உள்ளுராட்சி சபைகள் தேர்தல் 2018 தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம்

தேர்தலின் பின்னணியும் நாமும்

2018 பெப்ரவரி 10ஆம் திகதி இலங்கையின் அனைத்து உள்ளுராட்சி சபைகளுக்குமான தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி (TULF), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF), ஈழப் புரட்சி அமைப்பு (EROS), ஜனநாயக தமிழரசுக் கட்சி, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து உருவாக்கிய தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றது.

இந்தத் தேர்தலானது வழக்கமான உள்ளுராட்சி தேர்தல்களை விட மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இது உள்ளுராட்சி சபைகளை தெரிவு செய்வதற்கான தேர்தலாக இருந்தபோதும், தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கக்கூடிய தேசிய முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது.

இலங்கை அரசின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான இடைக்கால அறிக்கையை தமிழரசுக் கட்சியும் அதன் பங்காளிக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. எனவே இதனை ஏற்றுக்கொண்டவர்களுக்கு அளிக்கப்படுகின்ற ஒவ்வொரு வாக்கும் இடைக்கால அறிக்கைக்கு ஆதரவாக அளிக்கப்படும் வாக்குகளாக அரசினாலும் தமிழரசுக் கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளாலும் வியாக்கியானப்படுத்தப்பட்டு மாகாணசபை முறைமையையே இறுதித் தீர்வாகத் திணிக்கும் அபாயம் உள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பேசும் சமூகத்தின் ஆதரவுடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மைத்திரிபால சிறிசேன அவர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச அவர்களைத் தோற்கடித்து ஜனாதிபதியாக ஆட்சிபீடம் ஏறினார்.

1) நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது,
2) விகிதாசார தேர்தல் முறைமையை மாற்றி கலப்பு தேர்தல் முறைமை ஒன்றை உருவாக்குவது மற்றும்
3)தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது என்ற கோசங்களை முன்வைத்து தமிழ் வாக்குகளையும் பெற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் எந்தவொரு தேசியக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளாததால் வரலாற்றில் முதன் முறையாக எதிரும் புதிருமாக இருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து நல்லாட்சி என்ற பெயரில் புதிய அரசாங்கம் ஒன்றை உருவக்கினார்கள். இவர்களுக்கு ஆதரவாக முஸ்லிம் கட்சிகளும் மலையக தமிழ் கட்சிகள் சிலவும் இணைந்து ஆதரவு அளிப்பதுடன் அமைச்சரவையிலும் அங்கம் வகிக்கின்றன. வடக்கு-கிழக்கை தளமாகக் கொண்ட தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்தரப்பில் இருந்தாலும் ஆளுங்கட்சியின் பங்காளியாகவே செயற்பட்டு வருகின்றனர். ‘நாம் உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கம்’ என எதிர்க்கட்சித் தலைவரும் அடிக்கடி இவ்வாட்சியை சிலாகித்துப் பேசிவருவதை அனைவரும் அறிவர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இரண்டு வருடங்கள் செல்லுபடியாகக் கூடிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து அரசாங்கத்தை அமைத்தார். இதனை ஏற்றுக்கொள்ளாத மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஎதிரணியினர் ஐம்பதுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பிரிந்துசென்று எதிர்வரிசையில் அமர்ந்தனர். அவர்களுக்கு எதிர்கட்சித் தலைவர் கிடைக்குமாக இருந்தால் தமது ஆட்சிக்கு பாதகமான சூழல் ஏற்படும் எனக் கருதிய ஜனாதிபதி அவர்கள் திரு. சம்பந்தன் அவர்களை எதிர்க்கட்சித் தலைவராக்கினார். ஆளும் கட்சியின் ஜனாதிபதி ஒருவர் எதிர்க்கட்சித் தலைவரை நியமனம் செய்யும் கேலிக்கூத்தையும் இந்த ஆட்சி ஏற்படுத்திக் காட்டியது.
இரண்டு வருடத்திற்குள் தேசிய அரசாங்கத்திற்குள் பலத்த மோதல்கள் உருவாகி வருகின்றது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியை உடைத்து ஐக்கிய தேசியக் கட்சியைப் பலப்படுத்துவதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தந்திரத்துடன் செயற்பட்டு வருகின்றார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது பிரிந்து மைத்திரி குழுவாகவும் மகிந்த குழுவாகவும் செயற்படுவதால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை முழுமையாகத் தன்வசப்படுத்தி அதனைப் பலப்படுத்திக்கொள்ள மைத்திரிக்கு கால அவகாசம் தேவைப்பட்டது. இதன் காரணமாக கடந்த வருடம் நடைபெற வேண்டிய உள்@ராட்சி தேர்தல்கள் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டு வந்தது. பல்வேறுபட்ட அழுத்தங்கள் காரணமாக உள்@ராட்சி தேர்தலை நடாத்த வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. இதன் காரணமாகவே உள்@ராட்சி சபைகளுக்கான தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்தது.

