவுடன் எழுகதமிழை நடத்தியிருந்தோம்.

ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களுடைய பெயரை பயன்படுத்தி இந்த துரோகங்களை செய்பவர்களுக்கு மக்கள் வழங்கிய ஆணையை மீள பெற்று மக்கள் தங்கள் கருத்தாக முன் வைக்க கூடிய வாய்ப்பை ஏற்படுத்த வேண் டும். இல்லாவிட்டால் எங்களை அவர்கள் தொடர்ந்தும் விற்றுக் கொண்டுதான் இருப்பா ர்கள். இதன் அடிப்படையில்தான் அரசியல் கட்சியாக அல்லாமல் ஒரு சிவில் அமைப்பாக தமிழ் மக்கள் பேரவையும் செயற்பட்டு கொண்டுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமை தமிழ் மக்களுக்கு மோசமானவற்றை செய்து வருகின்றது என்பது அம்பலத்துக்கு கொண்டு வருவதற்கும், அந்த தலைமையிலிருந்து தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டிய தேவை ஒன்று உருவாகத்தான் சிவில் சமூகம் தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பை உருவாக் குகின்றது. அந்த அடிப்படையில் அரசியல் தீர்வு திட்டம் ஒன்றும் தயாரிக்கப்பட்டது. மக்கள் கொள்கையோடு உறுதியாக இருக்கின்றார்கள் என்பதனை வெளிக்காட்ட தான் எழுக தமிழ் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்குள் நின்று கொண்டு விமர்சிப்பது எந்த பிரயோசனமும் இல்லை. ஆகையால் தான் அதனை விட்டு வெளியேற வேண்டும் என கோருகின்றோம். சிலர் நினைக்கின்றனர் சம்பந்தனை இந்த அரசாங்கம் ஏமாற்றுகின்றது என்று, சம்பந்தனை இந்த அரசு ஏமாற்றவில்லை. தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவார்கள் என்று தெரிந்து கொண்டுதான் சம்பந்தன் செயற்படுகின்றார்.

கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளை அவர் சிலவேளை ஏமாற்றியிருக்கலாம், ஆனால் அரசாங்கம் சம்பந்தனை ஏமாற்றவில்லை. அவர் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் தான் நிற்கின்றார். சம்பந்தனுக்கு கீழ் உள்ள அரசியல் கட்சிகள் தமிழ் மக்கள் பேரவைக்குள் சரியான நிலைப்பாட்டை எடுக்கின்றனர். அப்படி என்றால் கூட்டமைப்புக்குள் தொடர்ந்தும் அவர்கள் இருக்க முடி யாது. அல்லது கூட்டமைப்பின் தலைமையை நிராகரிக்க வேண்டும்.

அந்த மாற்றத்தை கொண்டுவரவேண்டும். த.தே.கூட்டமைப்பின் பேரால் பலரும் சம்பந்தனையும், சும ந்திரனையுமே மட்டுமே சந்திக்கின்றனர். அந்த அதிகாரத்தை பங்காளிகட்சிகள் வழங்கி விட்டு இப்போது விமர்சிக்க முடியாது. இனத்தை விற்கும் அதிகாரத்தை இவர்கள் தான் சுவீகரித்துள்ளார்கள்.

இந்த மோசடியை கூட் டமைப்பில் உள்ள ஏனையோர் முன்பு தெரிந்து கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் இனியும் தெரியாது என கூற முடியாது. எனவே கொள் கை யில் இணைந்து செயற்பட முன்வந்தால் அவர் களுடன் நாம் இணைந்து செயற்பட தயார் எனவும் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.