கடந்த 30 வருடங்களில் துரோகிகளாக கொல்லப்பட்ட பல்லாயிரம் பேரை அவர்களின் உறவுகள் தான் பகிரங்கமாக நினைவுகூர முடிந்ததா. எங்காவது அவர்களுக்கு நினவுச் சின்னம் தான் அமைக்க முடிந்ததா. சொரணையற்றவர்கள் வெட்கமற்றாவர்கள் நாடக பாணியில் மனித உரிமை பேசுகிறார்களாம் மனித உரிமை. முள்ளி வாய்க்காலில் இருந்து ஜெனிவா வரை. உச்சுக்கொட்டி மாய்மாலக்கண்ணீர் வேறு. விடுதலையின் பேரில் துரோகிகள் நாமத்துடனும் விடுதலை வீரர்கள் நாமத்துடனும் கொல்லப்பட்டவர்களையும் அநியாயமாக அப்பாவிகளாக உயிரிழந்த கொல்லப்பட்ட அனைத்து தரப்புமக்களையும் எம்மால் தீங்கிளைக்கப்பட்ட சக சமூகங்களின் பேரிழப்புக்களையும் படுகொலை செய்யப்பட்ட எமது- மற்றும் அண்டை நாட்டு தலைவர்களையும் அனைத்து கல்வியாளர்கள் எழுத்தாளர்கள் ஒன்றாக நினைவுகூர முடியுமா. பாரதூரமான அழிச்சாட்டியங்கள் அட்டூழியங்கள் எமது சமூகத்தில் நிகழ்ந்திருக்கின்றன என்று எம்மால் ஒப்புக்கொள்ளத்தான் முடியுமா? ஒரு சுயவிசாரணையை நடத்த முடியுமா? நாம் மனந்திறக்காதவரை விமோசனம் இல்லை. இல்லவே இல்லை.
(Comrade Sugu)