வடக்கு கிழக்கில் இத்தேர்தலின் அரசியல் முக்கியத்துவம்
இது ஒருபுறமிருக்க, 2015ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வடக்கு-கிழக்கு இணைப்பு, தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை, பகிரப்பட்ட இறையாண்மை ஆகியவற்றின் அடிப்படையிலான அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்குவதற்கு தம்ழரசுக் கட்சியின் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் ஆணை கேட்டிருந்தது. மக்களும் அந்தக் கோரிக்கைகளை ஏற்று வடக்கு-கிழக்கில் பதினாறு நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்து தமது முழுமையான ஆதரவினையும் தெரிவித்தார்கள்.
இவற்றின் அடிப்படையிலான சம~;டி அரசியல் அமைப்பொன்றை உருவாக்குவதற்கான ஆணையைப் பெற்றவர்கள் அரசியல் தீர்வின் மிக அடிப்படைக் கோரிக்கைகளான இணைந்த வடக்கு-கிழக்கில் சுய நிர்ணய அடிப்படையில் சம~;டி ஆட்சி ஒன்றினை உருவாக்குவதற்கு மக்கள் அளித்த ஆணையைக் கைவிட்டு, ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பரவலாக்கல் என்பதையும், வடக்கு-கிழக்கு இணைக்கப்படமாட்டாது என்பதையும், வடக்கு-கிழக்கு உள்ளிட்ட இலங்கை முழுவதும் பௌத்த மதத்திற்கு முதலிடம் என்பதையும் ஏற்றுக்கொண்டதன் ஊடாக, சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். மக்கள் ஆணையைப் புறக்கணித்து சகல அடிப்படைக் கோரிக்கைகளையும் கைவிட்ட தமிழரசுக் கட்சியினர் ஏனைய கட்சிகளைப் பார்த்து இயலுமானால் வடக்கு-கிழக்கை இணைத்துக் காட்டுங்கள் பார்க்கலாம் என்று சவால் விடும் அளவிற்கு இவர்களின் கொள்கைப் பிடிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.
புதிய அரசியல் யாப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான திரு.சம்பந்தன் அவர்கள், உருவாக்கப்படுகின்ற புதிய அரசியல் யாப்பானது நாட்டின் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என்றும் அதனை ஒரு சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் வந்திருக்கின்ற இடைக்கால அறிக்கையானது தென்பகுதி மக்களை மகிழ்ச்சிப் படுத்தக்கூடிய வகையில் தமிழ் மக்களின் அனைத்து அடிப்படைக் கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. இதனை தமிழரசுக் கட்சியும், அதனுடன் இணைந்திருக்கும் தமிழீழ விடுதலை இயக்கமும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் ஏற்றுக்கொண்டதன் ஊடாக இந்த இடைக்கால அறிக்கையை தமிழ் மக்களும் ஏற்றுக்கொண்டதாக ஒரு மாயையை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்கள்.
நடைபெறவுள்ள உள்@ராட்சி சபைகளுக்கான தேர்தலில் வீட்டிற்கோ அல்லது ஆளும் கட்சிக்கோ அல்லது அவர்களின் முகவர்களுக்கோ வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் வெளிவந்துள்ள இடைக்கால அறிக்கையை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டதாக தவறான பிரச்சாரத்தினை அரசும் அதன் பங்காளிகளும் செய்வதற்கு நாம் வழிசமைத்துக் கொடுத்தவர்களாவோம்.

அவ்வாறான ஒரு நிலை உருவாகி எமது தலைகளில் நாமே மண்ணை அள்ளிக்கொட்டிக் கொள்ளாமல் தவறானதும் பொய்யானதுமான பிரச்சாரங்களை மேற்கொண்டுவரும் தமிழரசுக் கட்சியைத் தோற்கடிப்பது எம்மினத்தின் எதிர்காலத்தைக் காப்பாற்றுவதற்கான முக்கிய கடமையாகும்.

