தனிப்பட்ட துன்பங்களுக்கு மேலாகவும், பலவீனத்திற்கு மேலாகவும், தனிப்பட்ட ஏமாற்றங்களுக்கு மேலாகவும், எல்லாவிதமான முன்கோபம் மற்றும் கீழ்த்தரமான தன்மைகளுக்கு மேலாகவும் உங்களை உயர்த்தும் ஒரு சிறந்த சிந்தனை உங்களுக்கு முன்னால் இருந்தால் ஒழிய, அப்படியான சிந்தனை இல்லையென்றால் நீங்கள் விரக்தியிலும், இழிந்த நிலையிலும் அமைதியிழந்து புத்தி பேதலித்தும் உங்களை விலைகூறி விற்க வேண்டிவரும்.
தன்னை விலைகூறி விற்ற ஒரு மனிதர்தான் பிள்ளையான்.
பிள்ளையானை வள்ளுவர் இப்படிச் சொல்கின்றார்.
‘எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து.’-குறள் 1080:
கயவர், எதற்கு உரியவர், ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில் அதற்காக தம்மை பிறர்க்கு விலையாக விலைப்படுவதற்கு ஓடோடிப்போய் விற்றுவிடுவதற்குத் தயாரானவர்கள்.