இதனை அவர்கள் வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் இதுவே உண்மை நிலை.
இதற்கு மாறாக ஆட்சியைப் பொறுப்பேற்ற குறுகிய காலததில் மக்களின் நன் மதிப்புகளை தக்கவைத்தல் என்பதாகவும் தமது தேர்தல் உத்திகளை தேசிய மக்கள் சக்தி முன் வைத்திருக்கின்றது.
உண்மையில் மக்களுடன் நேரடியாக தொடர்பில் அதிகம் இருக்கக் கூடிய வகையிலான பொறுப்புகளை நிரப்புவதற்காகவே நிர்வாக அலகில் உள்ளுர் ஆட்சிச் சபைகள் உருவாக்கப்பட்டன.
இதுவும் ஒரு வகை அதிகாரப் பரவலாக்கம்தான்
ஒவ்வொரு பிரதேசத்திற்கும் வேறு வேறுவிதமான அடிப்படைப் பிரசனைகளை அன்றாட பிரச்சனைகள் உள்ளது.
இங்கு ஜனாதிபதித தேர்தல் போன்று அல்லது பாராளுமன்றத் தேர்தல் போன்று ஒரு பொதுவான தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்நிறுத்தி மக்களிடம் செல்வது சரியான தேர்தல் அரசியல் முறையல்ல.
அவ்வாறு யாரும் சென்றால் அவர்கள் உள்ளுர் ஆட்சி தேர்தல் பற்றி புரிதல் அற்றவர்கள் என்ற முடிவிற்குத்தான் நாம் வர வேண்டும்.
அதிலும் சிறப்பாக சிறுபான்மையின மக்களின் தேசியத்தை இன்றுவரை ஒரே தேர்தல் உத்தியாக கொண்டு செயற்படுபவர்களின் (உள்ளுர் ஆட்சித்)தேர்தல் விஞ்ஞாபனம் இது மாதிரியாக அதிகம் அமைந்திருப்பது நகைப்பிற்கு இடமானது.
அது போன்ற விடயங்களை பாராளுமன்ற அளவில் முன்வைத்து செயற்படுவதே அரசியலில் சரியான அணுக முறையாகும்
எனவே உள்ளுர் மக்களின் பிரச்சனையை உள்ளுர் ஆட்சியின் முறைமைககு உட்பட்டு தீர்வைப் பெறக் கூடிய பிரதேசப் பிரசனைகளை மையப்படுத்தி தேர்தலை சந்திப்பதே சரியானது ஆகும்.
அரசியல் கட்சிகளுக்கு அப்பால் அப் பிரதேசத்தினை மக்களை நன்கு அறிந்து அப்பிரதேசத்தின் அன்றாட பிரச்சனைகளை புரிந்து கொண்டவரை அதன்பால் உண்மையாக செயற்படுபவரை கட்சி வேறுபாட்டிற்கு அப்பால் உள்ளுர் ஆட்சித் சபை உறுப்பினராக தெரிவு செய்வதே சரியானது.
இதில் மக்கள் தெளிவான சிந்தனையுடன் செயற்பட்டாக வேண்டும்.
இந்த உளளுர ஆடசித் தேர்தல் காலத்தில் இரண்டு விடயம் எமது முக்கிய கவனத்தை பெற்றிருப்பதாக என்னால் உணரப்படுகின்றது.
முதலாவது ஆனையிறவு உப்பளத்தில் உப்பு உற்பத்தி அதுசார்ந்த சந்தைப்படுத்தல் என்பது சிறிய அளவில் என்றாலும் கடந்த 40 வருடத்திற்கு மேலாக இருந்ததற்கு அப்பால் தமிழ் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இதில் உற்பத்தியை அதிகரித்தல் இலாபத்தை அதிகரித்தல் என்பதை தற்போது அதிகம் பேசாவிட்டாலும் இதன் ஆரம்பம் நம்பிக்கை தருவதாகும்.
மற்றது ரின் இல் அடைக்கப்பட்ட மீன்களை ஏறறுமதி செய்தல் ஆகும்.

நாலு வளமும் கடல் சூழந்த இலங்கை அண்மைக் காலம் வரை ரின் மீனை இறக்குமதி செய்தல் என்றான நிலையில் இருந்து இந்த நிலையிற்கு வந்து ஆரம்பிக்கப்பட்டது சிறப்பானது.
இது போன்று அரிசியிலும் மிக விரைவில் உருவாக்கும் நிலை ஏற்பட வேண்டும்.