மாற்றுத்தலைமைக்கான எமது முயற்சி

இந்த நிலையில், தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ளவும் கிராமிய, மாகாண அபிவிருத்தியை வினைத்திறனுடன் முன்னெடுக்கவும் ஒரு மாற்று ஐக்கிய முன்னணியின் அவசியம் உணரப்பட்டது. அவ்வாறான ஒரு மாற்று அமைப்பின் அவசியம் கருதியே தமிழ் மக்கள் பேரவையும் உருவாக்கப்பட்டது. அந்தத் தமிழ் மக்கள் பேரவையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் அங்கம் வகித்ததுடன், தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பில் அங்கம் வகிப்பவர்களும் தமிழ் மக்கள் பேரவையை பலப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டோம். ஆயிரமாயிரம் மக்களைத் திரட்டி யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் எழுக தமிழ் என்ற பிரம்மாண்டமான பேரணியை நடத்தி தமிழ் மக்களின் கோரிக்கைகளையும் அபிலாசைகளையும் மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் வெளிப்படுத்திக் காட்டினோம்.
ஆனால், தமிழ் மக்கள் பேரவையானது ஒரு மக்கள் இயக்கமாகத் தன்னை மட்டுப்படுத்திகொண்ட காரணத்தினால் ஒரு மாற்று அரசியல் தலைமையாக உருவாக முடியவில்லை. இந்நிலையில் தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகித்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியானது ஒரு மாற்று அணியை உருவாக்கும் பொருட்டு நீண்டநாட்களாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் போன்றவற்றுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவந்த போதிலும் அந்த முயற்சிகள் கைகூடவில்லை. குறைந்தபட்சம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் (அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்) நேரடிப் போட்டிகளைத் தவிர்ப்பதற்கு நாம் மேற்கொண்ட முயற்சிகளும் பயனளிக்கவில்லை.
இந்நிலையில் குறைந்தபட்ச பொதுக்கொள்கையின் அடிப்படையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழர் விடுதலை கூட்டணி, ஜனநாயக தமிழரசுக் கட்சி, ஈழப் புரட்சி அமைப்பு, புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மற்றும் சமூக அமைப்புக்கள் பலவும் ஒன்றிணைத்து தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பை உருவக்கினோம். அதனுடைய பொதுச்சின்னமாக உதயசூரியன் சின்னத்தையும் எல்லோரும் ஏற்றுக்கொண்டனர். அதனை உத்தரவாதப் படுத்தும் வகையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.
வடக்கு-கிழக்கு என்பது தமிழர்களின் தாயகம், அது இணைந்த ஒரு மாகாணமாக உருவாக்கப்படவேண்டும். சுயநிர்ணய உரிமை என்பது தமிழ் மக்களின் அடிப்படை உரிமை. இவற்றின் அடிப்படையில் ஒரு சம~;டி அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற கொள்கையினை ஏற்றுக்கொண்ட சகல அமைப்புக்களும் இப்புதிய கூட்டமைப்பில் இணைந்துகொள்ளலாம்.

தேர்தலுக்குப் பின்னர் கொள்கையில் ஒன்றுபட்ட இத்தகைய அமைப்புக்களை இணைத்துக்கொண்டு தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தை தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு முன்னெடுக்கும். தமிழ் மக்களின் விடுதலைக்கு தமிழ் மக்கள் ஒன்றுபடுதல் என்பது மிக முக்கியமானது. ஆனால் ஐக்கியம் என்ற பெயரில் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை விலைபேசி விற்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதனால்தான் நாம் ஒரு மாற்று அணியை உருவாக்கியுள்ளோம்.
அவ்வாறான மாற்று அணியொன்றை பலப்படுத்த வேண்டியதும் அதனை வெல்ல வைக்க வேண்டியதும் தமிழ் மக்களின் கடமையாகும். தந்தை செல்வா, ஜிஜி பென்னம்பலம் மற்றும் அமிர்தலிங்கம் போன்றவர்கள் கட்சிளுக்கிடையில் ஐக்கியம் பேணப்படவேண்டும் என்று கருதி தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கினார்கள். அவர்களால் உருவாக்கப்பட்டு விடுதலைப் புலிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமான உதயசூரியன் சின்னத்திலேயே நாம் உள்@ராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றோம்.
கடந்த உள்@ராட்சி மன்றத் தேர்தல்களில் கரைச்சி, பச்சிலைப்பள்ளி மற்றும் பூனகரி பிரதேச சபைகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டபொழுது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கௌரவத்தைக் காப்பாற்றியதும் இந்த உதயசூரியன் சின்னம்தான் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

உள்@ராட்சியில் எமது வேலைத்திட்டங்கள்

உங்கள் வாக்குகளை உதயசூரியன் சின்னத்திற்கு அளித்து அனைத்து உள்@ராட்சி சபைகளிலும் எம்மை வெல்ல வைக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
எமது மக்களின் ஆணையுடன் நாம் உள்@ராட்சி சபைகளில் கீழ்க்கண்ட விடயங்களை நிறைவேற்றுவோம்.

1. மாகாண அரசு மற்றும் மத்திய அரசின் ஒத்துழைப்புடன் சகல கிராமிய வீதிகளையும் தார்ச்சாலைகளாக மாற்றும் வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

2. கிராமிய பொதுச்சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். குறிப்பாக சிறுவர்களின் போ~hக்கு தாய் சேய் நல மருத்துவ உதவிகள் என்பவற்றில் அக்கறை செலுத்தப்படும்.

