கடந்த மே 1ம் திகதி கொழும்பு புறக்கோட்டையில் இடம்டபெற்ற சர்வதேச தொழிலானர் தின கூட்டத்தில் முன்னிலை சோசலிச கட்சியின் அமைப்பு செயலாளர் குமமர் குணரத்தினம் ஆற்றிய உரையின் சாரம்சம் இது. 131 வருடங்களுக்கு முன் உழைக்கும் மக்கள் 8 மணித்தியால வேலை நாள் கேட்டு போராடினார்கள். 131 வருடங்களுக்கு பின் இன்று 10,12 மணித்தியால வேலை செய்ய கேட்கின்றனர். இரண்டு மூன்று தொழில் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
ஒப்பந்த, மேன்பவர், சமயாசமய முறைமைகளில் சுரண்டல் அதிகரித்துள்ளது. 8 மணித்தியால வேலையினால் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாதுள்ளது. எடுக்கும் சம்பளம் போதுமானதாக இல்லை. பாடசாலைகளில் 2ம் 3ம் வகுப்புகளில் இருந்தே எதிர்கால உழைப்புக்கு தயாராக வேண்டியுள்ளது.
முதலாளித்துவம் தொழிலாளர்களின் தரத்தை கீழ் இறக்கியுள்ளது. எமது ஒருமித்த இலக்காகவிருப்பது எதிர்கால இலங்கையின் சோஷலிசத்தை கட்டியெழுப்புவதற்காக இந்த அனுபவங்களை ஒன்று சேர்ப்பதே.
தற்போது, வருடக்கணக்கில் மாணவர்கள் உட்பட பெரும்பாலான மக்கள் கல்வியை விற்பதற்கு எதிராக போராட்டம் செய்கின்றனர். திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிற்கு விற்பதற்கு எதிராக கனியவள எண்ணெய் சேவையாளர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். மைத்ரிபால முதலைக் கண்ணீர் வடித்து இலாபம் தேடுகிறார்.
அதிகாரத்திற்கு வந்த சகல அரசாங்கங்களும் ஒரே கொள்ளகையையே கடைப்பிடிக்கிறார்கள். வடமத்திய மாகாணத்தில் ஆயிரக்கணக்கில் சிறுநீரக நோயினால் இறந்து போகிறார்கள். பல்தேசிய கம்பெனிகளின் தேவைக்கு ஏற்ப விவசாயக்கொள்கைகளை தயார் செய்தமையினால்தான் அவ்வாறு நிகழ்ந்தது.
ஒரு அரசாங்கத்திற்கு பதிலாக இன்னொரு அரசாங்கம், ஒரு கட்சிக்குப் பதிலாக இன்னொரு கட்சியை ஆட்சிக்கு கொண்டு வருவது அரசியல் அல்ல. முதலாளித்துவத்தை அடியோடு தூக்கி எறிய வேண்டும். சிலர் நினைத்தனர் நல்ல மனதுள்ள தலைவர்களால் ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியும் என்று. ஆனால் ஜனநாயகம் பொருளாதாரத்தோடு பிணைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது அவ்வாறு நடக்கவில்லை. அது தொடர்பான உண்மை நிலையை வருடந்தோறும் நாம் கற்று வருகிறோம்.
சமூகத்தில் ஜனநாயகம் மீறப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதன் பின்னணியில் பொருளாதார நெருக்கடியொன்று இருந்தது. 1977 இலும் அப்படித்தான் நடந்தது. மக்களை துவம்சம் செய்தே அது கொண்டு வரப்பட்டது.
பொருளாதார நெருக்கடிகளுக்கு பதில் இல்லாத போது ஆட்சியாளர்கள் மக்கள் மீது அடக்குமுறையை பிரயோகிக்கின்றனர். தற்போது ஜனாதிபதி சொல்லுகிறார் மக்கள் வாழ்வு சீர்குலைந்துள்ளது அதனை தடுப்பதற்கு முறைமைகள் கொண்டு வரப்பட வேண்டும் என்று. அவ்வாறு சொல்லி பொன்சேகாவுக்கு புதிய பதவியொன்றை வழங்கப்போகிறார்கள். பொன்சேகாவின் லட்சணம் என்னவென்று எங்களுக்கு தெரியும். 87-89 போராட்ட காலத்தில் திருகோணமலையில் எமது சகோதரர்களை கொன்று குவித்தது எப்படி என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். வடக்கில் யுத்தம் நடந்த போது அவரின் ஜனநாயகத்தின் தன்மை என்னவென்று எங்களுக்கு தெரியும்.
உண்மையான ஜனநாயகத்தை கட்டியெழுப்ப முகமாற்றத்தினால் முடியாது. உண்மையான ஜனநாயகத்தை கட்டியெழுப்ப வேண்டுமென்றால் சோஷலிசத்தை கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு இடதுசாரிய இயக்கங்களை பலப்படுத்த வேண்டும். இடதுசாரிய இயக்கங்களை பலப்படுத்தப்பட்டால் மட்டுமே நிலையான வெற்றியை பெறமுடியும்.