உள்ளுர் ஆட்சி சபைகளின் அதிகாரங்கள்

உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் ஒருவர் செய்ய முடியுமான செயற்பாடுகளுக்குள் பின்வருவன அமைகின்றன

01 .பொதுச் சுகாதாரம்.

02 .திண்மக் கழிவகற்றல்.

03. வீதிகளை அமைத்தலும் பராமரித்தலும்.

04. வடிகாலமைத்தல் மற்றும் பராமரித்தல்.

05 .வீதிகளுக்கு வெளிச்சம் தருதல்.

06. சிறுவர் பூங்காக்களை உருவாக்குதலும் பராமரித்தலும்.

07. விளையாட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.

08.இடுகாடுகள்,சுடுகாடுகளை அமைத்தலும் பராமரித்தலும்.

09. நூலக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.10. பொது மல சல கூடங்களை அமைத்தலும்,பராமரித்தலும்.

11. கிராமிய நீர் விநியோகம்.

12. பொது நீராடல் நிலையங்களை அமைத்தல்.

13. தீயணைப்பு சேவைகள்.14. தாய் சேய் நலப்பணி.

15. பிரதேசத்தை அழகுபடுத்தலும் சுத்தம் பேணலும்.

16. பொதுக் கட்டிடங்களை நிர்மாணித்தலும் பராமரித்தலும்.

17. தொற்று நோய் தடுத்தல்.

18. திடீர் அனர்த்தமுன்னாயத்தமும் செயற்பாடுகளும் .

19.அபிவிருத்திக் கருத்திட்டங்களை இனங்கண்டு நடைமுறைப்படுத்தல்.

20. கால்நடை பண்ணைகளை நடாத்துதல்.

21. வறியோருக்கு நிவாரணம் வழங்கல்.

ஆக மொத்தத்தில் ஒரு வீட்டினுடைய சிறந்த அத்திவாரம் போல அந்தந்த கிராமங்களுடைய நகரங்களுடைய சகல செயற்பாடுகளின் கருப்பொருட்களையும் தன்னகத்தே கொண்டது தான் உள்ளூராட்சி சபை தேர்தல்.

ஐனாதிபதி தேர்தலை விட பாராளுமன்ற தேர்தலை விட மிக முக்கியமான காப்பரணாக கொள்ள வேண்டியது உள்ளூராட்சி சபை தேர்தல் தான்.

யாரின் வசம் இந்த உள்ளூராட்சிசபை இருக்க வேண்டும் என தீர்மானிப்பவர்களும் அந்த அந்த வட்டாரம் , பிரதேச சபை சார்ந்த மக்களிடமே இருக்கின்றது. யாரின் வசம் இந்தச்செயல் திட்டங்கள் இருந்தால் கிராமமும் நகரமும் காக்கப்படும் என்ற விழிப்புணர்வு மக்களுக்கானதே.

இது அரசியலாளர்கள் மீதுள்ள அபிப்பிராயத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தும் தேர்தல் அல்ல. கொல்லைகளையும் எல்லைகளையும் தற்காத்துக்கொள்ளும் புத்திசாலித்தனமான தீர்மானம்.உள்ளூராட்சி சபை தேர்தலில் குறிப்பிடப்பட்ட விடயங்களில்உதாரணமாக #பொதுக்கட்டிடம்#அமைத்தல் என்ற வரையரைக்குள் கோவில்கள் சனசமுக நிலையங்கள் மடங்கள் போன்றவை அமைக்கும் செயற்பாடுகளும் உள்ளன.

எந்தக்கோவில் வரவேண்டும் எந்தக்கட்டிடம் அமைக்கப்பட வேண்டுமென்ற சக்தியை நாம் தெரிவு செய்யப்போகும் கட்சிகளே தீர்மானிக்கும்.

அவ்வாறு தீர்மானிப்போரை மக்களாகிய நாம் தான் தெரிவு செய்யப்போகிறோம். எது தேவை என்பதை சரியாக தீர்மானிக்காவிடில் அதன் விளைவுகளும் ஆபத்தானதே.நாம் தெரிவு செய்யும் கட்சி எது என்பதை சரியாக தீர்மானிக்காதுவிடில் அந்த பொறுப்பற்ற தனம் நில அபகரிப்புக்கு இலகுவான வழிமுறைகளை கொடுத்துவிடும்.

அந்த அளவுக்கு அரசியல் வங்குறோத்து அந்தந்த பிரதேச மக்களிடம் இல்லாமலில்லை. அதை சரியாக புரிந்து கொள்ளாதவர்களுக்கு கொடுக்கும் விழிப்புணர்வு மாத்திரமே. இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. ஏனையவற்றையும் ஒன்றோடு ஒன்று பொருத்தி விழிப்புணர்வை பெறுதல் அறிவுடைய பிரதேச மக்களின் சிறப்பாகும்.மீண்டும் நினைவூட்டுகிறேன்.

இது ஜனாதிபதி தேர்தலோ பாராளுமன்ற தேர்தலே அல்ல. உள்ளூராட்சி சபை தேர்தல் மட்டுமே.உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொருவரும் விளாசிவிடும் அளவுக்கு இந்தத்தேர்தல் நாடுபிடித்தல் தேர்தலும் அல்ல. ஆனால் மிக முக்கியமானது இருப்பதை பாதுகாத்தலும் வளப்படுத்தலும் ஆகும்.

அந்த இருப்பை யாரிடம் கொடுத்து பாதுகாக்கப்போகிறோம். அந்த இருப்பை யாரிடம் கொடுத்து அபிவிருத்திக்கு இட்டுச்செல்லப்போகிறோம். அந்த இருப்பு யார் கைவசம் இருப்பது ஏற்புடையது என்பதை புத்தியுள்ள மக்கள் தான் தீர்மானிப்பார்கள்.(Copy)

Leave a Reply