3. டெங்கு, மலேரியா, போன்ற நோய்களை உருவாக்கக்கூடிய நுளம்புத் தொல்லையைக் கட்டுப்படுத்துவதற்கும் கழிவுநீர் வாய்க்கால்களை சுத்தமாகப் பேணுவதற்குமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

4. சகல மக்களுக்கும் சுத்தமான குடிநீர் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

5. சகல வீதிகளுக்கும் மின்குமிழ் பொருத்தப்பட்டு மக்களின் அச்சமற்ற நடமாட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படும்.

6. ஒவ்வொரு பிரதேச சபைகளிலும் சிறுவர் பூங்கா அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

7. வடக்கு-கிழக்கு மாகாணங்களை பொhலித்தீன் பாவனையற்ற பிரதேசங்களாக உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

8. கழிவகற்றும் பணிகள் நவீனமயப்படுத்தப்பட்டு உக்கும் குப்பைகள் பயிர்ச்செய்கைக்கான உரமாக மாற்றப்படுவதுடன் பிளாஸ்டிக் மற்றும் போத்தல்களை மீள் சுழற்சிக்குள்ளாக்கும் வகையில் அதற்கான தொழிற்சாலைகளை மாவட்ட ரீதியில் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

9. வெள்ளம் தங்காமல் வடிகால்கள் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

10. கால்நடைகளுக்கான நீரை சேமிக்கும் பொருட்டு சகல கேணிகளும் சிறுகுளங்களும் தூர்வாறப்பட்டு பராமரிக்கப்படும்.

11. எமது பிரதேசங்களில் காணப்படும் சுற்றுலா மையங்களை இனங்கண்டு அங்கு பொழுதுபோக்குப் பூங்காக்கள் அமைக்கப்படும்.

12. உள்நாட்டு வெளிநாட்டு தனவந்தர்களின் உதவியுடன் முதியோர் இல்லங்கள் உருவாக்கப்பட்டு முதியவர்களை கௌரவமான முறையில் பராமரிப்பதற்கான சூழல் ஏற்படுத்தப்படும்.

13. விளையாட்டுக் கழகங்கள் ஊடாக பாரம்பரிய விளையாட்டுக்களையும் விளையாட்டுத்துறையையும் ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

14. நூல்நிலையங்கள் மற்றும் வாசிகசாலைகளின் ஊடாக வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்து தமிழ் இலக்கியம் மற்றும் வரலாற்றுத்துறைகளில் மக்கள் நாட்டம் கொள்ளும்வகையில் அவற்றுக்கான போட்டிகளை நடாத்தி அவர்களை கௌரவிக்கும்.

15. ஒவ்வொரு கிராமத்தையும் இயற்கையுடன் கூடிய பசுமை கிராமங்களாக மாற்றுதல்.

16. ஒவ்வொரு பிரதேச சபையையும் தன்னிறைவு பெற்ற வினைதிறன் மிக்க சபைகளாக உருவாக்குதல்

17. லஞ்ச ஊழலற்ற பிரதேச சபைகளை உருவாக்குதல்

18. பொலிசாருடன் இணைந்து போதைப்பொருள் பாவனை, சட்டவிரோத மற்றும் சமூக விரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துதல்.

19. ஒவ்வொரு பிரதேசசபை உறுப்பினரும் தமது மக்களைச் சந்தித்து குறைகளை அறிந்து தீர்க்கும் பொருட்டு வீடுகளிலோ அல்லது வெளியிடங்களிலோ அலுவலகங்களை அமைத்து தமது கடமைகளைச் செய்வதற்கு ஊக்குவிக்கப்படுவர்.

மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் மக்களுக்கு சேவை செய்ய பின்னின்றாலோ அல்லது ஊழல் லஞ்சம் பெறுவதாக அறிந்தாலோ அவ்வுறுப்பினர்களின்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கடந்த காலத்தில் பல்வேறுபட்ட சபைகளிலும் ஊழல்கள் தலைவிரித்தாடியதுடன் ஈபிடிபி போன்ற கட்சிகளுடன் இணைந்து பல்வேறுபட்ட சபைகளின் நடவடிக்கைகள் முடக்கப்பட்ட சம்பவங்களையும் நாம் அறிவோம். இவற்றின்மீது தமிழரசுக் கட்சித் தலைமை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் ஒரு அசமந்தப் போக்கைக் கடைப்பிடித்திருந்தது. அவ்வாறான நிலைமைகள் ஏற்படாமல் மக்களுக்கு நேர்மையான சேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

உரிமைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திட
கொள்கை அடிப்படையிலான உண்மையான ஐக்கியத்தை உருவாக்கிட
நிலையானதும் நீடித்திருக்கக்கூடியதுமான அபிவிருத்தியை மேற்கொண்டிட
ஆதரிப்பீர்
உதயசூரியன்
தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு
(தமிழர் விடுதலை கூட்டணி)