(Ruban Mariarajan)
ஊடகவியலாளர் ரிச்சார்ட் டீ சொய்சா கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தினம் 18 பெப்ரவரி 1990. ஜனாதிபதி பிரேமதாச ஆட்சியில் இச்சம்பவம் இடம்பெற்றது.தமிழரான தாயார் கொழும்பில் பிரபல மருத்துவர் மனோராணி சரவணமுத்து.தந்தையார் பெரும்பான்மை இனத்தவர். ராஜகிரி-வெலிக்கடவத்த இல்லத்தில் இரவு ஆயுதங்களுடன் வந்த சிலர்,எந்தவித கேள்வியுமின்றி பிடித்து இழுத்துச்சென்றனர்.வெளிநாட்டு ஊடகம் ஒன்றின் இலங்கை ஊடகவியலாளர் படுகொலை செய்யப்பட்டது இதுவே முதல் தடவை.