உள்ளுர் ஆட்சி சபைகள் எல்லாவற்றிற்கும் பொதுவான ஒரு பிரச்சனையாக என்னால் அடையாளப்படுத்தப்படும் சில விடயங்களை முன்வைக்கின்றேன்.
அப்பிரதேசங்களில் உற்பத்தி செய்யப்படும் விளை பொருட்கள் தேவையற்ற இடைதரகர்களால் உற்பத்தியாளர்கள், பயனாளர்கள் என்று இரு தரப்பும் வஞ்சிக்கப்படும் பொறி முறையிற்குள் முன் எப்போதையும் விட யுத்தம் முடிவுற்ற பின்பு வீழ்ந்துள்ளது தற்போது.
இதற்கான சுழிகளைப் போட்டவர்கள் சிறு குறு கடன் என்றாக பண விநியோகம் செய்த முன்னைய ஆட்சியாளர்கள்தான்.
இந்த இடைத்தரகர்கள் ஒரு வகையில் உள்ளுர் மாபியாக்களாக செயற்படுகின்றனர்.
இந்த தனியார் மாபியாக்கள் முழுவதுமாக சந்தைப்படுத்திலில் இருந்து அகற்றப்பட வேண்டும்.
உற்பத்திப் பொருட்களின் பெரிய அளவிலான கொள்வனவு விநியோகம் என்ற வகையில் கூட்டுறவுச் சங்களைகளை வினைத்திறனுள்ளவையாக்கி நிச்சயம் அவற்றை துரிமாக மீள் உருவாக்கம் செய்தாக வேண்டும்
அடுத்த உள்ளுர் கிராமியச் சந்தைகள் செயலூக்கத்துடன் செயற்படுத்தப்பட்டு சிறிய அளவில் மக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை அன்றாடம் விற்பனை செய்தல் தேவையானவற்றை வாங்குதல் என்றாக முற்றாக இடைத்தரகர் அற்ற உள்ளுர் ஆட்சிச் சபைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.
இதன் மூலம் உற்பத்தியாளர்கள் பயனாளர்கள் என்று இரு தரப்பும் அதிகம் பயன் அடைவார்கள்.
கூடவே இரு தரப்பு மச்சான் மாமன் சமூக உறவும் பலப்படும்.
அண்மையில் சாவகச்சேரியில் 3 கிலோ மீறறர் இடைவெளியில் ஒரு கிலோ இதரை வாழைப்பழம் 100 ரூபாய் இற்கும் அதே தினம் ஒரு மணி இடைவெளியில் இன்னொரு இடத்தில் 400 ரூபாயிற்கும் வாங்கிய அனுபவம் எனக்கு உண்டு. இது ஒரு சிறிய உதாரணம்தான்.
இந்த எற்றத்தாழ்வு ‘கொள்ளை’ அடித்தல் நிறுத்தப்பட வேண்டும்.
உள்ளுர் ஆட்சி சபைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் சிறு வீதிகள் குளங்கள் மக்களை இணைத்து (கவனிக்க மக்களை இணைத்து) சிரமதான அடிப்படையில் உள்ளுர் ஆட்சி உறுபினர்கள் இணைந்து செயற்படுத்தியாக வேண்டும்.
இவ்விரண்டையும் தற்போது கூறுகின்றோம் ஏனையவற்றை பின்பு பார்ப்போம்.
இறுதியாக தேர்தலில் பங்கு பற்றும் பெண் உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு பற்றி அமைச்சர் சரோஜா சாவித்திரி பால்ராஜ் அறிவிப்பும் அதற்கான “அவர்களுடைய பயணத்தை ஆதரிப்போம்” (Let’s Support Her Journey) என்ற அமைப்பும் மிகச்சரியானது. தேவையானது.
பொதுவாழ்வில் ஈடுபடும் பெண்கள் மிக மோசமான தூற்றல், அவமானப்படுத்தல், character assassination என்பதாக அண்மையில் அதிகம் நடைபெறுகின்றன.
இதனால் பெண்கள் அதிகம் பொதுவாழ்விற்குள் வருவதற்கு தமது உரிமைகளை முன்வைப்பதற்கு தயங்கும் நிலையில் இந்த செயற்பாடு வரவேற்கப்படுகின்றது இந்த உள்ளுர் ஆட்சித் தேர்தல் காலத்திலும்.
(Mar 30, 2025)